மேலும் அறிய

9 AM Headlines: காலை 9 மணி தலைப்பு செய்திகள்..! இதுவரை உங்களைச் சுற்றி நடந்தது என்ன..?

Headlines 9 AM: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கியச் செய்திகளை தலைப்புச் செய்திகளாக இங்கு பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • அடுத்த 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
  • தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம் தாலுக்கா, திருவள்ளூர் தாலுக்கா, ஊத்துக்கோட்டை தாலுக்கா பகுதிகளுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
  • விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. 
  • செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கனஅடி நீர் திறப்பு. அடையாறு கரையோர மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை. 
  • தலைநகர் சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு மழை பெய்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்துவருகிறது. 
  • 2023ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுத் தேதி அட்டவணை போலி என்று சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்து உள்ளது. 
  • ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகளை ஆளுநர் கண்டுகொள்ளாத நிலையில், 12 நாட்களில் 4ஆவது உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது என்றும் தடை சட்டத்திற்கு ஆளுநர் எப்போது ஒப்புதல் அளிப்பார் என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 
  • தமிழ்நாடு முழுவதும் இன்று மற்றும் நாளை தி.மு.க. அரசைக் கண்டித்து அ.தி.மு.க. போராட்டம் நடத்த உள்ளது.
  • இமாச்சலப் பிரதேச முதலமைச்சராக பொறுப்பேற்ற சுக்வீந்தர் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  • படகு பாதிப்பு கணக்கெடுப்பு 2 நாளில் நிறைவடையும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
  • கரும்புக்கு ரூ.195 ஊக்கத் தொகையுடன் ரூ.2,950 விலை நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இந்தியா:

  • இமாச்சல பிரேதேச முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுக்கும், துணை முதலமைச்சராக முகேஷ் அக்னிஹோத்ரியும் நேற்று பதவியேற்றனர்.
  • சர்வதேச விமான நிலையத்தால் கோவா வளர்ச்சி அடையும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
  • குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்கிறார்.
  • உத்தரப்பிரதேச காவல்துறை அதிகாரிகள், இந்து கடவுள்கள், பிரதமர் கதாபாத்திரத்தை தவறாக சித்தரித்ததாக தாண்டவ் வெப்சீரிஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
  • பான் கார்டுடன்  ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
  • மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தீபங்கர் தத்தாவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக மத்திய அரசு நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தகவல்.
  • இந்தியா - ஆஸ்திரேலிய நாடுகள் இணைந்து நடத்திய கூட்டு ராணுவப் பயிற்சி நிறைவு. 

உலகம்:

  • சனி கிரகத்தின் பழைய புகைப்படத்தைப் நாசா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
  • நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம் இன்று பூமிக்கு திரும்புகிறது
  • வடக்கு பிரான்சில் ஜெர்சி தீவில் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி
  • உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62.88 கோடியாக உயர்ந்துள்ளது.

விளையாட்டு:

  • வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்ததற்கு பிறகு, டெஸ்ட் தொடரை கேஎல் ராகுல் வழிநடத்துவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது அறிவித்துள்ளது. 
  • முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர், FIFA உலகக் கோப்பை 2022-க்கான தீம் பாடல் பின்னணியில் இசையை பதிவிட்டு, அதில், தான் கால்பந்து விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். 
  • உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடரின் காலிறுதிப்போட்டியில் பெற்ற வெற்றியை கொண்டாடும்போது, மொராக்கோ மற்றும் பிரான்ஸ் அணிகளின் ரசிகர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.
  • சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த நியூசிலாந்தின் மெக்கல்லமின் சாதனையை பென் ஸ்டோக்ஸ் சமன் செய்துள்ளார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget