மேலும் அறிய

CM Candidate: 3 மாநில முதலமைச்சர் தேர்வில் இழுபறி! சத்தீஸ்கரில் இன்று கூடும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

3 மாநிலங்களில் யார் முதல்வர் என தேர்ந்தெடுக்க பார்வையாளர் குழுவை பாஜக நியமித்துள்ளது. இந்த நிலையில், சத்தீஸ்கர் முதலமைச்சர் யார் என்று இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பிரதேசத்தில் இருந்து சில பகுதிகளை பிரித்து உருவாக்கப்பட்ட மாநிலம்தான் சத்தீஸ்கர். மாநில மக்கள் தொகையில் 30 சதவிகிதத்தினர், பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள். மாநிலம் உருவாக்கப்பட்டு முதல் மூன்று ஆண்டுகள் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அங்கு நடைபெற்றது. 2003ஆம் ஆண்டுக்கு பிறகு, 2018ஆம் ஆண்டு வரை, பாஜகவின் கோட்டையாக இருந்தது. தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்று பெற்று பாஜக ஆட்சி அமைத்தது. இப்படிப்பட்ட சூழலில், கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், 15 ஆண்டுகளுக்கு பிறகு, சத்தீஸ்கரில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்.

பா.ஜ.க. வெற்றி:

அந்த வகையில் சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நவம்பர் 7 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும் 17 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது. நக்சல்களால் பாதிக்கப்பட்டுள்ள 20 தொகுதிகளில் 7ம்  தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், யாரும் எதிர்பாராத விதமாக 78 சதவிகித வாக்குகள் பதிவாகின. இரண்டாம் கட்டத்தில் 67.34 சதவீதம் வாக்குகள் பதிவானது.

5 மாநில தேர்தலுக்கான முடிவுகள் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் கை ஓங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் 34 இடங்கள் மட்டுமே கைப்பற்ற முடிந்தது. பாஜக 54 இடங்கள் பிடித்து அபார வெற்றி பெற்றது.

சத்தீஸ்கர் முதலமைச்சர்கள் யார்?

கிட்டத்தட்ட ஒரு வார காலம் ஆகியும் இன்னும் பாஜக தரப்பில் இருந்து முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்யவில்லை. புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுக்க மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா மற்றும் சர்பானந்தா சோனாவால் மற்றும் கட்சியில் பொதுச் செயலாளர் துஷ்யந்த் குமார் கவுதம் ஆகியோரை வெள்ளிக்கிழமை நியமித்தது. இந்த நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் கூட்டம் சத்தீஸ்கரில் இன்று நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் கூட்டத்தில் சத்தீஸ்கரின் அடுத்த முதலமைச்சர் யார் என அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தொடரும் இழுபறி:

சத்தீஸ்கரில் மட்டுமல்லாமல் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்திலும் ஆட்சியை கைப்பற்றிய பாஜக முதலமைச்சர் யார் என அறிவிப்பத்தில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்த 3 மாநிலங்களிலும் மேலிடப் பார்வையாளர்களை பாஜக நியமித்துள்ளது.

ராஜஸ்தானில் நடந்து முடிந்த தேர்தலில்  பாஜக 115 இடங்களில் வென்று காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பதவிக்கான போட்டியில் வசுந்தர ராஜே சிந்தியா, சாமியார் பாபா பாலக்நாத் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் மத்திய பிரதேசத்தில் பாஜக 163 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்க வைத்தது. மத்திய பிரதேசத்தில் முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகான் இந்த முறையும் தான் தான் முதல்வர் என திட்டவட்டமாக நம்புகிறார், ஆனால் பாஜக புதுமுகத்தை  முதல்வராக அறிமுகம் செய்ய விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக  ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், கே. லக்‌ஷமண், ஆஷா லக்ரா ஆகியோர் அடங்கிய பார்வையாளர்களை குழுவை மத்திய பிரதேச முதல்வரை தேர்வு செய்வதற்காக பாஜக நியமித்துள்ளது.


 

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
China Firm Unhappy Leave: அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
Embed widget