மேலும் அறிய

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி.. ஒரே மேடையில் அதிமுக திமுக எம்.எல்.ஏக்கள்..

தர்மபுரி மாவட்டத்தில் 478 சுய உதவிக் குழுவை சேர்ந்த 5515 பயனாளிகளுக்கு 58.92 கோடி வங்கி இணைப்பு கடன்களை மாவட்ட ஆட்சியர் சாந்தி வழங்கினார்.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம் பைசு அள்ளியில் மகளிர் திட்டம் சார்பில் 5515 பயனாளிகளுக்கு 58.92 கோடி மதிப்பில் மகளிர் சுய உதவி குழு வங்கி கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் சாந்தி, திமுக எம்பி .மணி எம்எல்ஏக்கள் கே.பி. அன்பழகன், ஜி கே மணி, வெங்கடேஸ்வரன், கோவிந்தசாமி, சம்பத் குமார் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.

 விழாவில் மாவட்ட ஆட்சியர் சாந்தி பேசியதாவது:-

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள் உள்ளிட்ட சமுதாய அமைப்புகளை ஊர் பகுதிகளில் உருவாக்கி அதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், வருமானத்தை பெருக்கவும், வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பொருளாதாரக் கடன் தேவைகளை பெரும் அளவில் பூர்த்தி செய்யும் பொருட்டு வங்கி கடன் வழங்கப்பட்டு வருகிறது. ஒரே பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் தங்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுத்திற்காக தாங்களாகவே முன்வந்து ஏற்படுத்திக் கொண்ட அமைப்பு சுய உதவி குழு ஆகும். 

தர்மபுரி ஒன்றியத்தில் 28 சுய உதவிக் குழுவினருக்கும், ஏரியூர் ஒன்றியத்தில் 13 சுய உதவிக் குழுவினருக்கும், அரூர் ஒன்றியத்தில் 17 சுய உதவிக் குழுவினருக்கும், கடத்தூர் ஒன்றியத்தில் 28 சுய உதவி குழுவினருக்கும், காரிமங்கலம் ஒன்றியத்தில் 27 உதவி குழுவினருக்கும், மொரப்பூர் ஒன்றியத்தில் 35 சுய உதவி குழுவினருக்கும், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் 23 சுய உதவி குழுவினருக்கும், பாலக்கோடு ஒன்றியத்தில் 66 சுய உதவி குழுவினருக்கும், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் 32 சுய உதவி குழுவினருக்கும், பெண்ணாகரம் ஒன்றியத்தில் 30 சுய உதவி குழுவினருக்கும், தர்மபுரி நகராட்சியில் 41 சுய உதவிக் குழுவினருக்கும், அரூர் பேரூராட்சியில் 11 சுய உதவிக் குழுவினருக்கும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. 

அதேபோல் கடத்தூர் பேரூராட்சியில் 16 சுய உதவி குழுவினருக்கும், பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் 22 சுய உதவி குழுவினருக்கும், பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சியில் 10 சுய உதவி குழுவினருக்கும், காரிமங்கலம் பேரூராட்சியில் 8 சுய உதவிக் குழுவினருக்கும், கம்பைநல்லூர் பேரூராட்சியில் 7 சுய உதவிக் குழுவினருக்கும், மாரண்டஅள்ளி பேரூராட்சியில் 18 சுய உதவி குழுவினருக்கும், பாலக்கோடு பேரூராட்சியில் 30 சுய உதவி குழுவினருக்கும், பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் ஏழு சுய உதவி குழுவினருக்கும், பெண்ணாகரம் பேரூராட்சியில் 9 சுய உதவி குழுவினருக்கும், என மொத்தம் 478 மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த 5515 பெண்களுக்கு 58.92 கோடி மதிப்பில் வங்கி இணைப்பு கடன்கள், தொழில் கடன்கள், தனிநபர் கடன்கள், மகளிர் சுய உதவிக் குழு வங்கிக் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் லலிதா, முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மலர்விழி, உதவி திட்ட அலுவலர்கள் சந்தோஷம், சஞ்சீவிகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராமஜெயம், ஒன்றிய குழு தலைவர் சாந்தி, பெரியண்ணன், பேரூராட்சி தலைவர்கள் வீரமணி பிருந்தா, இந்திராணி, மகேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மகேந்திரன் தாசில்தார் கோவிந்தராஜ், பிடியோக்கள் சத்யா, கணேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் வங்கி மேலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
Annamalai Tweet: தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
Embed widget