Airport Kilambakkam Metro: பிறகென்ன, பிரச்னை ஓவர்; விமான நிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ - ரூ.1964 கோடி ஒதுக்கிய தமிழக அரசு
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு 1,964 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலான 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு, மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக 9,445 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டத்திற்கு அனுமதி அளித்த நிலையில், தற்போது 1,964 கோடி ரூபாய் நிதி ஒதக்கியுள்ளது.
நிலம் கையகப்படுத்தும் பணி
இந்த மெட்ரோ வழித்தட திட்டத்திற்காக, நிலம் கையகப்படுத்தும் பணிக்கு கடந்த மாதம் தமிழ்நாடு அரசு, மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்க அனுமதி வழங்கியது. இதையடுத்து, நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கின.
சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து, கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வரை சுமார் 15.5 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கான அறிவிப்பு வெளியானது.
இதைத் தொடர்ந்து, கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் வழித்தம் அமைப்பதற்கான, திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் திட்ட அறிக்கைக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து, அது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த வழித்தடத்தில் நிலங்களை கையகப்படுத்துவதற்கான ஒப்புதலை, கடந்த ஏப்ரல் மாதம் மெட்ரோ நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு கூழங்கியது. இதையடுத்து, கடந்த மாதம் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் மெட்ரோ அதிகாரிகள் நிலம் கையகப்படுத்தும் பணியை தொடங்கினர்.
எத்தனை மெட்ரோ நிலையங்கள்.?
கிளாம்பக்கத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வரை 13 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம், பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலட்சுமி நகர், திரு.வி.க., நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கங்கரணை, வண்டலூர் ரயில் நிலையம், வண்டலூர் உயிரியல் பூங்கா இறுதியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை இந்த மெட்ரோ ரயில் வழித்தடம் அமைய உள்ளது.
முதற்கட்ட நிதியை விடுவித்த தமிழ்நாடு அரசு
இந்நிலையில் தான், விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை, மெட்ரோ ரயில வழித்தடத்தை அமைக்க, முதற்கட்டமாக 1,964 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.
இதன் மூலம், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு தடையற்ற சாலைப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ இணைப்பை வழங்கும். வெளிவட்டச் சாலை உடன் இணைப்பதற்காக, தாம்பரம் அருகே இடைநிலை சாய்வுப் பாதைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
இந்த மேம்பாலச் சாலை நேரடியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் வந்து, செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படும். அதில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் மற்றும் வண்டலூர் வழியாக செல்லும். இது, கிளாம்பாக்கம் பேருந்து முனையம், விமான நிலையம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையம் போன்ற முக்கிய போக்குரத்துகளுக்கு இணைப்பை வழஙகும் என்பது குறிப்பிடத்தக்கது.



















