Diwali : 15.67 லட்சத்திற்கும் அதிகமான தீபங்கள்.. சொந்த சாதனையை முறியடித்த அயோத்திய தீப உத்சவம்..
தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் உள்ள ‘ராம் கி பைடி’யில் 15.76 லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகளை ஏற்றி அதனுடைய சாதனையை முறியடித்து ‘largest display of oil lamps’ என்ற கின்னஸ் உலக சாதனையை பெற்றது
15.67 லட்சத்திற்கும் அதிகமான தீபங்கள் ஏற்றி அயோத்தியின் தீபோத்சவ் (ram ki paidi) அதனுடைய சொந்த கின்னஸ் உலக சாதனையை முறியடித்தது.
அயோத்தி: தீபாவளியை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ‘ராம் கி பைடி’யில் 15.76 லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகளை ஏற்றி அயோத்தியின் தீபோத்சவ், அதனுடைய சாதனையை முறியடித்து ‘largest display of oil lamps’ என்ற கின்னஸ் உலக சாதனையை மீண்டும் பெற்றது. 15.76 லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகள் ஒவ்வொன்றாக எரிந்தன. 'ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்' என்ற முழக்கத்துடன் பிரதமர் விழாவைத் தொடங்கினார். பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இந்த சாதனை படைக்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள், பிரமுகர்கள் கண்டுகளித்தனர்.
அயோத்தியில் உள்ள பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களும் மாணவர்களும் இந்த சாதனையை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினர். லேசர் ஷோ வானத்தை ஒளிரச் செய்த போது, சரயு நதியில் உள்ள தீபங்களின் பிரதிபலிப்பு ஒரு பிரமாண்டமான காட்சியை வழங்கியது. அயோத்தியில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று முழக்கமிட்டபடி ஒரே குரலில் எழுந்தது.
இந்த சாதனையை கின்னஸ் உலக சாதனைப் பிரதிநிதிகள் அறிவித்ததையடுத்து, அயோத்தி நகரம் முழுவதும் ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தால் எதிரொலித்தது.சான்றிதழை முதல்வர் யோகி பெற்றுக் கொண்டார், சாதனைக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் தீபோத்சவ் தொடங்கப்பட்ட 2017ஆம் ஆண்டில் 1.71 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு, 2018ல் 3.01 லட்சமாகவும், 2019ல் 4.04 லட்சமாகவும், 2020ல் 6.06 லட்சமாகவும், 2021ல் 9.41 லட்சமாகவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு 15.67 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டது.
2015ஆம் ஆண்டு பஞ்சாப் எல்லையிலும், 2016-ம் ஆண்டு இமாச்சலபிரதேச எல்லையிலும் பணியாற்றிய ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். 2017-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பணிபுரியும் வீரர்களுடனும், 2018-ம் ஆண்டு உத்தரகாண்டில் பணியாற்றும் வீரர்களுடனும், 2019-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றும் வீரர்களுடனும் தீபாவளியை கொண்டாடினார். 2020-ம் ஆண்டு ராஜஸ்தான் எல்லையில் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் தீபாவளியை கொண்டாடினார். இந்நிலையில், இந்த ஆண்டு கார்கிலில் இருக்கக் கூடிய எல்லை பாதுகாப்புப்படை வீரர்களுடன் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடினார்.
அப்போது ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, என்னை பொறுத்தவரை ராணுவ வீரர்கள் அனைவரும் என்னுடைய குடும்பம் எனவும், உங்கள் மத்தியில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது பெருமைக்குரியது என தெரிவித்தார். மேலும், இந்தியா என்பது நாடு மட்டுமல்ல, தியாகம், அன்பு, இரக்கம், மகத்தான திறமை, தைரியம் உள்ளிட்டவற்றை கலந்துதான் இந்தியா உருவாகியுள்ளது என தெரிவித்தார்.