8th Pay Commission: ஊதிய உயர்வு எவ்ளோ கிடைக்கும்? அரசு ஊழியர்களுக்கு கொட்டப்போகுது பண மழை!
Government Employees: தற்போது, மத்திய அரசு ஊழியர் மாதத்திற்கு சராசரியாக ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறார் (வரிக்கு முன்) என்றால், பட்ஜெட் ஒதுக்கீடுகளின் அடிப்படையில், அவருக்கு எவ்வளவு சம்பள உயர்வு கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

Government Employees Salary Hike: 8ஆவது ஊதிய குழு அமல்படுத்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மாதத்திற்கு ரூ. 19,000 வரை உயரும் என முதலீட்டு நிதி நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் கணித்துள்ளது. இந்த ஊதிய உயர்வால் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊதிய குழு என்றால் என்ன?
அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயிப்பதில் ஊதியக்குழு முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 1947ஆம் ஆண்டு முதல், மத்திய அரசு ஏழு ஊதியக்குழுக்களை அமைத்துள்ளது. அரசாங்க ஊழியர்களின் சம்பளம் மட்டும் இன்றி அவர்களுக்கான சலுகைகள் மற்றும் அலோவன்ஸ்களை தீர்மானிப்பதிலும் ஊதியக்குழு முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் இதன் பரிந்துரைகளைப் பின்பற்றியே, சம்பளம் வழங்கி வருகின்றன.
எவ்வளவு ஊதிய உயர்வு கிடைக்கும்?
தற்போது, மத்திய அரசு ஊழியர் மாதத்திற்கு சராசரியாக ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறார் (வரிக்கு முன்). பல்வேறு பட்ஜெட் ஒதுக்கீடுகளின் அடிப்படையில், அவருக்கு எவ்வளவு சம்பள உயர்வு கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
- பட்ஜெட்டில் ரூ.1.75 லட்சம் கோடி ஒதுக்கினால், அவரின் சம்பளம் மாதத்திற்கு ரூ.1,14,600 ஆக உயரக்கூடும்.
- பட்ஜெட்டில் ரூ. 2 லட்சம் கோடி ஒதுக்கினால், அவரின் சம்பளம் மாதத்திற்கு ரூ. 1,16,700 ஆக உயரக்கூடும்.
- பட்ஜெட்டில் ரூ. 2.25 லட்சம் கோடி ஒதுக்கினால், அவரின் சம்பளம் மாதத்திற்கு ரூ.1,18,800 ஆக உயரக்கூடும்.
எப்போதில் இருந்து ஊதிய உயர்வு கிடைக்கும்?
8ஆவது சம்பளக் குழுவை அமைப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், மத்திய அரசு, அடுத்த மாதத்தில் குழுவை அமைக்கலாம் என்றும், அதன் பரிந்துரைகள் 2026 அல்லது 2027 க்குள் நடைமுறைக்கு வரும் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர்.
கடைசியாக, 7வது ஊதியக்குழு, கடந்த 2014ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் 2016ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது.
8வது ஊதியக் குழுவின் முதன்மைப் பணியானது, தற்போதைய பொருளாதார சூழல் மற்றும் பணவீக்க விகிதங்களுக்கு ஏற்ப மத்திய அரசு ஊழியர்களின் (CGEs) ஊதியம், சலுகைகள் மற்றும் ஓய்வூதியங்களை ஆய்வு செய்து பரிந்துரைப்பதாகும்.

