மேலும் அறிய

7 AM Headlines : காலை 7 மணி தலைப்புச்செய்திகள்.. உங்களைச் சுற்றி இதுவரை நடந்தது இதுதான்..!

7 AM Headlines : கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு: 

  • சீனாவிலிருந்து மதுரை வந்த தாய்-மகள் ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது

  • எந்த நிறுவனங்களிடமிருந்து மதுபானங்கள் வாங்கப்படுகின்றன? டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

  • பெங்களூரூவில் இருந்து சென்னை வழியாக அசாம் நோக்கிச் சென்ற ரயிலில், முன்பதிவு செய்யாமலும், பயணச்சீட்டு இல்லாமலும் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்த 1000க்கும் மேற்பட்ட வட இந்தியர்களை இறக்கிவிட்ட இரயில்வே காவல்துறையினர். 
  • நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளது. ஆனால் தமிழ்நாடு பாதுகாப்பான கைகளில் இல்லை. திமுக ஒரு குடும்ப கட்சி. திமுக என்பதற்கு வாரிசு அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து என்பதுதான் விளக்கம் என கோவை வந்த பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். 

  • ஆதார் போல் தமிழக அரசு  மக்கள் ஐடி கொண்டுவர திட்டமிட்டுள்ளது என தகவல். 
  • குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் டிச.30, 31 மற்றும் ஜனவரி 2, 3, 4 ஆகிய தேதிகளில் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர்கள் பெரியகருப்பன் மற்றும் சக்கரபாணி ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.
  • ஓ.பன்னீர்செல்வம், தினகரன் மற்றும் சசிகலா குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

  • பொதுத்துறை பணி நியமனங்களில் தமிழ்நாட்டினருக்கான வாய்ப்பை உறுதிசெய்ய பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். 

  • புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் கோயிலுக்குள் தங்களை அனுமதிப்பதில்லை என்ற புகாரை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பட்டியிலின மக்களை மாவட்ட ஆட்சியர் கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 2பேர் கைது. 

  • சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா திருவிழாவுக்கு இன்று கொடியேற்றம் நடைபெறவுள்ளது. 
  • தமிழ்நாட்டில் நாளை வரை  மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்தியா

  • பல்வேறு நாடுகளில் இருந்து சர்வதேச விமானங்களில் இந்தியா வந்த 39 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
  • புதுச்சேரியில் பொதுப் இடங்களில் முககவசம் அணிவது கட்டாயம் என புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. 
  • திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
  • 142 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை; பட்டாசு வெடித்து கொண்டாடிய தமிழக விவசாயிகள்
  • மைசூரூ அருகே பிரதமரின் சகோதரர் சென்ற கார் விபத்துக்குள்ளாகி பிரகலாத் மோடிக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. 
  • பெண்ணின் நிதி ஆதாரங்களை பறிப்பதும் குடும்ப வன்முறை மற்றும் பொருளாதாரா துஷ்பிரயோகம் தான், என கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

  • கடந்த சில மாதங்களாக ரயில்களில் அதிகரித்து வரும் பல்வேறு புகார்களின் அடிப்படையில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பல புதிய விதிமுறைகளை இந்திய ரயில்வே விதித்துள்ளது.

உலகம்:

  • அமெரிக்காவில் ‘பாம்’ புயலால் 60 பேர் உயிரிழப்பு.. பலர் உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. 

  • சீனாவில் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை இல்லை என சீனா அறிவித்துள்ளது. 

  • பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் 13 பேர் உயிரிழப்பு.. காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தீவிரம்

விளையாட்டு

  • பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் இரட்டைச் சதம் அடித்து அசத்தல்; சச்சினின் சாதனையை சமன் செய்து உலக சாதனை.
  • இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியை ஹர்திக் பாண்டயா வழிநடத்துவார் என அறிவிப்பு. சீனியர் ப்ளேயர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 
  •  
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget