மேலும் அறிய

மார்ச்சில் மழை; ஏப்ரல் முதல் ஜூன் வரை கடுமையான வெயில்.. சட்டென்று மாறும் வானிலை

இந்நிலையில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை இயல்புக்கு அதிகமான அளவில் வெப்பம் நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை இயல்புக்கு அதிகமான அளவில் வெப்பம் நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

காலநிலை மாற்றத்தின் தாக்கம் தான் பருவம் தவறிய மழை. அதிகரிக்கும் புயல், சூறாவளிகள். அப்படித்தான் இந்தியாவிலும் பரவலாக மார்ச் மாதம் மழை பெய்து முடித்தது. ஏப்ரல் பிறந்துவிட்ட நிலையில் இந்தியா கோடைக்குள் நுழைந்துவிட்டது. இந்நிலையில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை இயல்புக்கு அதிகமான அளவில் வெப்பம் நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத் தலைவர் மிருதஞ்சய் மொஹபத்ரா இன்று வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இந்த கோடையில் அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியா முழுவதுமே பரவலாக வழக்காத்துக்கும் மாறாக அதிகளவில் வெப்பம் நிலவும் என்றார்.

மேலும் அவர் கூறியதாவது: ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியா முழுவதுமே பரவலாக வழக்காத்துக்கும் மாறாக அதிகளவில் வெப்பம் நிலவும். இந்த மூன்று மாதங்களில் மத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் அதிகளவில் வெப்ப அலைகள் பாதிப்பும் நிலவும்.

புவி வெப்பமயமாதலால் காலநிலை மாற்றம் மிகவும் மோசமாக அதன் தாக்கங்களை காட்டி வருகிறது. 2022ல் இந்திய துணைக் கண்டம் மோசமான வெப்ப அலைகளை சந்தித்தது. இதனால் கோதுமை பயிர்கள் பாதிப்பை சந்தித்து உலகளவில் கோதுமை விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டன.

இந்த ஆண்டும் எதிர்பாராமல் மார்ச் மாதம் அதிகப்படியான மழை பெய்துள்ளது. இதனால் கோதுமை, கடுகு, வெங்காய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் உணவு தானியங்கள் விலை உயரும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் பெய்த மழையளவு வழக்கத்தைவிட 26 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான வெப்ப நிலவரத்தை சமாளிக்க ஆயத்தங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. கோடையில் மின்சார தேவை பலமடங்கு அதிகரிக்கும் என்பதால் அது பற்றியும் அரசு பரிசீலித்து வருகிறது. மின் உற்பத்தி நிலையங்கள் தேவையான நிலக்கரியை கையிருப்பில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், ஒடிசார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப், ஹரியாணா மற்றும் சண்டிகர் மாநிலங்களில் இம்மாதம் (ஏப்ரல் மாதம்) வழக்கத்தை விட அதிகளவில் வெப்ப அலைகள் வீசக் கூடும். 2015ல் வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கை 2020ல் இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரித்தது. 2023ல் அது இன்னும் அதிகரிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MNM Kamal Haasan: ஒரு தமிழன் பிரதமராக முடியுமா.? ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கேள்வி..!
ஒரு தமிழன் பிரதமராக முடியுமா.? ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கேள்வி..!
TVK Vijay Maanadu: தவெக முதல் மாநாடு... அனுமதி வழங்குவதில் சிக்கல்... முட்டுக்கட்டை போடும் தீபாவளி
தவெக முதல் மாநாடு... அனுமதி வழங்குவதில் சிக்கல்... முட்டுக்கட்டை போடும் தீபாவளி
IND vs BAN: 515 ரன்கள் டார்கெட்! வங்கதேசத்தை வதைத்த ரிஷப்பண்ட், சுப்மன்கில் சதம் - எளிதில் வெல்லுமா இந்தியா?
IND vs BAN: 515 ரன்கள் டார்கெட்! வங்கதேசத்தை வதைத்த ரிஷப்பண்ட், சுப்மன்கில் சதம் - எளிதில் வெல்லுமா இந்தியா?
புது சகாப்தம்! முதன்முறையாக தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்!
புது சகாப்தம்! முதன்முறையாக தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul on laddu | லட்டில் பன்றி கொழுப்பா? கொதித்தெழுந்த  ராகுல்! ஜெகன், நாயுடுவுக்கு எச்சரிக்கை!SS Hyderabad Biryani News | ”கெட்டுப்போன சிக்கன்” SS ஹைதராபாத்-க்கு பூட்டு..சிகிச்சையில் 35 பேர்!Tirupati laddu | BEEF, PORK கொழுப்பு..திருப்பதி லட்டு NON-VEG!ஷாக்கில் பக்தர்கள்EPS vs SP Velumani | நான் அடிச்சா தாங்கமாட்ட.. அசராமல் அடிக்கும் எடப்பாடி! SP வேலுமணிக்கு WARNING..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MNM Kamal Haasan: ஒரு தமிழன் பிரதமராக முடியுமா.? ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கேள்வி..!
ஒரு தமிழன் பிரதமராக முடியுமா.? ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கேள்வி..!
TVK Vijay Maanadu: தவெக முதல் மாநாடு... அனுமதி வழங்குவதில் சிக்கல்... முட்டுக்கட்டை போடும் தீபாவளி
தவெக முதல் மாநாடு... அனுமதி வழங்குவதில் சிக்கல்... முட்டுக்கட்டை போடும் தீபாவளி
IND vs BAN: 515 ரன்கள் டார்கெட்! வங்கதேசத்தை வதைத்த ரிஷப்பண்ட், சுப்மன்கில் சதம் - எளிதில் வெல்லுமா இந்தியா?
IND vs BAN: 515 ரன்கள் டார்கெட்! வங்கதேசத்தை வதைத்த ரிஷப்பண்ட், சுப்மன்கில் சதம் - எளிதில் வெல்லுமா இந்தியா?
புது சகாப்தம்! முதன்முறையாக தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்!
புது சகாப்தம்! முதன்முறையாக தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்!
பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதா? அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு விளக்கம்
பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதா? அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு விளக்கம்
Breaking News LIVE:  இலங்கை அதிபர் தேர்தல்: இதுவரை 35 குற்றச்சம்பவங்கள்- தேர்தல் ஆணையம்
Breaking News LIVE: இலங்கை அதிபர் தேர்தல்: இதுவரை 35 குற்றச்சம்பவங்கள்- தேர்தல் ஆணையம்
TN RAIN: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை: மக்களே கவனமா இருங்க.!
TN RAIN: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை: மக்களே கவனமா இருங்க.!
Rishabh Pant:  ரிஷப்பண்ட் மிரட்டல் கம்பேக்! விபத்திற்கு பிறகு விளையாடிய முதல் டெஸ்டிலே சதம்!
Rishabh Pant: ரிஷப்பண்ட் மிரட்டல் கம்பேக்! விபத்திற்கு பிறகு விளையாடிய முதல் டெஸ்டிலே சதம்!
Embed widget