மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: நேற்று, இன்று என்ன நடக்கிறது..? நடந்தது..? தலைப்பு செய்திகளாய் உங்களுக்கு இதோ!
7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- அந்தமான் அருகே 26ம் தேதி காற்றழுத்தம் உருவாகும்; தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடையும்
- இந்திரா நகர் சந்திப்பு யூ வடிவ மேம்பாலம் இன்று திறப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
- தொடரும் கனமழை: திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, தேதி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- திருச்சியில் பிரபல ரவுடி காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
- சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் மேல் தளத்தில் உள்ள அறுவை சிகிச்சை அறையில் நேற்று காலை மின் கசிவு காரணமாக குளிர்சாதன பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது.
- அஇஅதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரும், செய்தி தொடர்பாளருமான, ஆர். எம். பாபு முருகவேல், சபாநாயகர் அப்பாவுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
- சென்னையில் குட்கா விற்பனைக்குத் துணைபோன 15 காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- பச்சை நிற பாக்கெட் பாலை ஊக்குவிப்பதற்கு பதிலாக ஊதா நிற பாக்கெட் பாலை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
- தமிழகத்தின் அகழ்வாராய்ச்சி பணிகள் தமிழர்களின் அடையாளமாக திகழும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
- அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் வரும் டிசம்பர் 4 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியா:
- உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியது; இன்னும் 12 மீட்டர் துளையிட்டால் மீட்பு பணிகள் முடிவுக்கு வரும்
- ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை சுட்டு 2 ராணுவ கேப்டன்கள் உள்பட 4 வீரர்கள் வீரமரணம்.
- ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை வெளியேற்றுவது அவசியம் - பிரதமர் மோடி வலியுறுத்தல்
- லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவை சிதைத்துவிட்டார்கள் - மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
- கூட்டு ராணுவப்பயிற்சியில் பங்கேற்க இந்தியக்குழு ஆஸ்திரேலியா புறப்பட்டது - பாதுகாப்பு அமைச்சகம் தகவல்.
- பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு அமைச்சரவையில் தீர்மானம்.
- கேரளாவில் பத்தினம்திட்டா மாவட்டம் முழுவதற்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விட்டுள்ளது.
- இஸ்ரேல் பயண கைதிகள் விடுவிப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு
உலகம்:
- வெள்ளிக்கிழமைக்கு முன் பணயக்கைதிகள் யாரும் விடுவிக்கப்பட மாட்டார்கள் - இஸ்ட்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தகவல்.
- அமெரிக்க - கனடா எல்லை சோதனைச் சாவடியில் வாகனம் வெடித்ததில் இருவர் உயிரிழப்பு.
- இஸ்ரேல் பணய கைதிகள் 50 பேருக்கு இணையாக 300 பாலஸ்தீனியர்களை விடுவிக்க முடிவு.
- எக்ஸ் வலைதளம் மூலம் கிடைக்கும் வருமானம் இஸ்ரேல், காசா மருத்துவமனைக்கு வழங்கப்படும் - எலான் மஸ்க்
- காசாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிப்பு - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
விளையாட்டு:
- இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
- சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஒதுங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- கேரள கிரிக்கெட் அணியின் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்.
- ஐபிஎல் 2024: கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் முன்னாள் இந்திய தொடக்க வீரர் கவுதம் கம்பீர்
- ஐசிசி ஒருநாள் தரவரிசை: பேட்ஸ்மேன் தரவரிசையில் சுப்மன் கில் தொடர்ந்து முதலிடம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
வணிகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion