மேலும் அறிய

தமிழ்நாட்டில் இதுதான் ஃபர்ஸ்ட்: முட்டுக்காட்டில் அமைய உள்ள இரண்டடுக்கு கப்பல் உணவகம்!

இந்த உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட இடமாகவும், மேல் தளம் திறந்த வெளியாக சுற்றுலா பயணிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டு உணவருந்தும் வசதியுடனும் வர உள்ளது.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம் மற்றும் 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான மிதக்கும் உணவகக் கப்பலை அமைக்கும் பணி திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் மிதக்கும் உணவகம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் 'போட் ஹவுஸ்' இயங்கி வருகிறது. இந்த போட் ஹவுஸில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ள மிதவை படகுகள், மோட்டார் படகுகள், விரைவு படகுகள் ஆகியவை இயக்கப்பட்டு வருகின்றன. பல ஆண்டு காலமாக இயங்கி வரும் இந்த படகு இல்லங்கள் மீதான ஈர்ப்பு சென்னை மக்களுக்கு குறைந்து விட்டதை அடுத்து அதனை மேலும் பெரிதாக்க முடிவு செய்யப்பட்டது. சுற்றுலாப் பயணிகளையும், சென்னை வாசிகளின் வீக்கெண்ட் விசிட்களையும் அதிக அளவில் ஈர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, 5 கோடி ரூபாய் செலவில் 125 அடி நீளம், 25 அடி அகலம் கொண்ட இரண்டு அடுக்கு மிதக்கும் உணவகக் கப்பலை இந்த படகு இல்லம் அறிமுகப்படுத்த உள்ளது.

தமிழ்நாட்டில் இதுதான் ஃபர்ஸ்ட்: முட்டுக்காட்டில் அமைய உள்ள இரண்டடுக்கு கப்பல் உணவகம்!

அமைச்சர் தொடங்கி வைத்த திட்டம்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கொச்சின் கிராண்டியர் மரைன் இன்டர்நேஷனல் ஆகியவற்றின் மூலம் தனியார் மற்றும் பொது பங்களிப்பு திட்டத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். பல முக்கிய அம்சங்கள் கொண்ட இந்த கப்பல் உணவகம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் 60 குதிரை ஆற்றல் திறனுடைய இயந்திரம் மூலம் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்: குழந்தைகள் ஆபாச வீடியோக்கள் விற்ற இந்திய இளைஞர்.. 188 மாத சிறைத் தண்டனை விதித்த அமெரிக்க நீதிமன்றம்

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு முதன்மை செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவரான சந்தரமோகன், சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அ.ர.ராகுல்நாத் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி முன்னிலை வகித்தார். இந்த உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட இடமாகவும், மேல் தளம் திறந்த வெளியாக சுற்றுலா பயணிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டு உணவருந்தும் வசதியுடனும் வர உள்ளது.

தமிழ்நாட்டில் இதுதான் ஃபர்ஸ்ட்: முட்டுக்காட்டில் அமைய உள்ள இரண்டடுக்கு கப்பல் உணவகம்!

சிறப்பம்சங்கள்

  • இந்த கப்பல் உணவகம், தமிழகத்தின் முதல் மிதக்கும் உணவகமாக வர உள்ளது. 
  • இந்த ரெஸ்டாரண்ட் க்ரூஸ் கப்பல் இரண்டு அடுக்குகளுடன் கட்டப்படும். 
  • இதன் அமைப்பு 125 அடி நீளம் மற்றும் 25 அடி அகலத்தில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • உணவகத்தின் தரை தளம் முழுவதும் ஏ/சி வசதியுடன் வரும்.
  • முதல் தளம் திறந்த வெளியாக வடிவமைக்கப்பட உள்ளது.
  • சமையலறை, சேமிப்பு அறை, கழிப்பறை, இயந்திர அறை ஆகியவை இதனுள்ளேயே கட்டப்பட உள்ளன.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?
IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram News | செம்மண் குவாரி ஊழல்அத்துமீறிய பாமக நிர்வாகி கண்டுகொள்ளாத கனிமவளத்துறைAnnamalai SP Velumani | அ.மலைக்கு ராஜ மரியாதை!மீண்டும் துளிர்க்கும் கூட்டணி?கடும் அப்செட்டில் EPSNainar Nagendran in TVK: TVK - வில் நயினார் - குஷ்பூ?தட்டித்தூக்கிய தவெக விஜய்! அப்செட்டில் பாஜக!Dad Son Ear Piercing Ceremony : ’’அப்பாவுக்கும் காது குத்தனும்’’அடம்பிடித்த சிறுவன்ஆசையை நிறைவேற்றிய தந்தை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?
IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?
திமுகவால் எங்களுக்கு நெருக்கடியா..? -  திருமாவளவன் சொல்வது என்ன?
திமுகவால் எங்களுக்கு நெருக்கடியா..? - திருமாவளவன் சொல்வது என்ன?
தாம்பரத்திற்கு நாளை முதல் பஸ் இல்லை.. அப்செட்டில் தென் மாவட்ட மக்கள்!
தாம்பரத்திற்கு நாளை முதல் பஸ் இல்லை.. அப்செட்டில் தென் மாவட்ட மக்கள்!
அமைச்சர் சொல்வது சிரிப்பாக உள்ளது; இது கூடவா தெரியாது? ஸ்டாலின் கேட்ட அதே கேள்விதான்: அண்ணாமலை ரிப்ளை!
அமைச்சர் சொல்வது சிரிப்பாக உள்ளது; இது கூடவா தெரியாது? ஸ்டாலின் கேட்ட அதே கேள்விதான்: அண்ணாமலை ரிப்ளை!
TN Rain: இன்று இரவு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: லிஸ்ட் இதோ.!
இன்று இரவு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: லிஸ்ட் இதோ.!
Embed widget