Watch Video: தேசியக்கொடியுடன் மாரத்தானில் ஓடிய 80 வயது மூதாட்டி.. ஹார்ட்டீன்களைப் பறக்கவிடும் நெட்டிசன்கள்
டாடா மும்பை மாரத்தானில் உத்வேகத்துடன் கலந்துகொண்டு 4.2 கிலோமீட்டர் தூரத்தை 51 நிமிடங்களில் அசால்ட்டாகக் கடந்து முதாட்டி அசத்தியுள்ளார்.
இன்றைய நவீன உலகில் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து தரப்பினரும் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தில் கூர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர்.
நடைபயிற்சி, ஓட்டம் தொடங்கி யோகா, ஜூம்பா, மாரத்தான் என வகைவகையான உடற்பயிற்சிகள் அனைத்து வயதினரின் வாழ்விலும் ஒர் அங்கமாகி, அவை சார்ந்த வீடியோக்களும் இணையத்தில் ஹிட் அடித்து வருகின்றன.
அந்த வகையில் 80 வயது மூதாட்டி ஒருவர் முன்னதாக மாரத்தானில் கலந்துகொண்டு ஓடிய வீடியோ ஒன்று இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.
80 வயது மூதாட்டி, புடவை அணிந்து கொண்டும், ஷூ அணிந்துபடியும் கையில் தேசியக்கொடியை ஏந்தியவாறும் மாரத்தானில் ஓடும் இந்த வீடியோ நெட்டிசன்களின் இதயங்களை வென்று லைக்ஸ் அள்ளி வருகிறது.
பாரதி எனும் இந்த மூதாட்டி, ஜனவரி 15ஆம் தேதி நடந்த டாடா மும்பை மாரத்தானில் உத்வேகத்துடன் கலந்துகொண்டு 4.2 கிலோமீட்டர் தூரத்தை 51 நிமிடங்களில் அசால்ட்டாகக் கடந்து அசத்தியுள்ளார்.
மேலும் மாரத்தான் ஓடி முடித்தவுடன் பிடிஐ நிறுவனத்திடம் பேசிய பாரதி, மக்கள் கூட்டம் குறைவாக இருக்கும் சாலையில் தான் தினம் அதிகாலை பயிற்சி மேற்கொள்வதாகவும், இந்தியாவைச் சேர்ந்த தான் தேசத்துக்காக ஓடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
ராக்கி பட பின்னணி இசையுடன் 80 வயது மூதாட்டி ஓடும் இந்த வீடியோ இணையவாசிகளை உள்ளங்களைக் கவர்ந்து லைக்ஸ் அள்ளி வைரலாகி வருகிறது.