மேலும் அறிய
Advertisement
Headlines: ஒரேநாளில் நிலநடுக்கம், கனமழை.. அடுத்தடுத்து நடந்தது என்ன? காலை தலைப்பு செய்திகள் இதோ!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
-
கனமழை காரணமாக சென்னை, சிவகங்கை, மயிலாடுதுறை, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம்; இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
- சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும்; ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம்
- 2006ல் ரூ. 159 கோடியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போட்டதால் இசிஆர் 6 வழிச்சாலை திட்டம் ரூ.1,100 கோடியாக எகிறியது
- கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ. 253.70 கோடி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
- ஆளுநர்களில் செயல்பாடுகளை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது - சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு
- காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு நவம்பர் 23 வரை 2600 கன அடி தண்ணீர் - கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவு
- தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் அலுவலகத்தில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
- அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான அருணை கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் என தகவல்
இந்தியா:
- நேபாளத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 3) இரவு ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 70 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்
- கடந்த 9 ஆண்டுகளில் உணவு பதப்படுத்தும் துறையில் ரூ. 50 ஆயிரம் கோடி முதலீடு - பிரதமர் மோடி பெருமிதம்
- பாஜகவின் தீவிரமாக ஆதரவாளராக உள்ள கங்கனா ரனாவத், சினிமா துறையை தொடர்ந்து அரசியலில் கால் பதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- தெலங்கானா தேர்தலில் திடீர் திருப்பமாக காங்கிரஸிற்கு ஆதரவளிப்பதாக, ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவரான ஒய்.எஸ். ஷர்மிளா அறிவித்துள்ளார்.
- சபரிமலை அய்யப்பன் கோயிலில் வருகின்ற 16-ந் தேதி நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
- ராஜஸ்தானில் எங்களுடைய அரசு மீண்டும் வரும் என்ற நம்பிக்கை உள்ளது என முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.
உலகம்:
- அமெரிக்காவின் ஆதரவு இருக்கும் வரை இஸ்ரேல் தனியாக இருக்காது என அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் பிளிங்கன் தெரிவித்துள்ளது.
- போலந்தின் நடவடிக்கைகள் 3-ம் உலக போரை ஏற்படுத்தும்: ரஷ்யா எச்சரிக்கை
- ஓர் ஆண்டில் அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த 97,000 இந்தியர்கள் கைது.
- பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 5 பேர் உயிரிழப்பு; 20 பேர் காயம்
விளையாட்டு:
- விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ள பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம், இந்தியாவில் ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள சப்யசாச்சி ஷெர்வானியை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியதன் மூலம், ஆப்கானிஸ்தான் அணி, 2025ம் ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு நேரடி தகுதி பெற்றுள்ளது.
- உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி, ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- உலகக் கோப்பை 2023ல் இன்று நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பெங்களூரிலும், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அகமதாபாத்திலும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion