மேலும் அறிய

மாப்பிள்ளை ஊர்வலம் போல் சென்று ரெய்டு நடத்திய வருமான வரித்துறை: திரைப்படத்தை மிஞ்சிய சம்பவம்...

மகாராஷ்டிராவின் ஜல்னாவில் வருமான வரித் துறையினர் நேற்று நடத்திய சோதனையில் 390 கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத சொத்துக்களைக் கைப்பற்றியுள்ளனர்.

மகாராஷ்டிராவின் ஜல்னாவில் வருமான வரித் துறையினர் நேற்று நடத்திய சோதனையில் 390 கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத சொத்துக்களைக் கைப்பற்றியுள்ளனர். திரைப்படத்தை போன்று திருமண நிகழ்ச்சிக்கு செல்வது போல வருமான வரித்துறை அலுவலர்கள் மாறுவேடம் போட்டு சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த சோதனையின் விளைவாக 56 கோடி ரூபாய் ரொக்கம், 32 கிலோ தங்கம் மற்றும் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்கள் மற்றும் பிற சொத்து ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் தரவுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஆகஸ்ட் 3ம் தேதி நடந்த சோதனையில் 120 வாகனங்களை வருமான வரித்துறையினர் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் ரெய்டு குறித்து யாருக்கும் தெரியாமல் இருக்க வாகனங்கள் தனித்தனியாக சென்றன. வாகனங்கள் அனைத்தும் திருமண ஊர்வலத்தை சேர்ந்தது போல் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

சில வாகனங்களில் "துல்ஹன் ஹம் லே ஜாயங்கே" என்ற பெயர் பொறிக்கப்பட்ட பலகைகள் இருந்தன. 2000 ஆம் ஆண்டு வெளியான பிரபலமான ஹிந்தி திரைப்படத்தின் தலைப்பு இது. மணமகனை ஏற்றிச் செல்லும் கார்களில் பெரும்பாலும் இந்த பெயர் பலகைதான் பயன்படுத்தப்பட்டிருக்கும். திருமண விழாக்களை போன்று சுமார் 250 வருமான வரித்துறை மற்றும் காவல்துறை அலுவலர்கள் மாறுவேடத்தில் சென்று சோதனை நடத்தியுள்ளனர்.

எஃகு, ஆடைகள் மற்றும் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபடும் இரண்டு வணிகக் குழுக்களுடன் தொடர்புடைய வளாகங்கள், கிடங்குகள் மற்றும் பண்ணை வீடுகளில் இக்குழுக்கள் சோதனை நடத்தினர்.

இதுபற்றி முன்னதாக விரிவாக திட்டமிட்டிருந்தோம். எனவே, கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்ய இது உதவியாக இருந்தது என அலுவலர்கள் கூறியுள்ளனர். சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணுவதற்கு அலுவலர்களுக்கு சுமார் 13 மணி நேரம் ஆனது.

வணிகக் குழுக்கள் வரி ஏய்ப்பு செய்ததாக ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைக்காக 260 அலுவலர்கள் கொண்ட 5 குழுக்களை வருமான வரித்துறை அமைத்திருந்தது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay's Next Political Move: அரசியலில் ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் விஜய்... அடுத்த விசிட் பிளான் ரெடி...
அரசியலில் ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் விஜய்... அடுத்த விசிட் பிளான் ரெடி...
"கத்திக்குத்து உண்மையா.. இல்ல நடிக்கிறாரா" சைஃப் அலிகான் மீது பாஜக அமைச்சர் பரபர குற்றச்சாட்டு!
Jio, Airtel New Plans: இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்...
இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்....
Modi to Meet Trump?: நண்பர் ட்ரம்ப்பை சந்திக்கிறாரா மோடி.? வெளியான புதிய தகவல்...
நண்பர் ட்ரம்ப்பை சந்திக்கிறாரா மோடி.? வெளியான புதிய தகவல்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | MaduraiTVK Member Audio | RN Ravi Praised Tamilnadu | ”தமிழ்நாடு தான் BESTபெண்கள் பாதுகாப்பா இருக்காங்க” RN ரவி புகழாரம் | DMKCongress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay's Next Political Move: அரசியலில் ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் விஜய்... அடுத்த விசிட் பிளான் ரெடி...
அரசியலில் ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் விஜய்... அடுத்த விசிட் பிளான் ரெடி...
"கத்திக்குத்து உண்மையா.. இல்ல நடிக்கிறாரா" சைஃப் அலிகான் மீது பாஜக அமைச்சர் பரபர குற்றச்சாட்டு!
Jio, Airtel New Plans: இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்...
இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்....
Modi to Meet Trump?: நண்பர் ட்ரம்ப்பை சந்திக்கிறாரா மோடி.? வெளியான புதிய தகவல்...
நண்பர் ட்ரம்ப்பை சந்திக்கிறாரா மோடி.? வெளியான புதிய தகவல்...
இதுதான் அந்த அறிவிப்பு; உலகுக்கே இரும்பை அறிமுகம் செய்த தமிழ்நாடு; ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
இதுதான் அந்த அறிவிப்பு; உலகுக்கே இரும்பை அறிமுகம் செய்த தமிழ்நாடு; ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
TVK Posting: அதுக்குள்ளவா விஜய்..! சாதிக்கும், பணத்துக்கும் பதவிகளை விற்கும் தவெக? ரேட்டு என்ன தெரியுமா?
TVK Posting: அதுக்குள்ளவா விஜய்..! சாதிக்கும், பணத்துக்கும் பதவிகளை விற்கும் தவெக? ரேட்டு என்ன தெரியுமா?
Embed widget