மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை: கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது என்ன? - காலை 7 மணி தலைப்புச் செய்திகள்!
7 AM Headlines : கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு உற்சாக கொண்டாட்டம் - நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
- புத்தாண்டு கொண்டாட்டம் - சென்னை மெரினா கடற்கரையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மக்கள் கொண்டாட்டம்
- புத்தாண்டு கொண்டாட புதுச்சேரி கடற்கரையில் கூடிய பொதுமக்கள் - கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்
- புத்தாண்டை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் திருப்படி பூஜை - 365 படிக்கட்டுகளில் கற்பூரம் ஏற்றி வழிபாடு
- ஆதாருடன் மின் இணைப்பு எண்ணுக்கான கால அவகாசம் ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு - மேலும் கால நீட்டிப்பு செய்யப்படாது என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
- ஊதிய முரண்பாட்டை களையக்கோரி 6வதாக நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் - உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 175 ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதி
- மதுரை,திருவண்ணாமலை, ராமேஸ்வரம் கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடக்கம் - காணொளி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு தமிழக தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை ஏற்க மறுத்த அதிமுக அலுவலகம் - கடிதத்தை திருப்பி அனுப்பியது
- நாமக்கல் அருகே வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து 4 பேர் பலி - உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
- ரூ.1000 செலுத்தினால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை என கூறி பண மோசடி - நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் தனியார் டிரஸ்ட் மீது போலீசார் வழக்கு
இந்தியா :
- திருப்பதி ஏழுமலையான் கோயில் 6 மாதங்கள் மூடப்படும் என பரவிய தகவல் வதந்தி என அறிவிப்பு - தங்க கோபுரத்துக்கு பொன் முலாம் பூசப்பட்ட தகடுகள் பதிக்க பாலாலயம் செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவிப்பு
- நீங்கள் எவ்வளவு எதிர்க்கிறீர்களோ அவ்வளவு பயிற்சி செய்கிறேன் - பாஜக, ஆர்.எஸ்.எஸ் குறித்து ராகுல்காந்தி கருத்து
- உலகளாவிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நாடாக இந்தியாவை உலகம் பார்க்கிறது - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் பெருமிதம்
- புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது டெல்லியில் திடீர் நில அதிர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி
- கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு
- சபரிமலையில் புதிய விமான நிலையம் - நிலம் கையகப்படுத்த உத்தரவிட்ட கேரள அரசு
உலகம்:
- சிரியா எண்ணெய் வயல் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 12 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்
- உலக நாடுகளில் வாண வேடிக்கைகளுடன் உற்சாகமாக கொண்டாடப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டம் - வீதிகளில் ஆட்டம் பாட்டத்துடன் மக்கள் கொண்டாட்டம்
- வடகொரியா மீண்டும் 3 ஏவுகணை சோதனைகளை நடத்தியதாக தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் கண்டனம்
- சீனாவில் புதிய கொரோனா பரவல் எதிரொலி - அந்நாட்டின் அதிகாரிகளை அழைத்து உலக சுகாதார நிறுவனம் அவசர ஆலோசனை
- முன்னாள் போப் ஆண்டவர் 16 ஆம் பெனடிக் உடல்நலக்குறைவால் மரணம்
விளையாட்டு:
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து தென்னாப்ரிக்கா வீரர் டி புருய்ன் விலகல்
- நியூசிலாந்து அணியுடன் 2வது டெஸ்ட் போட்டி - இலவசமாக ரசிகர்கள் மைதானத்திற்கு வரலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் சம்மேளனம் அறிவிப்பு
- மான்செஸ்டர் யுனைடெட் உடனான ஒப்பந்தம் முடிவு - போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ.1,775 கோடிக்கு சவுதி அரேபியா அணிக்கு ஒப்பந்தம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion