மேலும் அறிய
Advertisement
Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடந்தது என்ன? இன்றைய தினத்தின் காலை தலைப்புச் செய்திகள் இதுதான்!
காலைப்பொழுதின் தலைப்புச் செய்திகளை இந்த தொகுப்பில் அறியலாம்
தமிழ்நாடு:
- நடப்பண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று நடைபெறுகிறது: இதில் 800 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க முன்பதிவு செய்துள்ளனர்.
- தமிழகத்தில் நாளை முதல் பொங்கல் பரிசு விநியோகம்: டோக்கன் பெற்ற நபர்கள் ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ள ஏற்பாடு
- தமிழ்நாடு சட்டப்பேரவை நாளை கூடுகிறது: ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் ரவி உரையாற்றுகிறார்
- தமிழ்நாட்டிலுள்ள ரேஷன் கடைகளில் படிப்படியாக சிறுதானியங்கள் வழங்க நடவடிக்கை: தேங்காய் எண்ணெய் வழங்கவும் பரிசீலிக்கப்பட உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தகவல்
- சென்னையில் 20 ஆயிரம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட மாரத்தான் போட்டி : பெசண்ட் நகரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.
- 14 ஆயிரம் காலிப்பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: தொகுப்பூதியம் வழங்குவதற்காக ரூ.109.91 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவு
இந்தியா:
- உத்தராகண்டில் ஒரு நகரமே மண்ணில் புதைவதால் பரபரப்பு: விதிமீறல் கட்டடங்களால் வீடுகளை காலி செய்து வெளியேறும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள்
- இந்தியா மென்பொருள் தயாரிப்பு மையமாக மாற முயற்சிக்க வேண்டும் - குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வலியுறுத்தல்
- ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்ட கூட்டங்களில் பங்கேற்று 8 பேர் பலியான விவகாரம்: விசாரணை ஆணையம் அமைத்து மாநில அரசு உத்தரவு
- டெல்லியில் இரண்டு வருடங்களுக்கு முன்பாக பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரின் தாயை துப்பாக்கியால் சுட்ட 16 வயது சிறுமி: போலீசார் தீவிர விசாரணை
- கடும் குளிர் நிலவும் என்பதால் டெல்லிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை: இமச்சல், உத்தராகண்ட் மாநிலங்களை விட அதிக குளிர் நிலவும் என கணிப்பு
-
கேரளா, வயநாடு பகுதியில் சுற்றித்திரியும் பிஎம்2 மக்னா யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
அனுமதியின்றி இறைச்சி வியாபாரம் செய்ததாக உத்தரப் பிரதேச முன்னாள் அமைச்சர் யாகூப் குரேஷி கைது செய்யப்பட்டுள்ளார்.
உலகம்:
- போர் நிறுத்தத்தின் போது உக்ரைன் படைகள் தாக்குதல் - ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் குற்றச்சாட்டு
- அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக குடியரசு கட்சியின் கெவின் மெக்கார்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- மெக்சிகோவில் நடந்த ரயில் விபத்தில் ஒருவர் பலி, 22 பேர் காயம்
- பெருவில் காஸ்டிலோ ஆதரவாளர்கள் தொடர் போராட்டம்; தேசிய நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி
- உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 63.92 கோடியாக உயர்வு
விளையாட்டு:
- மூன்றாவது டி-20 போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி, 2-1 என தொடரை வென்றது இந்திய அணி,
- டி-20 போட்டிகளில் மூன்றாவது சதம் விளாசி இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் அசத்தல்
- இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக சேத்தன் ஷர்மா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீதரன் தேர்வு
- பத்தாவது ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான 26 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு. இதில் இலக்கியதாசன், சிவசுப்பிரமணியன், ஜெஸ்வின், அல்ட்ரின், பிரவீன் சித்திரவேல், ரோசி மீனா பால்ராஜ், பவித்ரா வெங்கடேஷ் ஆகிய 6 தமிழ்நாடு வீரர் - வீராங்கனைகள் இடம்பிடித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
ஆன்மிகம்
தஞ்சாவூர்
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion