மேலும் அறிய
Advertisement
சென்னை... காஞ்சிபுரம்... திருவள்ளூர்... காலையில் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்!
உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் முடிவு, மழை , தலைவர்கள் பிரச்சாரம் உள்ளிட்ட முக்கிய செய்திகள் இதோ
1. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு (புதன்கிழமை) நடைபெறும் இடங்களில் திங்கள்கிழமை மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைய உள்ளது.
2. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக புகார்கள் தெரிவிக்க தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) லிங்கேஸ்வரன் (9778619552), தொழிலாளர் துணை ஆய்வர் கமலா (9952639441), தொழிலாளர் உதவி ஆய்வர் மாலா (9790566759), பரங்கிமலை தொழிலாளர் உதவி ஆய்வர் சிவசங்கரன் (94441 52829), காஞ்சிபுரம் முத்திரை ஆய்வர் வெங்கடாச்சலம் (9444062023)ஆகிய செல்போன் எண்களிலும் 044-27237010 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
3. செங்கல்பட்டு மாவட்டத்தில், பரங்கிமலை தொழிலாளர் துணை ஆய்வர் மனோஜ் ஷியாம் சங்கர் (8667570609), செங்கல்பட்டு தொழிலாளர் உதவி ஆய்வர் பிரபாகரன் (9944214854) மதுராந்தகம் தொழிலாளர் உதவி ஆய்வர் பொன்னிவளவன் (9789253419), தாம்பரம் தொழிலாளர் உதவி ஆய்வர் வெங்கடேசன் (8870599105), செங்கல்பட்டு முத்திரை ஆய்வர் சிவராஜ் (7904593421), பரங்கிமலை முத்திரை ஆய்வர் வேதநாயகி (9884264814) ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
4. மூளையை பயன்படுத்தி மக்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்கான எந்த தேர்தல் வாக்குறுதியையும் திராவிட முன்னேற்றக் கழகம் நிறைவேற்றவில்லை என காஞ்சிபுரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்தார்.
5. உத்திரமேரூர் தொடக்க கூட்டுறவு வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில், போலி நகைகளை அடமானம் வைத்து, 1.64 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, வங்கி செயலர், மேற்பார்வையாளர், நகை மதிப்பீட்டாளர் என மூன்று பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
6. வாட்ஸ் அப் வீடியோ காலில் இளம்பெண்ணுடன் நிர்வாண கோலத்தில் கொஞ்சலுடன் பேசிய திருக்கழுக்குன்றம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டிலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
7. உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க செல்பவர்களுக்கு வசதியாக சென்னையில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
8.தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தமிழக கடற்பகுதியில் 3 கிமீ உயரத்துக்கு வானில் வளி மண்டல மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் இன்று பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.
9. நகைகளை உருக்கி தங்கக் கட்டிகளாக்கும் பணியில், எந்த தவறும் நடக்காது,'' என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
10. மத்திய சுகாதாரத்துறை சார்பில், தமிழகத்திற்கு மேலும் 5.4 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டது. இந்த தடுப்பூசிகள், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள மருத்துவ கிடங்கில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion