Ideas of India Summit: நாளை தொடங்கும் ABP நெட்வொர்க்கின் "ஐடியாஸ் ஆஃப் இந்தியா" உச்சி மாநாடு .. உச்சக்கட்ட எதிர்பார்ப்பு..
ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023 உச்சி மாநாடு நாளை தொடங்கவுள்ள நிலையில் (பிப்ரவரி 24) பெரும் எதிர்பார்ப்பு ஏற்பாடுள்ளது.
ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023 உச்சி மாநாடு நாளை தொடங்கவுள்ள நிலையில் (பிப்ரவரி 24) பெரும் எதிர்பார்ப்பு ஏற்பாடுள்ளது.
2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் "புது இந்தியா: உள்நோக்கிப் பார்ப்பது, அடைவது" என்ற தலைப்பில் சமூகத்தில் முத்திரைப் பதித்த தொழில் அதிபர்கள், கலை, எழுத்துத்துறைகளின் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் தங்களின் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ள உள்ளனர்.
ஐடியாஸ் ஆஃப் இந்தியா:
இந்தியாவில் பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கும் இந்த நேரத்தில் நடைபெறும் ஏபிபி நெட்வொர்க்கின் "ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023 மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மும்பையில் பிப்ரவரி 24-25 தேதிகளில் நடைபெறும் மாநாட்டில், உலக அளவில் பெரும் கவனத்தை ஏற்பட்டுள்ள சமூக - அரசியல் நிகழ்வுகள் நடைபெறுகிறது. இந்த ஆண்டு உச்சிமாநாட்டில், 'புது இந்தியா: உள்நோக்கிப் பார்ப்பது, அடைவது' என்பது கருப்பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
ஏபிபி ஊடக குழுமத்தின் இந்த மாநாட்டில் இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முத்திரைப்பதித்த, தொழில்துறையைச் சேர்ந்த சாதனையாளர்கள், இளம் படைப்பாளர்கள், கலை மற்றும் எழுத்துத்துறையின் வெற்றியாளர்கள், பாராட்டப்பட்டவர்கள், அறிவுகூர், அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள் என பல்துறை ஜாம்பவான்கள் பங்கேற்பதோடு மட்டுமல்லாமல் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.
புதிய சிந்தனைகள்:
நாம் அனைவருமே பல்வேறு காரணிகளால் உலக அளவில் பல்வேறு குழப்பங்களும் நிறைகுறைகளும் நிலவி, பெரும் சவால்கள் நிறைந்த ஒரு காலக் கட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அடுத்தக்கட்ட வாழ்வியல் தளத்தை உருவாக்கும் வகையில் அறிவியலும் தொழில்நுட்பமும் பல கட்டமைப்புகளை உலகில் உருவாக்கி வருகிறது. இதில் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. இப்படியொரு சூழ்நிலையில் நடைபெறும் இந்த மாநாட்டில், பல புதிய யோசனைகள், நம்மை அடுத்த தளத்திற்கு எடுத்துச்செல்லும் என்று உறுதியாக நம்பலாம்.
மேலும் உலகின் ஒரு பக்கத்தில் உக்ரைன் மீதான படையெடுப்பு ஓராண்டு காலத்தை நெருங்கியுள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடுமையான எதிர்ப்பையும், மிகச்சிறிய ஆதாயங்களையும் எதிர்கொண்ட போதிலும், போரில் இருந்து பின்வாங்குவதற்கான அறிகுறிகளைக் காட்டாமலே இருக்கிறார். மறுபக்கம் சீனாவை எடுத்துக்கொண்டால் இரும்புக்கரம் கொண்டு கோவிட் -19 தொற்றுநோயை ஒடுக்கும் வழிமுறைகளில் ஏற்பட்ட பக்கவிளைவுகளை எதிர்த்து அங்கு போராட்டங்களும் வெடிக்கத் தொடங்கிவிட்டது.
முக்கிய விவகாரங்கள்:
நாட்டின் ஹிஜாப் சட்டத்தை மீறிய 22 வயதான பெண் மாசா அமினியின் காவல் மரணத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள், குறிப்பாக பெண்கள் தெருக்களில் இறங்கியதை ஈரானின் வரலாறு கண்டுள்ளது. இதேபோல் வட அமெரிக்காவில் சமூக பழமைவாத சக்திகள் சேர்ந்து, தாராளவாத ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அச்சுறுத்துகின்றன.தெற்காசியாவோ பொருளாதார ஸ்திரமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சிகள் இவற்றை ஆய்வுக்கு உட்படுத்துகிறது. எல்லைகளைத் தாண்டி சுதந்திரத்துக்காக உயிரைப் பணயம் வைத்து நுழைவதற்கு வழியில்லாமல் காத்திருக்கும் அகதிகளின் பிரச்சனைகள் தொடர்கின்றன. வேலைவாய்ப்பு மற்றும் உயரும் செலவுகள் ஆகியவை வீடுகளில் முக்கியப் பிரச்சினைகளாக மாறிவிட்டன.
இந்தியாவை பொறுத்தமட்டில் 2024 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ளது. உலக வரலாற்றில் இத்தகைய தருணத்தில் இந்தியா எங்கே நிற்கிறது? என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஒன்பது மாநிலங்களுக்கான தேர்தல் எழுச்சி பெற்ற தென்னிந்தியா, புத்துயிர் பெற்ற எதிர்ப்பரசியல் மற்றும் முழுமையான புதிய தலைமுறை என இந்தியாவிற்காக, ஒரு பிஸியான டைம்லைன் காத்திருக்கிறது.
மத்திய அமைச்சர்கள், பிரபலங்கள் பங்கேற்பு:
தற்போது உலகளவில் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள இந்தியா, 2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக மாற இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கை அடைய, அரசானது உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து, 'மேக் இன் இந்தியாவை' நோக்கி, அதற்கான முயற்சிகளை துரிதப்படுத்தியுள்ளது. உள்நாட்டில் உலகளாவிய முதலீடு , உள்ளூர் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த முனைப்பாக உள்ளது.
வரும் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நடைபெறும் ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2-வது மாநாட்டில், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி மற்றும் அஷ்வனி வைஷ்ணவ், பிரபல இந்திய திரை நட்சத்திரங்கள் ஆஷா பரேக் , ஆயுஷ்மான் குரானா, பெருமைமிகு எழுத்தாளர்கள் அமிதவ் கோஷ், தேவ்தத் பட்டநாயக் உள்ளிட்ட பல்துறைகளில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் படைப்பாளர்கள் 'புது இந்தியாவை’ வலுவாகவும் சிறப்பாகவும் கட்டமைப்பது குறித்து தங்களது யோசனைகளை எங்கள் மூலம் உங்கள் முன் வைக்க இருக்கிறார்கள். எனவே, தொடர்ந்து, ஏபிபி குழுமங்களின் செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல்தளங்களில் இணைந்திருங்கள். புது இந்தியாவை உருவாக்குவதில் நாமும் பங்களிப்போம்.