மேலும் அறிய

பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா துவக்கம் ; சுற்றுலா பயணிகள் ஆர்வம்

60 அடி முதல் 100 அடி உயரம் கொண்ட இந்த பலூன்கள் இந்த திருவிழாவில் பறக்கவிடப்பட்டன. பலூன்களுக்கு வெப்பகாற்று அடிக்கப்பட்டு மிக்கி மவுஸ், டைனோசர் உட்பட பல்வேறு வடிவங்களிலும் பலூன்கள் பறக்க விடப்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று துவங்கிய சர்வதேச பலூன் திருவிழாவை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு இரசித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் எட்டாவது சர்வதேச பலூன் திருவிழா இன்று துவங்கியது. சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் இந்த பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சுற்றுலா துறை சார்பில் முதல் முறையாக நடத்தப்படும் பலூன் திருவிழா, இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த பலூன் திருவிழாவில் பிரான்ஸ், ஜெர்மன், நெதர்லேண்ட், பிரேசில் உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து பத்து வகையான பல பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் ஒரு பலூன் பறக்க விடப்பட்டது.


பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா துவக்கம் ; சுற்றுலா பயணிகள் ஆர்வம்

60 அடி முதல் 100 அடி உயரம் கொண்ட இந்த பலூன்கள் இந்த  திருவிழாவில் பறக்கவிடப்பட்டன. பலூன்களுக்கு வெப்பகாற்று அடிக்கப்பட்டு மிக்கி மவுஸ், டைனோசர் உட்பட பல்வேறு வடிவங்களிலும் பலூன்கள் பறக்க விடப்பட்டது. இன்று அதிகாலையில் பலூன் திருவிழா தொடங்கியதை அடுத்து, வானில் வட்டமிட்டு சென்ற ராட்சச பலன்களை கண்டு பொள்ளாச்சி பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த பலூன் திருவிழாவை பார்ப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து கலந்து கொண்டனர். மூன்று நாட்களும் காலை மற்றும் மாலை என இரு வேலைகளிலும் பலூன்கள் வானில் பறக்க விடப்படுகிறது. இந்த பலூனில் 3 பேர் பயணிக்கலாம். வெப்ப காற்று பலூனில் பறக்க ஒரு நபருக்கு 25,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பலூன் திருவிழா முன்னிட்டு உணவுத் திருவிழா மற்றும் இரவு நேரங்களில் கலை நிகழ்ச்சி என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா துவக்கம் ; சுற்றுலா பயணிகள் ஆர்வம்

இந்த பலூன் திருவிழாவை பல மாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். இது குறித்து சுற்றுலா பயணிகள்  கூறுகையில், ”இது போன்ற பலூன் திருவிழா வெளிநாடுகளில் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் தமிழ்நாட்டில் பலூன் திருவிழா நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அனைவருக்கும் பிடித்த வகையில் உள்ளது. ராட்சச பலூன்களில் வெப்பக் காற்றை நிரப்புவது, ஒரே நேரத்தில் பலவகையான வண்ணங்களில் பலூன்களை வானில் காண்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பலூனில் பறப்பதற்கு ஒரு நபருக்கு 25 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண மக்கள், நடுத்தர மக்கள் இதில் பயணிக்க முடியாத நிலை உள்ளது. மேலும் இதன் காரணமாக கூட்டம் குறைவாக உள்ளது. எனவே அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில் கட்டணத்தை குறைக்க வேண்டும். கட்டணத்தை குறைத்தால் மக்கள் குடும்பத்துடன் வந்து இரசித்து செல்ல வசதியாக இருக்கும்” எனத் தெரிவித்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

100% குற்றமற்ற தமிழகம் சாத்தியமில்லை – துரை வைகோ கோவையில் பரபரப்பு பேட்டி...
100% குற்றமற்ற தமிழகம் சாத்தியமில்லை – துரை வைகோ கோவையில் பரபரப்பு பேட்டி...
ஒரே நாளில் 3 இடங்களில் ரெய்டு! கோவை பத்திர பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி..
ஒரே நாளில் 3 இடங்களில் ரெய்டு! கோவை பத்திர பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி..
சாக்கு மூட்டையில் கட்டி சாக்கடையில் வீசப்பட்ட இளைஞர் உடல்! கோவையில் கொலை மர்மம் அம்பலம்.
சாக்கு மூட்டையில் கட்டி சாக்கடையில் வீசப்பட்ட இளைஞர் உடல்! கோவையில் கொலை மர்மம் அம்பலம்.
அனைத்து திட்டங்களையும் உடனே செயல்படுத்த முடியாது.தவெக அரசுக்கு ஆதரவாக துரை வைகோ கருத்து!
அனைத்து திட்டங்களையும் உடனே செயல்படுத்த முடியாது.தவெக அரசுக்கு ஆதரவாக துரை வைகோ கருத்து!

வீடியோ

Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை
BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
Embed widget