மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: இவைதான் நடந்தது.. இன்று என்னவெல்லாம் நடக்க இருக்கிறது? உங்களுக்காக காலை தலைப்பு செய்திகள் இதோ!
7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- அதிகனமழை, வெள்ளம் எதிரொலி; தூத்துக்குடியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
- திருநெல்வேலியில் இன்று 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
- சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி, மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, 50 லட்சம் அபராதம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- பெருமழையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மக்களுக்கு ரூ.6,000 வெள்ள நிவாரணம் - குமரி, தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு ரூ. 1,000 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- பொன்முடி இலாகா -அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலான உயர்கல்வி துறை ஒதுக்கீடு - முதலமச்சர் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஒப்புதல்
- வைகுண்ட ஏகாதசி விழா - ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு
- எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 2,301 குடும்பங்களுக்கு தலா ரூ. 12,500 நிவாரணம் - தீர்ப்பாயத்தில் அரசு தரப்பு தகவல்
- நடிகை கௌதமியின் ரூ.25 கோடி சொத்து மோசடி விவகாரம்; கேரளாவில் பதுங்கி இருந்த பாஜக நிர்வாகி அழகப்பன், மனைவி உள்பட 5 பேர் கைது
- காய்ச்சல் பாதிப்பால் ஈவிகேஎஸ். இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி
- அடிக்கடி டெல்லி செல்லும் ஆளுநர் மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதியை தமிழ்நாட்டிற்கு பெற்று தர வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்.
- தமிழ்நாட்டில் கொரோனா தொற்று ஒற்றை இலக்கத்தில் இருந்து இரட்டை இலக்கமாக மாறியுள்ளது - அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை
- வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 39 குறைக்கப்பட்டுள்ளது. திடீரென விலை குறைந்ததை அடுத்து சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ. 1929.50க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியா:
- விதிமீறல் எதிரொலி; நாடாளுமன்ற பாதுகாப்பை சி.ஐ.எஸ்.எப்-பிடம் ஒப்படைக்க முடிவு - அதிகாரிகள் தகவல்
- பாஜகவின் விமர்சகர்களுக்கு தங்களின் கருத்துக்களை தெரிவிக்க உரிமை உண்டு - பிரதமர் மோடி
- கும்பல் வன்முறையில் ஈடுபட்டது நிரூபணமானால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கப்படும். - நாடாளுமன்றத்தில் நிறைவேறிய புதிய சட்டம்
- ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், மத்திய அரசு நீட்டித்துள்ளது.
- ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி அல்லது கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் தெரிவித்துள்ளார்.
உலகம்:
- செக் குடியரசு நாட்டில் பயங்கரம்: பள்ளியில் துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் உயிரிழப்பு
- இந்தியா உடனான கூட்டாண்மையை அமெரிக்கா ஆழப்படுத்தியுள்ளது - அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன்
- தமிழ் கட்சிகளுடன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்
விளையாட்டு:
- தென்னாப்பிரிக்கா இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி - 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை வென்றது இந்திய அணி
- இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் ஆதரவாளரான சஞ்சய் சிங் வெற்றி பெற்றார்.
- சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி - தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்
- ப்ரோ கபடி லீக் சீசன் 10: சென்னையில் இன்று பாட்னா பைரட்ஸ் அணியை எதிர்கொள்கிறது தமிழ் தலைவாஸ் அணி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion