மேலும் அறிய

மனைவி மீது சந்தேகப்பட்ட கணவன் !! சந்தேகத்தால் ஒரு குடும்பமே மறைந்த சோகம்

கணவனின் சந்தேகத்தால் குழந்தை உட்பட மனைவி இறந்த சோகம்

மனைவி மீது சந்தேகம்

மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டம் பெடியா காவல் எல்லைக்குட்பட்ட பக்காவா கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில். இவரது மனைவி சம்பாபாய் (வயது 30). இந்தத் தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சுனில் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த புதன் கிழமை இரவு தம்பதியினரிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சுனில், தனது மனைவி சம்பாபாயை சரமாரியாகக் கைகளாலும், குச்சியாலும் தாக்கியுள்ளார். அந்தச் சமயத்தில், சம்பாபாய் தனது 6 மாதக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்துள்ளார்.

குழந்தையின் மூச்சு குழாயில் சிக்கிய தாய்ப்பால்

சுனில் தாக்கிய வேகத்தில் நிலை தடுமாறிய சம்பாபாய் கதவோரம் விழுந்து மயக்கமடைந்துள்ளார். பின்னர் அவர் உயிரிழந்தார். தாய் தாக்கப்பட்ட அதிர்ச்சியில், பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தையின் மூச்சுக் குழாயில் பால் ஏறியதால் , அந்தக் குழந்தையும் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தது.

இந்தக் கொடூரச் சம்பவத்தை தம்பதியினரின் மற்ற இரண்டு குழந்தைகளும் நேரில் பார்த்து அழுதுள்ளனர். ஆனால், மனைவி மயக்கமடைந்து விட்டதாகக் கருதிய சுனில், அமைதியாகத் தூங்கச் சென்றுள்ளார். வீட்டில் தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.

கொலை செய்ததை ஒப்பு கொண்ட கணவன்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவீந்திர வர்மா மற்றும் தடயவியல் நிபுணர்கள் உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். சடலங்களுக்கு அருகிலேயே அமர்ந்திருந்த சுனிலை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், அவரே கொலையைச் செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து சுனிலை கைது செய்த போலீசார், அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். உயிரிழந்த தாய் மற்றும் குழந்தையின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சந்தேகத்தால் ஒரு குடும்பமே சிதைந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஆபாசமாக பேசினாலே கைதுதான்... முதல்வர் என்று பாராமல் - அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை
ஆபாசமாக பேசினாலே கைதுதான்... முதல்வர் என்று பாராமல் - அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவுடன் கூடிய MISSO ரோபோடிக் தொழில்நுட்பம்: முழங்கால் மாற்று சிகிச்சையில் புதிய புரட்சி..
செயற்கை நுண்ணறிவுடன் கூடிய MISSO ரோபோடிக் தொழில்நுட்பம்: முழங்கால் மாற்று சிகிச்சையில் புதிய புரட்சி..
"சேகர்பாபு கேட்டால் வீடியோ வெளியிட தயார்" பழைய வீடியோ அலுவலகத்தில் தான் உள்ளது - அமைச்சர் ரமேஷ்
தனுஷ் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் ? அமைச்சர் மரிய வில்சன் ஓபன் டாக்
தனுஷ் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் ? அமைச்சர் மரிய வில்சன் ஓபன் டாக்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
தனியார் பேருந்துகளை அதிவேகமாக இயக்கினால்... வட்டார போக்குவரத்து அலுவலர் கடும் எச்சரிக்கை
தனியார் பேருந்துகளை அதிவேகமாக இயக்கினால்... வட்டார போக்குவரத்து அலுவலர் கடும் எச்சரிக்கை
முருகனை மனமுருகி வேண்டிய எடப்பாடி பழனிசாமி.. உலகப் புகழ்பெற்ற கோயிலுக்கு திடீர் பயணம் - காரணம் என்ன?
முருகனை மனமுருகி வேண்டிய எடப்பாடி பழனிசாமி.. உலகப் புகழ்பெற்ற கோயிலுக்கு திடீர் பயணம் - காரணம் என்ன?
செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்
செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்
இன்றைய வானிலை அறிக்கை: நெல்லை, குமரியை உலுக்கும் 'ரெட் அலர்ட்' - சென்னைவாசிகளே உஷார்!
இன்றைய வானிலை அறிக்கை: நெல்லை, குமரியை உலுக்கும் 'ரெட் அலர்ட்' - சென்னைவாசிகளே உஷார்!
Embed widget