மேலும் அறிய
7 AM Headlines: 2023-ஆம் ஆண்டின் கடைசி நாளில் நடந்தது என்ன? - காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ..!
7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- பொதுமக்கள் பயன்பாட்டுக்கு செயல்பட தொடங்கியது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - தென்மாவட்ட பேருந்துகள் அனைத்தும் இயக்கம்
- தமிழ்நாட்டில் களைகட்டிய ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் - ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி பொதுமக்கள் மகிழ்ச்சி
- 2024 ஆம் ஆண்டு பிறந்ததை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பொதுமக்களுக்கு வாழ்த்து
- கடற்கரை உள்ளிட்ட பொதுஇடங்களில் கூடி 2024 ஆம் ஆண்டை வரவேற்ற பொதுமக்கள் - ஆட்டம், பாட்டம் என உற்சாக கொண்டாட்டம்
- தமிழ்நாடு, புதுச்சேரியில் ஜனவரி 6 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- தமிழ்நாடு மக்களுக்கான பொங்கல் பரிசை உடனடியாக வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
- ராகுல்காந்தி ஒற்றுமை நடைபயணத்தின் மூலம் பாஜக ஆட்சி அகற்றப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து
- தமிழ்நாட்டில் புதிதாக 28 பேருக்கு கொரோனா பாதிப்பு - சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 175 ஆக உயர்வு
- புத்தாண்டு பிறப்பையொட்டி வழிபாட்டு தலங்களில் குவிந்த பொதுமக்கள் - சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதல்
- மேட்டுப்பாளையம் - நெல்லை இடையேயான வாராந்திர ரயில் சேவை ஜனவரி 29 ஆம் தேதி வரை நீட்டிப்பு
- தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரி சைலேஷ் குமார் யாதவுக்கு பதவி உயர்வு - வலுக்கும் கண்டனங்கள்
- சிறந்த தலைமையாசியருக்கு அண்ணா விருது - ஜனவரி 20 ஆம் தேதிக்குள் பரிந்துரை செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
- கோவில்களில் நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடக்கம்- பக்தர்கள் மகிழ்ச்சி
இந்தியா:
- சமூகத்துக்கு அநீதி இழைத்தவர்கள் இன்று நியாய யாத்திரை செல்ல தயாராகிறார்கள் - ராகுல்காந்தி விமர்சித்த ஜே.பி.நட்டா
- இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் செய்ததாக காஷ்மீரின் ஆயுத குழுவுக்கு மத்திய அரசு தடை
- பஞ்சாபில் கடும் பனிப்பொழிவு காரணமாக பள்ளிகள் திறக்கும் நேரம் இன்று முதல் மாற்றம்
- திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டோக்கன்கள் நாளை முதல் மீண்டும் விநியோகம்
- உத்தரகாண்டில் விரைவில் பொதுசிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி உறுதி
- அனைவரும் நேர்மையாக பணியாற்றினால் மட்டுமே இந்தியா வளர்ச்சியடையும் - உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேச்சு
- பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம்
உலகம்:
- 2024 ஆம் ஆண்டு மேலும் 3 ராணுவ உளவு செயற்கைக்கோள்களை அனுப்ப வடகொரியா முடிவு
- பேட்மேன் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் டாம் வில்கின்சன் மரணம்
- உலகம் முழுவதும் புத்தாண்டு பிறப்பு உற்சாக கொண்டாட்டம்
- ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 21 பேர் உயிரிழப்பு
- பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கான் தாக்கல் செய்த 2 வேட்பு மனுக்களும் ரத்து
விளையாட்டு:
- புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு புல்ஸ் வெற்றி
- புரோ கபடி லீக் தொடரில் தெலுங்கு டைட்டன்ஸ் - புனேரி பால்டன் அணிகள் இன்று மோதல்
- 2023 ஆம் ஆண்டில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion