மேலும் அறிய
7 AM Headlines: இதுதான் நேற்று நடந்தது, இன்று நடக்கப்போவது! என்னன்னு தெரிய உள்ளே வந்து படிங்க!
7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய 3,449 தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.4,000 ஊக்கத்தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்த மத்தியக்குழு - மிக விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டுவந்ததாக தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு
- ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.4800 கோடி மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே. சுரேஷிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 7 மணி நேரம் விசாரணை
- பொன்னேரியில் இருந்து செல்போனில் தொடர்பு கொண்ட 80 நரிக்குறவர் குடும்பங்களுக்கு நிவாரண பொருள் - சென்னையில் இருந்து அனுப்பி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்
- சென்னையில் இன்று (டிசம்பர் 13ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- சென்னை திருவொற்றியூரில் உள்ள CPCL -இல் இருந்து கச்சா எண்ணெய் கழிவுகள் வெள்ள நீரில் கலந்துள்ளது - தமிழ்நாடு அரசு குற்றச்சாட்டு
- மதுரையில் அனைத்து மெடிக்கல் கடைகளிலும் இனி சி.சி.டி.வி. கட்டாயம் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
இந்தியா:
- டெல்லியில் கடந்தாண்டு நடந்த சாலை விபத்துகளில் மட்டும் 1,461 பேர் உயிரிழந்துள்ளனர். 2021ம் ஆண்டு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் இது அதிகம்
- மத்திய பிரதேச மாநிலத்திற்கு மோகன் யாதவை முதலமைச்சராக அறிவித்த பா.ஜ.க. தலைமையிடம், ராஜஸ்தானுக்கு பஜன்லால் சர்மாவை முதலமைச்சராக தேர்வு செய்துள்ளது.
- உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு வரலாறு தெரியாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
- அமேசானில் இருந்து ரூ. 19, 000 மதிப்புள்ள சோனி XB910N வயர்லெஸ் ஹெட்ஃபோன்களை ஆர்டர் செய்த யாஷ் ஓஜா என்ற நபர் கோல்கேட் டூத்பேஸ்டை பெற்றதால் அதிர்ச்சி.
- தெலங்கானா டிஜிபியின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- உலகின் இரண்டாவது மிகப்பெரிய பனிமலை பகுதியான சியாச்சில் முதல் பெண் மருத்துவ அதிகாரியாக கேப்டன் ஃபாத்திமா வாசிம் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சான்று சட்டம் ஆகிய வற்றின் பெயரை மாற்றம் செய்யும் முடிவை மத்திய அரசு திரும்ப பெற்றது.
உலகம்:
- காஸாவில் உடனடி போர்நிறுத்த தீர்மானத்திற்கு ஆதரவாக ஐ.நா. சபையில் வாக்களித்தது இந்தியா.
- சிங்கப்பூரில் அதிகளவில் கொரோனா பரவி வருவதால் அதிக எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.
- பாகிஸ்தான் ராணவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல் - 23 பேர் உயிரிழப்பு.
- லெபானில் இருந்து ஏவிய 6 ராக்கெட்டுகளை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவிப்பு.
- ஹமாஸ் அமைப்பை தோற்கடிக்க பல மாதங்களானாலும் போராட தயார் - இஸ்ரேல்.
- உலகம் முழுவதிலும் உள்ள மருத்துவ குழுக்கள் காசாவிற்கு விரைந்து வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் - ஹமாஸ் கோரிக்கை
விளையாட்டு:
- இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டி20 போட்டி : 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது தென்னாப்பிரிக்கா
- அண்டர் 19 ஆசியக் கோப்பை: 10 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது இந்திய அணி.
- கூகுள் நிறுவனம் 25 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள நிலையில், அதன் வரலாற்றில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை இந்திய வீரர் விராட் கோலி பெற்றுள்ளார்.
- ஐபிஎல் 2024ல் ரிஷப் பண்ட் டெல்லி அணிக்கு தலைமை தாங்குவார் என்றும் டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion