மேலும் அறிய

Norovirus: உஷார் மக்களே உஷார்..! கேரளாவில் பரவுகிறது நோரோ வைரஸ் - 19 பேருக்கு பாதிப்பு

கேரளாவில் 19 பேருக்கு நோரோ வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் 19 மாணவர்களுக்கு இந்த தொற்று உறுதியாகியுள்ளது.

கேரளாவில் 19 பேருக்கு நோரோ வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் 19 மாணவர்களுக்கு இந்த தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட சுகாதார மையம் நோரோவைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜூன் மாதம் கேரளாவின் ஆழப்புழா மாவட்டத்தில் நோரோ வைரஸ் பரவியது. ஒன்றரை மாதம் வரை தொற்று நிலவியது. சுமார் 950 பேர் வரை பாதிக்கப்பட்டனர்.

நோரோ வைரஸ் என்றால் என்ன?

நோரோ வைரஸ் என்பது மிக வேகமாக பரவக்கூடிய வைரஸ். வயிற்று ஃப்ளூ காய்ச்சல் எனவும் இதனைக் குறிப்பிடுவது உண்டு. இந்த தொற்றால் மாசடைந்த உணவு, நீர், தரை முதலானவை மூலமாக இது பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் கழிவுகள் மூலமாகவும் இது பரவுகிறது. 

அனைத்து வயதினரையும் தாக்கும் நோரோ வைரஸ், வயிற்றுப்போக்கை உருவாக்கக்கூடியது. கப்பல்கள், சிறிய மருத்துவமனைகள், ஹாஸ்டல்கள் முதலான மூடப்பட்ட இடங்களில் இந்த தொற்றும் ஏற்படும் அபாயம் உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்களின்படி, நோரோ வைரஸ் தொற்று என்பது குடல் வீக்கத்தோடும், ஊட்டச்சத்து குறைபாடோடும் தொடர்புடையது எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த நோய் நீண்ட கால நீடிக்கக்கூடியதாக இருக்கிறது. உலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 685 மில்லியன் பேரைத் தாக்கும் நோரோ வைரஸ், 5 வயதுக்குக் கீழான குழந்தைகளில் சுமார் 200 மில்லியன் பேரைத் தாக்குகிறது. 

நோரோ வைரஸ் அறிகுறிகள் என்ன?

முதல்கட்ட அறிகுறிகளாக வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியன தொற்று ஏற்பட்ட ஒன்று அல்லது இரண்டு நாள்களின் ஏற்படுகிறது. நோயாளிகள் தலைசுற்றல், வயிற்று வலி, காய்ச்சல்ம், தலைவலி, உடல் வலி, உடலில் நீர்ச்சத்து குறைபாடு முதலானவற்றையும் எதிர்கொள்கின்றனர். 

நோரோ வைரஸ் தொற்றில் இருந்து தப்பிப்பது எப்படி?

நோரோ வைரஸ் பல்வேறு திரிபுகளைக் கொண்டிருப்பதால் ஒரே நபர் இதனால் பலமுறை பாதிக்கப்படலாம். மேலும், பல்வேறு கிருமிநாசினிகளிடம் இருந்தும் நோரோ வைரஸ் தப்பிப்பதோடு, சுமார் 60 டிகிரி செல்சியஸ் வெப்பம் வரை உயிர் வாழ்கிறது. எனவே உணவைச் சூடு செய்வதும், நீரில் க்ளோரின் கலப்பதும் மட்டுமே இந்த வைரஸைக் கொல்வதில்லை. மேலும், நாம் கைகளில் பயன்படுத்தும் சானிடைசர்களிடம் இருந்தும் இந்த வைரஸால் தப்பிக்க முடியும். 

கழிவறைகளுக்குச் சென்ற பிறகு கைகளுக்கு சோப்பு தேய்த்து கழுவுதலும், குழந்தைகளுக்கு அடிக்கடி டயாபர்களை மாற்றுவது, உணவு தயாரிக்கும் போதும், உண்ணும் போதும் நன்கு கைகளைக் கழுவுவது முதலானவை நோரோ வைரஸ் தொற்றைத் தடுக்கும். 

இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பிறரைத் தொடுவது, உணவு சமைப்பது முதலானவற்றைத் தவிர்க்க வேண்டும். 

நோரோ வைரஸ் பாதிப்புக்கு என்ன சிகிச்சை?

நோரோ வைரஸ் தொற்று விரைவில் குணமாகக்கூடியது. ஒரு நோயாளியை வதைத்தாலும், இரண்டு முதல் மூன்று நாள்களுக்குள் குணமாகிவிடுகிறது. வயதானவர்கள் நோரோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் போது, போதிய ஓய்வும், நீர்ச்சத்தும் வழங்கப்பட வேண்டும். இந்த நோய்த் தொற்றைத் தவிர்க்க பிரத்யேக மருந்துகள் இல்லை.

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Embed widget