மேலும் அறிய

'ஊட்டி டீக்கு நீலகிரியில் இருந்து மட்டுமே டீ துள் கொள்முதல் செய்ய வேண்டும்' - வானதி சீனிவாசன் கோரிக்கை

அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதால் இதனை செயல்படுத்துவதில் திமுக அரசு அக்கறை காட்டவில்லை என்று தெரிகிறது. இதனால் நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விற்பனை விலையாக கிலோவுக்கு ரூ. 33.44  நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகள், கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கோவை வந்த மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயலை, நீலகிரி நாக்குபெட்டா படுகர் நலச் சங்க பிரதிநிதிகள் நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தினர். பசுந் தேயிலைக்கு நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த மத்திய அமைச்சர், இது குறித்து இந்திய தேயிலை வாரியத்திடம் விளக்கம் கேட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் சிறு தேயிலை விவசாயிகளின் இந்தப் பிரச்னை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காணவே, கடந்த 2001 அதிமுக ஆட்சியில், ஊட்டி டீ என்ற பெயரில் ரேஷன் கடைகளில் டீ தூள் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான டீ தூள் 100 சதவீதமும், நீலகிரி மாவட்டத்தில் இருந்து மட்டுமே பெறப்பட்டன. இதனால் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறு தேயிலை விவசாயிகள் பெரும் பயனடைந்து வந்தனர். ஆனால், தற்போதுள்ள திமுக அரசு ரேஷன் கடைகளில் விற்கப்படும் ஊட்டி டீக்காக நீலகிரி மாவட்டத்தில் இருந்து 50 முதல் 60 சதவீதம் மட்டுமே டீ தூளை கொள்முதல் செய்கிறது. 40 முதல் 50 சதவீதம்  டீ தூள் அசாம் போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் பெறப்படுகின்றன.

தொடக்கத்தில் 4 லட்சத்து 50 ஆயிரம் கிலோ வரை விற்கப்பட்ட ஊட்டி டீ, தற்போது 2 லட்சம் கிலோ மட்டுமே விற்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்ட திட்டம் என்பதால் இதனை செயல்படுத்துவதில் திமுக அரசு அக்கறை காட்டவில்லை என்று தெரிகிறது. இதனால் நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களின் நலன் கருதி, ரேஷன் கடைகளில், ஊட்டி டீத்தூள் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஊட்டி டீக்காக 100 சதவீத டீ தூளையும், நீலகிரி மாவட்டத்தில் இருந்து மட்டுமே பெற வேண்டும். அதற்காக தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு தேயிலை விவசாயிகளிடம் பசுந்தேயிலையை நியாயமான விலையில் கொள்முதல் செய்ய வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
coimbatore power cut: கோவையில் நாளை (13-10-2026) எங்கெல்லாம் கரண் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-10-2026) எங்கெல்லாம் கரண் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (12-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (09-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (09-10-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!
TN Weather News: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - தமிழக வானிலை அறிக்கை
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
Embed widget