மேலும் அறிய

நிலச்சரிவு பாதிப்பு; வயநாட்டிற்கு ரூ. 7 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை அனுப்பிய தர்மபுரி ஆட்சியர்

மை தருமபுரி தன்னார்வ அமைப்பினர் 2018 ஆம் ஆண்டு கேரளா வெள்ள நிவாரண உதவி, 2021, 2023 சென்னை வெள்ள நிவாரண உதவி, 2018 வேதாரண்யம் புயல் உதவி, 2023 தூத்துக்குடி வெள்ள நிவாரண உதவி போன்ற உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

கேரளா வையநாடு மண் சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மை தருமபுரி தன்னார்வ அமைப்பின் மூலம் 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

நிலச்சரிவு பாதிப்பு; வயநாட்டிற்கு ரூ. 7 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை அனுப்பிய தர்மபுரி ஆட்சியர்

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த வாரம் மண் சரிவு ஏற்பட்டு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 3 கிராமங்கள் வீடுகளே இல்லாமல் மண்ணில் பதிந்துள ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் தொடர்ந்து மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்ய கேரளா அரசு வங்கி கணக்கு எண்களை வழங்கியுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரள மக்களுக்கு பண உதவிகளும் உணவு மருந்து போன்ற பதிவுகளையும் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் முதல்முறையாக மை தருமபுரி தன்னார்வ அமைப்பினர் கேரள மாநிலம் வயநாடு மண்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 7 லட்சம் ரூபாய்க்கான நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியர் சாந்தியிடம் வழங்கியுள்ளனர்.

அங்குள்ள மக்களுக்கு தேவையான அரிசி எண்ணெய், பிஸ்கட், நாப்கின்ஸ், குடிதண்ணீர், மருந்துகள் மற்றும் 500 குடும்பங்களுக்கு தேவையான பொருட்கள் என நிவாரண உதவி பொருட்களை லாரி மூலம் ஏற்று வந்து மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த மை தருமபுரி தன்னார்வ அமைப்பினர் 2018 ஆம் ஆண்டு கேரளா வெள்ள நிவாரண உதவி, 2021, 2023 சென்னை வெள்ள நிவாரண உதவி, 2018 வேதாரண்யம் புயல் உதவி, 2023 தூத்துக்குடி வெள்ள நிவாரண உதவி போன்ற உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அதேபோல் பாதிப்பு ஏற்படுகின்ற இடங்களுக்கு நேரடியாக சென்று களத்தில் இறங்கி மீட்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிவாரண உதவி பொருட்களுக்கு உதவிய அமீரகம் ஹோப் அமைப்பு, ஹைட் டியான் அமைப்பு, டோக்கியோ தமிழ்ச்சங்கம், தருமபுரி மாவட்ட தொழிலதிபர்கள், பொதுமக்கள் என பல தரப்பினர், மை தருமபுரி தன்னார்வ அமைப்பினரிடம் வழங்கியுள்ளனர்.தொடர்ந்து தற்போது கேரளா மாநிலம் வையநாடு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் நிவாரண உதவிகளை கொண்டு செல்கின்றனர்.

மேலும் இது முதற்கட்டமான நிவாரண பொருட்கள் தான். தொடர்ந்து மை தருமபுரி தன்னாரவ அமைப்பின் மூலம் நிவாரண பொருட்கள் வழங்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்சி ராஜ்குமார், மை தருமபுரி அமைப்பின் கௌரவ தலைவர் CKM ரமேஷ், நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்ச்செல்வன், அமீரக ஹோப் பவுண்டேஷன் கௌசர் பேக், ஒருங்கிணைப்பாளர்கள் அருணாசலம், அருள்மணி, முகமத் ஜாபர், விஜயகாந்த், சண்முகம், கிருஷ்ணன், சபரிமுத்து, கௌதம் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நிவாரண பொருட்களை சேகரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக கொண்டு செல்லவும், மீட்பு பணிகளில் எடுபடவும் மை தருமபுரி தன்னார்வ அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget