கர்ப்பகால சிக்கலுக்கு சிகிச்சை அளிப்பதில் முதல் இடத்தில் தமிழகம்: சுகாதாரத்துறை
கர்ப்ப கால சிக்கலுக்கு சிகிச்சை அளிப்பதில் முதல் இடத்தில் தமிழகம்
கர்ப்பகால சிக்கல்கள் உள்ள தாய்மார்களை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஏழை, எளிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்களை தேடி மருத்துவம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம், இதயம் காப்போம், பாதம் காப்போம், சிறுநீரகம் காப்போம், சீர்மிகு மருத்துவ திட்டம் என ஏராளமான மருத்துவ திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் கர்ப்பிணி பெண்களின் நலனில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகள் எந்த நேரத்தில் கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு வந்தாலும் அவர்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனால் மகப்பேறு இறப்பு என்பது தமிழகத்தில் குறைந்து காணப்படுகிறது. மகப்பேறு இறப்பு விகிதத்தை பொருத்தவரை ஒரு லட்சம் உயிருள்ள பிறப்புகளுக்கு 70 மரணங்கள் என்கிற அளவில் மரணங்கள் சர்வதேச இலக்கை இந்தியாவை எட்டிருக்கிறது.
அந்த வகையில் தமிழ்நாடு இலக்கை எட்டி இருப்பதோடு மட்டுமல்லாமல் குறைந்த அளவில் இறப்புகள் என்கிற சாதனையும் படைத்துள்ளது. இது குறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த ஆண்டு தாய்மார்களின் இறப்பு விகிதம் ஒரு லட்சம் பிரசவங்களுக்கு இறப்பு 54 ஆக குறைந்து இருக்கிறது. தேசிய அளவிலான இறப்பு விகிதம் 70 என்று இருந்தாலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 54 என்கின்ற அளவில் குறைந்து இருக்கிறது. தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பு சிறப்பாக உள்ளது.
தமிழ்நாட்டில் சுகாதாரத் துறையின் தீவிர முயற்சியால் ஒரே ஆண்டில் 54 ஆக இருந்த இறப்பு விகிதம் நடபாண்டில் 45 ஆக குறைந்து இருக்கிறது. இது மேலும் குறைக்க வேண்டும் என்று அடிப்படையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 99. 9 சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளிலேயே நடக்கிறது. கடந்த காலங்களில் வீடுகளில் பிரசவம் நடந்த நிலை தற்போது மாறியுள்ளது. அதேபோல் அதிக அளவில் கர்ப்ப கால சிக்கல்கள் உள்ள தாய்மார்களை கண்டறிந்து நல்ல முறையில் சிகிச்சை அளிப்பதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. அதிக எண்ணிக்கையில் மகப்பேறு பராமரிப்பு மையங்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
ரத்த சோகையை தடுப்பதற்காக தகவல் கல்வி மற்றும் தகவல் தொடர்புகளை சிறப்பாக செயல்படுத்துகிறது முதல் பரிசு கிடைத்துள்ளது. தொடர்ந்து மகப்பேறு இறப்பு விகிதத்தை பூஜ்ஜியம் என்ற நிலைக்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது இவ்வாறு அவர்கள் கூறினார். அதுவே எண்ணிக்கையில் மகப்பேறு பராமரிப்பு மையங்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. ரத்த சோகையை தடுப்பதற்காக தகவல் கல்வி மற்றும் தகவல் தொடர்புகளை சிறப்பாக செயல்படுத்துவதற்காக முதல் பரிசம் கிடைத்துள்ளது.