மேலும் அறிய

7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் என்ன நடந்தது..? உலக நிகழ்வுகளை ஒரு நிமிடத்தில் அறிய.. 7 மணி செய்திகள்!

7 AM Headlines : கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு: 

  • நாளை இரவு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு புதிய கட்டுப்பாடுகள்: மெரினா, பெசண்ட் நகர் கடற்கரைக்கு செல்ல தடை
  • உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகளை வழங்கும் வகையில் திருச்சியில் அனைத்து வசதிகளுடன் ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்படும் - முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு
  • பொங்கல் பண்டிக்கைக்காக அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில் முன்பதிவு 7 நிமிடத்தில் முடிந்தது.
  • "அண்ணாமலை தலைமையில் பெண்கள் மீது அருவருப்பான தனிநபர் தாக்குதல்" - காயத்ரி ரகுராம் சரமாரி குற்றச்சாட்டு.
  • புதுக்கோட்டை மாவட்டம், இறையூரில் அனைத்து சமூகத்தினரும் கோயிலுக்குச் சென்று நிறைவாக வழிபாடு. மாவட்ட ஆட்சியர் கவிதா ராமன், அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்பு.
  • சம ஊதியம் கோரிப் போராடும் இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை நடத்திய பேச்சுவார்த்தை  தோல்வியில் முடிந்துள்ளது.
  • பல ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வூதிய அகவிலைப்படி தொகையை வழங்கக்கோரி வலியுறுத்தல் - சாலை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் கைது.
  • அனைத்து ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கக்கோரி வலியுறுத்தல் - தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் சார்பில் போராட்டம்.
  • புத்தாண்டை முன்னிட்டு நட்சத்திர விடுதிகளில் 80 விழுக்காடு நபர்களுக்கு மட்டுமே அனுமதி
  • ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு 39ஆவது நபர் பலியானதாகவும் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும்  பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 
  • தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல  கீழடுக்கு சுழற்சியின் காரணமாக வறண்ட வானிலையேஇருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியா :

  • பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் (100) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
  • இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்தால் உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழப்பு - விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
  • கேரளாவில் 56 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை: பல ஆவணங்கள், ஆயுதங்கள் சிக்கின
  • ஜார்கண்ட் நடிகை கொலை வழக்கில் கணவர் கைது
  • இந்தியவின் மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளை உடைய பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Defense Research and Development Organisation, டி. ஆர். டி. ஓ)  தெரிவித்துள்ளது.
  • கடந்த இரண்டு நாள்களாக வெளிநாட்டில் இருந்து இந்திய விமான நிலையங்களுக்கு வந்திறங்கிய 39 வெளிநாட்டவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • தனது வணிக சாம்ராஜ்யத்தின் வளர்ச்சியை எந்த ஒரு அரசியல் தலைவருடனும் இணைக்க முடியாது என உலகின் பெரும் பணக்காரர்களுள் ஒருவரான கௌதம் அதானி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

உலகம்:

  • சீனா உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் - ஜனவரி 1 முதல் அமல்
  • கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்ட 21 குழந்தைகளில் 18 பேர்  Marion Biotech Private Limited எனும் இந்திய நிறுவனம் தயாரித்த  Doc-1 Max syrup எடுத்துக் கொண்டதால் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • அமெரிக்காவில் பனிப்புயல் மற்றும் வரலாறு காணாத குளிர் நிலவி வரும் நிலையில், உலகின் மிகப்பெரும் நீர்வீழ்ச்சியான நயாகரா நீர்வீழ்ச்சி முற்றிலுமாக உறைந்து போனது.
  • ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேலைக்குச் செல்ல, சிறுமிகள் கல்வி பயிலவும் தலிபான் அரசு தடைவிதித்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் சில உதவித் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக ஐநா கூறியுள்ளது. 

விளையாட்டு:

  • எல்லா காலத்திலும் கால்பந்து வீரர்களில் சிறந்த வீரராகவும், மூன்று முறை ஃபிபா உலகக் கோப்பை வென்ற ஒரே வீரராகவும் அறியப்பட்ட பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே தனது 82 வயதில் காலமானார்.
  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஆண்டின் சிறந்தடி20 வீரராக தேர்வு செய்ய இந்திய அதிரடி பேஸ்ட்மேனான சூர்யகுமார் யாதவ் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவிற்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணியை தசுன் ஷனகா கேப்டனாக வழிநடத்த இருக்கிறார்.
  • இன்னிங்ஸ் மற்றும் 182 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா படுதோல்வி: தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷாNamakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
"ஐபிஎல் தொடங்கிடுச்சி.. இவர்களிடம் இருந்து கவனமா இருங்க" எச்சரிக்கும் DGGI
"இந்திய கலாச்சாரத்தின் பெருமை சமஸ்கிருதம்" பதஞ்சலி விழாவில் பாபா ராம்தேவ் புகழாரம்!
Embed widget