மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: உங்களை சுற்றி இதுவரை நடந்தவை என்ன?.. நிமிடத்தில் அறிய.. காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- ஆட்சியை விட ஜனநாயகத்துக்கே திமுக ஆதரவளிக்கிறது என திருமண நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- தமிழ் என்ற அடையாளத்தை தமிழ்நாடு இழந்து வருவதை நாம் தடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்
- புதுச்சேரியில் களைகட்டிய 69வது விடுதலை நாள் விழா - முதல்வர் ரங்கசாமி தேசிய கொடி ஏற்றி மரியாதை
- சென்னையில் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை ரூ. 101 உயர்ந்து ரூ. 1,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ. 1,898 ஆக இருந்த நிலையில் ரூ. 1,999 ஆக உயர்வு
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு
- சென்னையில் வாகனங்களுக்கான வேக வரம்பு நிர்ணயம் - நவம்பர் 4 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக சென்னை காவல்துறை அறிவிப்பு
- சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஒப்புதல் வழங்க மறுப்பு - ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மதுரை பல்கலை., பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க போவதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
- பாஜக எம்.எல்.ஏ.,வும், தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசனுக்கு கொரோனா தொற்று - தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி
- கண்காணிப்பு கேமராக்கள் மட்டும் பொருத்தினால் போதாது, அதன் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
- நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் மீது கஞ்சா போதையில் கொலை வெறி தாக்குதல் - 6 பேர் கொண்ட கும்பல் கைது
- வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
- நெருங்கும் தீபாவளி பண்டிகை - மதுரையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
இந்தியா:
- சட்டமன்ற தேர்தலில் எங்கள் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உறுதி
- டெல்லியில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு நவம்பர் 16 ஆம் தேதி முதல் சுற்றுலா ரயில் இயக்க ரயில்வே துறை முடிவு
- வங்கியில் ரூ.538 கோடி கடன் பெற்று மோசடி - ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் சொத்துக்கள் முடக்கம்
- டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு - டீசல் பஸ்களை இயக்க மாநில அரசு தடை
- இந்தியாவில் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.72 லட்சம் கோடியாக உள்ளது - மத்திய நிதி அமைச்சகம் தகவல்
- மணிப்பூர் வன்முறை எங்களுக்கு மிகப்பெரிய வலியை கொடுத்துள்ளது என பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேச்சு
- மும்பையில் மோசமடையும் காற்றின் தரம் - கிரிக்கெட் போட்டிகளின் போது வாணவேடிக்கை நிகழ்ச்சி ரத்து செய்யப்படும் என ஜெய்ஷா அறிவிப்பு
- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எஸ்.பி.ஐ., வங்கி கிளைகளை திறக்க இலங்கைக்கு பயணம்
உலகம்:
- காசா மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலில் உள்ள தூதரை திரும்ப பெறுவதாக ஜோர்டான் நாடு அறிவிப்பு
- ஹமாசால் பணய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள மக்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்தியது இஸ்ரேல்
- இந்தியா - வங்கதேசம் இடையேயான ரயில் சேவை - இருநாட்டு பிரதமர்களும் கொடியசைத்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்
விளையாட்டு:
- உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை 190 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி வெற்றி
- உலகக் கோப்பை தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதல்
- ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்
- உலகக் கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக இங்கிலாந்து வீரர் டேவிட் லில்லி அறிவிப்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
தொலைக்காட்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion