மேலும் அறிய
7 AM Headlines: மிதந்த சென்னை மீண்டதா..? உலகத்தை சுற்றி நடந்தது என்ன..? இன்றைய தலைப்பு செய்திகள் இதோ!
7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- மழை பாதிப்பு காரணமாக 2 நாட்களாக ரத்து செய்யப்பட்ட புறநகர் ரயில் சேவை இன்று முதல் தொடக்கம் = தெற்கு ரயில்வே அறிவிப்பு
- மிக்ஜாம் புயலால் சென்னையில் 73 செ.மீ மழை கொட்டி தீர்த்தது; பாதித்த இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
- போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
- அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதிவு நீக்கம் எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
- பெரும்பாலான பகுதிகளுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டது, விரைவில் அனைத்தும் சீரடையும் - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
- மக்கள் படிப்படியாக சகஜநிலைக்கு திரும்புகிறார்கள், 2015ல் பெய்ததைவிட இரு மடங்கு கூடுதலாக மழை பெய்துள்ளது - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்
- மிக்ஜாம் புயல் வெள்ளம் அடையாறு வங்கக்கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதியில் மழைநீர் வடிவது குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு
- சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை புறநகர் ரயில்கள் நேற்று மதியம் 2 மணிக்கு முதல் இயங்கத் தொடங்கியதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.
- மிக்ஜாம் மழை பாதிப்பு காரணமாக பூங்கா இன்று இயங்காது என்று வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- திண்டுக்கலில் மருத்துவரை மிரட்டி ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்ற அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி
இந்தியா:
- 12ம் தேதி உருவாகும் அடுத்த காற்றழுத்தம், மேலும் ஒரு புயலை சந்திக்க தயாராகிறதா சென்னை, ஆந்திரா
- மிக்ஜாம் புயல் காரணமாக விசாகபட்டிணம் விமானநிலையத்தில் இருந்து செல்லும் 23 விமானங்கள் நேற்று (டிசம்பர் 5) ரத்து செய்யப்பட்டது.
- 54 இந்திய மருந்து நிறுவனங்களின் இருமல் மருந்து மாதிரிகள் ஏற்றுமதி தர சோதனையில் தோல்வியடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
- "வட மாநிலங்களை எல்லாம் பசு மூத்திர மாநிலங்கனுதான் சொல்வோம்" - திமுக எம்பி செந்தில் குமார் சர்ச்சை பேச்சு
- சத்தீஸ்கரில் பெரும் வெற்றியை பதிவு செய்திருந்தாலும், அடுத்த முதலமைச்சர் யார் என்பதை பாஜக தலைமை இன்னும் முடிவு செய்யவில்லை.
- தெலங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.
- மிக்ஜாம் புயலால் தமிழகத்தில் ஏற்பட்ட அழிவு மற்றும் உயிரிழப்புகள் பற்றிய செய்தியால் வேதனை அடைந்தேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உலகம்:
- இந்தியா மீது அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டு உலக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என இந்தியா தெரிவித்துள்ளது.
- பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானாவோ தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- போரை தொடர்ந்து ஹமாஸ் தலைவர்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
- காலநிலை உச்சி மாநாட்டில் கலந்துக்கொண்டு பேசிய சத்குரு மண் தான் நம்மை முழுமையாக ஒருங்கிணைக்கிறது என பேசியுள்ளார்.
விளையாட்டு:
- விஜய் ஹசாரே டிராபியில் ரயில்வே அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார்.
- 2023 உலகக் கோப்பையின் போது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக இருந்த அஜய் ஜடேஜா, அந்த அணியில் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
- சென்னை வெள்ள பாதிப்பு குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டேவிட் வார்னர் கவலை தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விளையாட்டு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion