மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: அரசியல் முதல் விளையாட்டு வரை.. உங்களை சுற்றிய முக்கிய நிகழ்வுகள்.. 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ..!
7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு
- சென்னை மத்திய கைலாஷ் - இந்திரா நகர் ரயில் நிலையங்களுக்கு இடையில் கட்டப்பட்ட யு வடிவ மேம்பாலம் திறப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்
- நடிகை த்ரிஷாவை அநாகரீகமாக பேசிய வழக்கில் மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் மன்சூர் அலிகான் - வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள உள்ளதாக அறிவிப்பு
- உலகிலேயே அதிக பற்களை கொண்ட பெண் என்ற சாதனையைப் படைத்தார் தஞ்சையை சேர்ந்த கல்பனா - குவியும் பாராட்டு
- திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம் - மகா தீபம் தரிசனம் காண டிக்கெட்டுகள் இன்று முதல் விற்பனை
- உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல்
- தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி உடல்நலக்குறைவால் காலமானார்
- கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் மண் சரிவு - சுற்றுலாப்பயணிகள் நீலகிரிக்கு வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
- ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு புதிய விமான சேவை தொடக்கம் - பயணிகள் மகிழ்ச்சி
- தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு
- திருச்சி ப்ரணவ் நகைக்கடை பணமோசடி வழக்கில் ஆஜராக நடிகர் பிரகாஷ்ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதால் பரபரப்பு
- முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
- நவம்பர் 26 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
- சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பு தளத்தில் 20 ஆண்டுகளுக்குப் பின் எதேச்சையாக சந்தித்து கொண்ட நடிகர்கள் ரஜினிகாந்த் - கமல்ஹாசன்
- சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் தோள்பட்டையில் கேமரா விழுந்ததால் நடிகர் சூர்யா காயம்
இந்தியா
- உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் பின்னடைவு - இன்றைக்குள் மீட்கப்படுவார்கள் என அதிகாரிகள் நம்பிக்கை
- இணைய மோசடிகளை குறைக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
- ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது - நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளதால் பலத்த பாதுகாப்பு
- அதிவேக இணைய சேவைக்காக 23 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்
- பாவிகள் கலந்து கொண்டதால் தான் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடும் விமர்சனம்
- திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாதத்துக்கான டிக்கெட்டுகள் இன்று வெளியீடு
- பிரதமர் மோடி குறித்து சர்ச்சை பேச்சு - ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
- கிரிக்கெட் அகாடமி அமைப்பதாக பண மோசடி செய்ததாக புகார் - இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு
உலகம்
- சீனாவில் சுவாச பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் பீதி - மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுவதாக தகவல்
- ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்த லைவ் ஷோ நடத்திய ரஷ்ய நடிகை உக்ரைன் ராக்கெட் தாக்குதலில் உயிரிழப்பு
- ஏமன் நாட்டில் இருந்து ஏவப்பட்ட ஆளில்லா விமானங்கள் - செங்கடலில் வீழ்த்திய அமெரிக்க கடற்படை
- காஸா மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கள் கண்டிபிடிக்கப்பட்டது தொடர்பான வீடியோவை வெளியிட்டது இஸ்ரேல்
விளையாட்டு
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
- 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் அணியில் விளையாட மாட்டார் என சிஎஸ்கே நிர்வாகம் தகவல்
- தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி - தமிழக வீரர் வேலவன் செந்தில்குமார் சாம்பியன்
- ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறியதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் மார்லஸ் சாமுவேல்ஸ்க்கு 6 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதித்தது ஐசிசி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion