மேலும் அறிய

Virugambakkam : ‘மல்லுக்கட்டும் நிர்வாகிகள்’ விருகம்பாக்கம் திமுகவில் சீட் யாருக்கு..?

'விருகம்பாக்கம் தொகுதியில் பாஜக சார்பில் தமிழிசை போட்டியிட முடிவு செய்து வரும் நிலையில், அவருக்கு டஃப் கொடுக்கும்விதமாக இன்னொரு பெண் வேட்பாளரையே விருகம்பாக்கம் தொகுதியில் இறக்க திமுக திட்டமிட்டுள்ளது’

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகளும் விருப்ப மனு விநியோகம், கூட்டணி பேச்சுவார்த்தைகளை தொடங்கிவிட்டன. இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளில் கட்சித் தலைமை தீவிரமாக இறங்கியுள்ளது. குறிப்பாக, விருகம்பாக்கம் தொகுதியில் திமுக, அதிமுக, த.வெ.க, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவுகிறது.Virugambakkam : ‘மல்லுக்கட்டும் நிர்வாகிகள்’ விருகம்பாக்கம் திமுகவில் சீட் யாருக்கு..?

விருகம்பாக்கம் திமுகவில் யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?

திமுக பொறுத்தவரை விருகம்பாக்கத்தில் யாருக்கு எம்.எல்.ஏ சீட் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம். அதில், கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வணிகர் சங்க பேரவை தலைவர் விக்கரமராஜாவின் மகனும் தென்சென்னை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளருமன ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறையும் போட்டியிட சீட் கேட்டு வருகிறார் பிரபாகர் ராஜா. ஆனால், அவர் மீது எழுந்திருக்கும் விமர்சனங்கள், சர்ச்சைகளால் கட்சித் தலைமை கடும் அப்செட்டில் இருக்கிறது. அதோடு, பிரபாகர்ராஜாவின் தந்தையின் ஒத்துழைப்பும் இந்த முறை அவருக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதனால், இந்த முறை பிரபாகர் ராஜாவுக்கு திமுக தலைமை வாய்ப்பு கொடுக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.Virugambakkam : ‘மல்லுக்கட்டும் நிர்வாகிகள்’ விருகம்பாக்கம் திமுகவில் சீட் யாருக்கு..?

தனசேகரனின் தீவிர முயற்சி

அதே நேரத்தில் இந்த முறை எப்படியாவது சீட் பெற்றுவிட வேண்டும் என்று கே.கே.நகர் தனசேகரனும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், மாமன்ற உறுப்பினருமான கே.கே.நகர் தனசேகரன்  இரண்டு முறை அதாவது கடந்த 2011, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் திமுக சார்பில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இதையடுத்து, 2021ம் ஆண்டு அவருக்கு திமுக தலைமை வாய்ப்புக் கொடுக்கவில்லை. இவர் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ள நிலையில், சமீபத்தில் அவரது பேரன் சந்துரு தனது தாத்தாவின் அதிகாரம் இருக்கும் தைரியத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் மீது காரை மோதிய சம்பவமும் அந்த வழக்கும் அவரது அரசியல் நகர்வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால், இந்த முறை தனசேகரன் பேரை திமுக தலைமை பரிசீலிக்குமா? என்பதும் விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது.

 

கே.கே.நகர் தனசேகரன்
கே.கே.நகர் தனசேகரன்

தமிழிசை போட்டியிடும் விருகம்பாக்கம்

அதிமுக கூட்டணி சார்பில் பாஜகவை சார்ந்த  தமிழிசை சௌந்தர்ராஜன் இந்த தொகுதியில் போட்டியிட முயற்சித்து வருகிறார்.  அப்படி தமிழிசை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டால்  திமுக சார்பில்  மகளிர் வேட்பாளர் நிறுத்தப்படலாம்  என்ற பேச்சும் அடிபடுகிறது. 

விருகம்பாக்கம் பகுதி திமுக மகளிருக்கா?

இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் மகளிருக்கும் கணிசமான தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, வெல்லும் தமிழ் பெண்கள் மாநாடு மற்றும் வெல்லும் தமிழ்ப் பெண்கள் - வீடு வீடாகப் பிரசாரம் மூலம் பெண்களின் வாக்குகளை பெற திமுக தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. அதன் அடிப்படையில், மகளிர் அணி நிர்வாகிகள், வேட்பாளர்களாகப் போட்டியிட திமுக சார்பில் தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பிருப்பதாக  அறிவாலய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ரத்னா லோகேஸ்வரன்

ரத்னா லோகேஷ்வரனுக்கு வாய்ப்பு

அந்த வகையில், விருகம்பாக்கம் தொகுதியில் 128வது வார்டில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினராகவும், திமுக மாநில மகளிரணி சமூக வலைத்தள நிர்வாகியுமான ரத்னா லோகேஷ்வரன் (எ) ஸ்டெல்லா ஜாஸ்மின் ரத்னா  பெயரும் விருகம்பாக்கம் வேட்பாளர் ரேசில் இருக்கிறது.

விருகம்பாக்கம் 128வது வார்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் மூலம் மக்களிடையே கட்சிக்கு நல்ல பெயரை பெற்று தந்ததன் மூலமும்,  மழை, வெள்ள பாதிப்பின் போது இரவு பகல் பாராமல் மக்களோடு மக்களாக இவர் பணியாற்றியதும் பொது மக்கள் மற்றும் சமூக வலைத்தளத்தில் பெரும்  வரவேற்பை பெற்றது.  எனவே, இந்த முறை புதுமுகமான ரத்னாவும் இந்த போட்டியில் இணைந்திருக்கிறார்.

எனினும், விருப்ப மனு அளிக்கப்பட்ட பிறகு, நடைபெறும் நேர்காணலிலேயே வேட்பாளர் தேர்வுசெய்யப்பட்டு அறிவிப்படவுள்ளார்.

விருகம்பாக்கத்தில் தேமுதிக?

அதே நேரத்தில், திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றிருக்கும் நிலையில், இந்த  தொகுதியை கூட்டணிக்கு வழங்கலாமா எனவும் திமுக தலைமை யோசித்து வருகிறது.

தலைப்பு செய்திகள்

சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
" கஞ்சா புழக்கம்...பாதுகாப்பு எங்கே ? " அமைச்சர்களை முற்றுகையிட்ட மக்கள்
Tondiarpet IOC Bus Terminus: 40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு விடிவுகாலம்! வடசென்னையில் நடக்கப்போகும் அந்த பிரம்மாண்ட மாற்றம்!
40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு விடிவுகாலம்! வடசென்னையில் நடக்கப்போகும் பிரம்மாண்ட மாற்றம்!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
Embed widget