மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: காலை வேளை சுடச்சுட தலைப்பு செய்திகள் தேவை? இதோ உங்களுக்காக..!
7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் யாருக்கெல்லாம் ரூ. 6,000 கிடைக்கும் - அரசாணை வெளியீடு
- அடுத்த மாதம் வருகிறது பொங்கல்; பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது.
- திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக ஆய்வு நடத்திய மத்திய ஆய்வு குழு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இன்று சந்திப்பு
- எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை - காவல்துறையினர் விசாரணை
- உற்பத்தியாளர்களிடம் ரூ. 38க்கு வாங்கப்படும் ஆவின் பால் கொள்முதல் லிட்டருக்கு 3 உயர்வு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
- எண்ணூர் முகத்துவாரத்திலிருந்து 30 கி.மீ கடந்து வந்த எண்ணெய் படலம் - கழிவுகள் 3 அடி ஆழம் வரை தேக்கம்
- ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேச முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயார் என தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
- தேமுதிக நிறுவனரான விஜயகாந்த் தலைமையில், இன்று அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
- வெள்ள சீரமைப்பிற்கு நாங்கள் அட்சய பாத்திரத்தில் பிச்சை கேட்பது போன்று கேட்கவில்லை - அமைச்சர் மனோதங்கராஜ் காட்டம்
- தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா:
- நாடாளுமன்றத்தில் அத்துமீறி நபர்கள் நுழைந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- 22 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் நடத்திய தினம் இன்று அனுசரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் நாடாளுமன்றத்தில் இரு இளைஞர்கள் அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தீவிரவாதிகள் பயன்படுத்தினால், அது ஆபத்தாகிவிடும் என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.
- கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- மத்திய பிரதேசத்தில் வழிபாட்டுத்தளங்களில் அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி ஒலிபெருக்கிகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மத்திய பிரதேசத்தில் உணவு பாதுகாப்பு விதிமுறைகளில்படி திறந்த வெளியில் முட்டை, மாமிசம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகம்:
- வங்கதேசத்தில் தடம் புரண்ட எக்ஸ்பிரஸ் ரயில் - ஒருவர் உயிரிழப்பு.
- பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய தகவல்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட சிபர் வழக்கு - இம்ரான்கான் மீது குற்றச்சாட்டுகள் பதிவு.
- இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழந்து வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
- பாகிஸ்தானில் உள்ள லாகூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்து வருவதாக தகவல்.
- காசாவில் 25 மருத்துவமனைகளை இஸ்ரேல் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விளையாட்டு:
- 3வது மற்றும் கடைசி டி20 போட்டி: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்.
- முதலாவது டெஸ்ட் - ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்.
- விஜய் ஹசாரே கோப்பை : தமிழ்நாடு அணிக்கு எதிரான அரையிறுதியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹரியானா அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
- ப்ரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி வெற்றி
- அர்ஜூனா விருதுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion