மேலும் அறிய

ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர் பணம் கேட்கும் வீடியோ வைரல்: கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை

ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் சேர 10 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் கேட்பதாக சர்ச்சை எழுந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் தற்போது ஒரு வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

நீலகிரி மாவட்டம் உதகை அரசுக் கலைக் கல்லூரி ஆதி திராவிடர் விடுதியில் சேர மாணவர்களிடம் கல்லூரி முதல்வர் பணம் கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், கோவை மாவட்ட கல்வி இயக்க துணை இயக்குநர் விசாரணை நடத்தி வருகிறார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 4,500 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் பெரும்பாலான மாணவர்கள், ஏழை எளிய, விவசாயிகள் மற்றும் தேயிலைத் தோட்ட குழந்தைகளாக உள்ளனர். தற்போது சமவெளிப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் இங்கு வந்து பயின்று வருகின்றனர்.  இவர்கள் விடுதிகளில் தங்கி பயில வேண்டிய நிலை உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மற்றும் கூடலூர் ஆகிய பகுதிகளில் மட்டுமே அரசு கலைக் கல்லூரி உள்ளது. தனியார் கல்லூரிகள் எதுவும் இல்லை. இதனால் அனைத்து மாணவ, மாணவிகளும் இந்த இரண்டு கல்லூரிகளிலேயே சேர்ந்து படிக்க வேண்டியுள்ளது. இல்லையெனில் கோவையில் உள்ள கல்லூரிகளுக்கு சென்று படிக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில், இந்த கல்லூரியில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் சேர 10 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் கேட்பதாக சர்ச்சை எழுந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் தற்போது ஒரு வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அந்த வீடியோவில், கல்லூரி முதல்வர் அருள் ஆண்டனியிடம் ஒரு மாணவர் பணம் உள்ள பிரவுன் கவரை வழங்குகிறார். அப்போது மாணவரை பார்த்து, “சீக்கிரம் கொடுத்து விடுங்கள். அப்போதுதான் இடம் கிடைக்கும்” எனக் கல்லூரி முதல்வர் அருள் ஆண்டனி கூறுவது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்காக சில பேராசிரியர்கள் ஏற்கனவே லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக மாணவர்கள் விரும்பிய துறைக்கு மாற்றி தருவதற்காக பேராசிரியர் ரவி என்பவர் மாணவர்களிடம் பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் கலைக் கல்லூரி முதல்வரே விடுதி ஒதுக்கீடு செய்ய பணம் பெற்றதாக புகார் எழுந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கோவை மாவட்டக் கல்வி இயக்கக துணை இயக்குநர் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

KPK Jayakumar Death : “ராமஜெயம் கொலை வழக்குபோல் ஆகும் ஜெயக்குமார் வழக்கு” சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றமா..?
KPK Jayakumar Death : “ராமஜெயம் கொலை வழக்குபோல் ஆகும் ஜெயக்குமார் வழக்கு” சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றமா..?
TN Weather Update: தமிழ்நாட்டில் தொடரப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது? முழு விவரம்
TN Weather Update: தமிழ்நாட்டில் தொடரப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது? முழு விவரம்
Crime: ஆபாச வீடியோக்கள்! ஆண்களை மிரட்டி பணம், கார் பறித்த இரண்டு பெண்கள் - போலீசில் சிக்கியது எப்படி?
Crime: ஆபாச வீடியோக்கள்! ஆண்களை மிரட்டி பணம், கார் பறித்த இரண்டு பெண்கள் - போலீசில் சிக்கியது எப்படி?
Latest Gold Silver Rate: அப்பாடா! திங்கள் கிழமையே குறைந்த தங்கம் விலை..! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
அப்பாடா! திங்கள் கிழமையே குறைந்த தங்கம் விலை..! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Red Pix Felix Wife : ”FELIX உயிருக்கு ஆபத்துஎன் கணவர் எங்கே?” பெலிக்ஸ் மனைவி கேள்விEV Velu Son Car Accident : கார் விபத்தில் சிக்கிய மகன் கலக்கத்தில் எ.வ.வேலு பதற வைக்கும் CCTV காட்சிAsaduddin Owaisi plays cricket : கிரிக்கெட் ஆடிய ஓவைசி! குதூகலமான சிறுவர்கள்! பிரச்சார சுவாரஸ்யம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KPK Jayakumar Death : “ராமஜெயம் கொலை வழக்குபோல் ஆகும் ஜெயக்குமார் வழக்கு” சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றமா..?
KPK Jayakumar Death : “ராமஜெயம் கொலை வழக்குபோல் ஆகும் ஜெயக்குமார் வழக்கு” சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றமா..?
TN Weather Update: தமிழ்நாட்டில் தொடரப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது? முழு விவரம்
TN Weather Update: தமிழ்நாட்டில் தொடரப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது? முழு விவரம்
Crime: ஆபாச வீடியோக்கள்! ஆண்களை மிரட்டி பணம், கார் பறித்த இரண்டு பெண்கள் - போலீசில் சிக்கியது எப்படி?
Crime: ஆபாச வீடியோக்கள்! ஆண்களை மிரட்டி பணம், கார் பறித்த இரண்டு பெண்கள் - போலீசில் சிக்கியது எப்படி?
Latest Gold Silver Rate: அப்பாடா! திங்கள் கிழமையே குறைந்த தங்கம் விலை..! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
அப்பாடா! திங்கள் கிழமையே குறைந்த தங்கம் விலை..! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?
CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?
AP Assembly Elections: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு - ஆர்வமுடன் வாக்களித்த பிரபலங்கள்!
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு - ஆர்வமுடன் வாக்களித்தபிரபலங்கள்!
Pavithra Jayaram: அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
Lok Sabha Election 2024 LIVE: பெரும் பதற்றம்! ஆந்திராவில் வாக்கு இயந்திரங்கள் அடித்து உடைப்பு
Lok Sabha Election 2024 LIVE: பெரும் பதற்றம்! ஆந்திராவில் வாக்கு இயந்திரங்கள் அடித்து உடைப்பு
Embed widget