மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் என்ன நடந்தது..? ஒரே நிமிடத்தில் அறிய.. காலை 7 மணி தலைப்புச் செய்திகள்!
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
- காவல் அதிகாரிகளை தாக்கினால் துப்பாக்கியால் சுட தயங்கக் கூடாது: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு
- பாஜகவில் அண்ணாமலை இணைந்த பிறகுதான் வீடியோ, ஆடியோ கலாசாரம் வந்து பல பெண்கள் பாதிக்கப்பட்டனர் - நடிகை ரகுராம் கதறல்
- ’நம்ம ஸ்கூல்’ ‘நம்ம ஊர் பள்ளித் திட்டத்தை கொச்சைப்படுத்துவதா? எடப்பாடிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்
- தமிழகத்துக்கு மூக்கு வழியே செலுத்தும் தடுப்பூசி வழங்க வேண்டும் - மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை
- எடப்பாடி அணியில் இருந்து சிவி சண்முகம் விலகுகிறாரா? கேபி முனுசாமி, ஜெயக்குமார் மீது கடும் திருப்தி
- தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
- திரு உத்தர கோசமங்கை கோயில் திருவிழாவை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் ஜனவரி 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- புதிய தொழில் நுட்பத்தை கடைபிடித்து செம்மை நெல் சாகுபடியில் மாநிலத்திலேயே அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.
- பொங்கல் பரிசுத்தொகுப்பிற்கு கரும்பை கொள்முதல் செய்யாதது விவசாயிகளுக்கு செய்த மிகப்பெரிய துரோகம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியா:
- ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை டெல்லியில் நுழைந்தது: கமல்ஹாசன் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
- மருத்துவம் தொடர்பான அனைத்து படிப்புகளும் தமிழில் இருக்க வேண்டும்: நிர்மலா சீதாராமன் பேச்சு
- அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்யுங்கள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
- மகாராஷ்டிராவில் சீரியல் நடிகை துனிஷா ஷர்மா (20) தொலைக்காட்சி தொடர் ஒன்றின் படப்பிடிப்பு தளத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- இரண்டு கொள்ளுப்பேரன்மார்கள் இணைந்து நடக்கும் யாத்திரை. இவர் நேருவின் கொள்ளுப்பேரன். நான் காந்தியின் கொள்ளுப்பேரன் என்று கமல் ஹாசன் பாரத் யாத்திரை பேசியுள்ளார்.
- கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க பள்ளிகளில் 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
உலகம்:
- சீன அரசாங்கத்தின் உயர்மட்ட சுகாதார ஆணையத்தின் மதிப்பீடுகளின்படி, ஒரே நாளில் சீனாவில் கிட்டத்தட்ட 3.7 கோடி பேர் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள்
- பாகிஸ்தானில் நாடாளுமன்றம் அருகே நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 3 பேர் பலியாகினர்.
- என்ஜிஓ நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய தடை விதிக்கப்படுவதாக தலிபான் அரசு அறிவித்துள்ளது.
- எலான் மஸ்க் உத்தரவால் டுவிட்டரில் தற்கொலை தடுப்புக்கான சிறப்பு ஹேஷ்டேக் சேவை நீக்கம்
- துபாயில் சாலை விபத்து ஏற்படுத்தியதற்காக இந்தியருக்கு ரூ.18 லட்சம் அபராதம் விதிப்பு
விளையாட்டு:
- ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது.
- பெண்கள் தேசிய குத்துச்சண்டை போட்டி: லோவ்லினா, நிகாத் அரையிறுதிக்கு முன்னேற்றம்
- பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய இடைக்கால தலைமை தேர்வராக முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்திய அணி 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது 4 விக்கெட் இழப்பிற்கு விளையாடி வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion