உலகை ஆட்டிப்படைக்கப்போகும் புற்றுநோய்! காத்திருக்கும் அதிர்ச்சி.. பகீர் கிளப்பும் WHO அறிக்கை!
2050-ஆம் ஆண்டுக்குள் புதிதாக 35 மில்லியன் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
WHO: 2050ஆம் ஆண்டுக்குள் புதிதாக 3.5 கோடி பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
வருடங்கள் ஓடினாலும் பல தொழில்நுட்பங்கள் வந்தாலும் இன்னும் மாறாத, குணப்படுத்த முடியாத விஷயம் என்றால் அது புற்றுநோய் தான். பல ஆய்வுகள், ஆராய்ச்சிகளுக்கு பின்பும் புற்றுநோய்க்கு முழுமையாக மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. சில மருந்துகள் புற்றுநோய்க்கு எதிராக நம்பிக்கை அளித்தாலும், முழுமையாக புற்றுநோயை குணப்படத்தாமல் இருக்கிறது. தற்போது வரை, கீமோதெரபிதான் புற்றுநோய்க்கு எதிராக முக்கியான சிகிச்சை முறையாக இருக்கிறது.
உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை:
இந்த நிலையில், புற்றுநோய் குறித்து உலக சுகாதார அமைப்பு 115 நாடுகளில் ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டது. புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் (IARC) ஆய்வின் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. அதில், "வேகமாக வளர்ந்து வரும் உலக நாடுகளில் புற்றுநோய் என்பது மனித இனத்திற்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக உள்ளது.
புகையிலை, மது பழக்கம், உடல் பருமன், காற்று மாசு, சூற்றுச்சூழல் ஆகியவை புற்றுநோய் வருவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன. உலக நாடுகளில் கடந்த 2022ஆம் ஆண்டில் 10 வகையான புற்று நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நுரையீரல் புற்றுநோயானது உலகளவில் பொதுவாக ஏற்படும் புற்றுநோயாகும். நுரையீரல் புற்றுநோயால் கடந்த 2022ஆம் ஆண்டில் 2.5 மில்லியன் பேர் (12.4%) பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது இடத்தில் மார்பக புற்றுநோய் உள்ளது. இந்த மார்பக புற்றுநோயால் 2.3 மில்லியன் பேர் (11.6%) பாதிக்கப்பட்டுள்ளனர்.
”35 மில்லியன் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள்"
அதேபோல, பெருங்குடல் புற்றுநோய்க்கு 9.6 சதவீத பேரும், வயிற்று புற்றுநோய்க்கு 4.9 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், அதிகபட்சமாக 1.8 மில்லியன் பேர் (18.7%) நுரையீரல் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். மேலும், மார்பக புற்றுநோயால் 6.9 சதவீத பேரும், வயிற்று புற்றுநோயால் 6.8 சதவீத பேரும், பெருங்குடல் புற்றுநோயால் 9.3 சதவீதம் பேரும் உயிரிழந்துள்ளனர்.
2022ஆம் ஆண்டின் பாதிப்புடன் ஒப்பிடுகையில் 2050ஆம் ஆண்டிற்குள் உலக நாடுகளில் 35 மில்லியன் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள். அதாவது, ஐந்து பேரில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள். மனிதவள மேம்பாட்டு தொடர்பான தரவரிசையில் வளர்ந்த நாடுகளில் 142 சதவீதமும், நடுத்தர நாடுகளில் 99 சதவீதமும் பாதிப்பு ஏற்படும். 2022 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட வழக்குகளை விட 77% அதிகமாக இருக்கும். 2050ஆம் ஆண்டிற்குள் புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இருமடங்காக இருக்கும்.
புகையிலை, மது பழக்கம், உடல் பருமன், காற்று மாசு, சூற்றுச்சூழல் பாதிப்பு போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கும்” என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
DMK - Congress: 13ம் தேதி சென்னை வரும் கார்கே! தி.மு.க. - காங்கிரஸ் தொகுதி பங்கீடு இறுதியாகுமா?
Poonam Pandey Death: நடிகை பூனம் பாண்டே புற்றுநோயால் உயிரிழப்பு: அதிர்ச்சியில் ரசிகர்கள்!