மாவோயிஸ்ட் அச்சுறுத்தல்கள் முடிவுக்கு கொண்டுவரப்படும் - அமித் ஷா எச்சரிக்கை
மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான சண்டையில், அரசு நிச்சயம் வெற்றியடையும் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்
மாவோயிஸ்ட் அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவருவதில் அரசு உறுதியாக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். இன்று சத்தீஸ்கர் மாநிலத்துக்கு பயணம் செய்த அவர், முதலமைச்சர் பூபேஷ் பாகல், மாநில காவல்துறை அதிகாரிகள், மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்திற்கும் அவர் தலைமை தாங்கினார்.
नक्सलियों के खिलाफ इस लड़ाई को अंजाम तक ले जाना मोदी सरकार की प्राथमिकता है।
— Amit Shah (@AmitShah) April 5, 2021
पिछले 5-6 वर्षों में हमने छत्तीसगढ़ के नक्सल प्रभावित क्षेत्रों में काफी अंदर तक जाकर सुरक्षा कैंप बनाए हैं।
मैं देश को विश्वास दिलाता हूं कि नक्सलियों के खिलाफ ये लड़ाई और तीव्र होगी व हम विजयी होंगे। pic.twitter.com/1UJ76n2jjY
முன்னதாக, சுக்மா – பிஜப்பூர் மாவட்ட எல்லை அருகே வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல்படை மற்றும் மாவட்ட ரிசர்வ்படை வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழப்பு எண்ணிக்கை 22-ஆக அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலில் மாவோயிஸ்ட்டுகள் பலர் கொல்லப்பட்டதாகவும், அதில் இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
छत्तीसगढ़ में नक्सलियों का सामना करते वक्त शहीद हुए बहादुर सुरक्षाकर्मियों को जगदलपुर में श्रद्धांजलि अर्पित की।
— Amit Shah (@AmitShah) April 5, 2021
देश आपके शोर्य और बलिदान को कभी भुला नहीं पाएगा। पूरा देश शोक संतप्त परिवारों के साथ खड़ा है।
अशांति के विरुद्ध इस लड़ाई को हम अंतिम रूप देने के लिए संकल्पित हैं। pic.twitter.com/UCqiRLJICs
ஜெகதல்பூர் நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய அமித் ஷா, மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தை அரசு தீவிரப்படுத்தப்படும். அதி தீவிரத்துடன் போராடாத வரை மாவோயிஸ்டுகளை அச்சுறுத்தல் நீடிக்கும். இந்த சண்டையில், அரசு நிச்சயம் வெற்றியடையும் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்,”என்று ஷா கூறினார்.
My condolences to the families of the martyrs who sacrificed their lives in combat in Chhattisgarh.
— Rahul Gandhi (@RahulGandhi) April 4, 2021
Decisive action needs to be taken to locate & rescue the missing Jawans.
I appeal to the State Govt to ensure best care for a speedy recovery of the injured.
உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர், குடியரசுத்துணைத் தலைவர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.