UP Accident: வெடித்து சிதறிய பட்டாசு ஆலை! 7 பேர் உயிரிழந்த சோகம் - அதிர்ந்த உத்தர பிரதேசம்!
உத்தர பிரசேத மாநிலத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
UP Accident: உத்தர பிரசேத மாநிலத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பட்டாசு ஆலையின் வெடி விபத்து:
உத்தர பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டம் கோக்ராஜ் காவல் நிலையத்திற்குட்பட்ட மஹோவா கிராமத்தில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 20க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று நண்பகல் 12 மணியளவில் வெடி விபத்து ஏற்பட்டிருக்கிறது.
ஆலையில் இருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் சத்தம் கேட்டுள்ளதாக அக்கம் பக்கத்தினர் கூறினர். இதற்கிடையில், வெடி விபத்து குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர், 10 தீயணைப்பு வாகனஙகள், ஆம்புலன்ஸ் ஆகியவை வந்தன.
7 பேர் உயிரிழந்த சோகம்:
அங்கு வந்த மீட்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தின்போது 18 பேர் பணியில் இருந்த நிலையில், 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாராயண், ஷிவ்காந்த், அசோக் குமார், ஜெய்சந்திரா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், வெடி விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், "பட்டாசு ஆலையில் இருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் வெடி சத்தம் கேட்டுள்ளதாகவும், சிலர் பல மீட்டர் தொலைவில் தூக்கி எறியப்பட்டதகாவும்" தெரிவித்தனர்.
#WATCH | Kaushambi, UP: SP Brijesh Srivastava says, "There has been a fire in a firecracker factory in Bharwari. As per the information, there are four casualties and some people are injured. They have been sent to the hospital for treatment. The factory is far away from the… https://t.co/IrbME2hUkH pic.twitter.com/W1tTYNiXED
— ANI (@ANI) February 25, 2024
இதுகுறித்து மண்டல கூடுதல் காவல்துறை இயக்குநர் பிரயாக்ராஜ் கூறுகையில், "விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை ஷாகித் (35) என்பவருக்கு சொந்தமானது. பட்டாசு ஆலை சட்டப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
ஷாகித், சிவ நாராயன், ஷிவ்காந்த், அசோக் குமார், ஜெய்சந்திரா என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்த இருவரையும் அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்தின்போது 18 பேர் வேலையில் இருந்துள்ளனர். எந்த காரணத்திற்காக விபத்து ஏற்பட்டது என்று விசாரித்து வருகிறோம்" என்றார்.
மேலும் படிக்க
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் கைகோர்த்த அகிலேஷ் யாதவ் - உ.பி-யை அதிரவிட்ட யாத்திரை!