மேலும் அறிய

BJP Cadre Murdered : இந்த 3 ரவுடிகள்தான்! பாஜக நிர்வாகி கொலையில் வழக்குப்பதிவு செய்த போலீஸ்! தீவிர தேடுதல் வேட்டை!

பாஜக நிர்வாகி கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மூன்று ரவுடிகளையும் சிந்தாதிரிப்பேட்டை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

3 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக நிர்வாகி பாலசந்தர் கொலை வழக்கில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரவுடிகளான பிரதீப், சகோதரர் சஞ்சய், மற்றொரு ரவுடி கலைவாணன் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சிந்தாதிரிப்பேட்டை தனிப்படை போலீசார் தலைமறைவாக உள்ள மூன்று ரவுடிகளையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.

பாலச்சந்தர்

சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் பாஜக பட்டியலினப் பிரிவுத் தலைவராக இருந்து வந்தார். இவர் நேற்று இரவு  தனது பாதுகாப்பிற்காக காவல்துறை வழங்கிய பி.எஸ்.ஓ பாலகிருஷ்ணனுடன் சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கர் தெருவுக்கு சென்ற பாலசந்திரன் அங்கு நண்பர் சிலருடன்  பேசி கொண்டிருந்தார்.

சரமாரியாக வெட்டிக் கொலை..

அங்கு பாலசந்தர் பேசிக்கொண்டிருந்தபோது பி.எஸ்.ஓ பாலகிருஷ்ணன் அருகிலிருந்த டீக்கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலசந்தரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினர். இதனை பார்த்து ஓடிவந்த  பி.எஸ்.ஓ உடனே காவல்துறையினருக்கு  தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அங்கு வந்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார் பாலசந்தர் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறை பாதுகாப்பு மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள  பகுதியில் வைத்து பாஜக பிரமுகரை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை  ஏற்படுத்தி உள்ளது.

கொலைக்கான காரணம்..

கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், துணிக்கடை நடத்தி வரும் பாலச்சந்தரின் உறவினரின் கடையில் அதே பகுதியை சேர்ந்த பிரதீப் என்பவர் அடிக்கடி மாமூல் கேட்டு தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல, பாலச்சந்தரின் உறவினர் கடையில் அடிக்கடி துணி எடுத்துவிட்டு ரவுடி பிரதீப்பின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் பணம் கொடுக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பாலச்சந்தர், பிரதீப்பிடம் கேட்டுவந்துள்ளார்.  இதனால் அவர் மீது பாலச்சந்தர் காவல்துறையில் தகவல் கொடுத்துள்ளார். பாலச்சந்தர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததால் பாஜக பட்டியலினப்பிரிவு தலைவர் பாலச்சந்தர் மற்றும் பிரதீப் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலின் விளைவாக தான் பாலச்சந்தர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவ ந்திருக்கிறது. கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுக பாலச்சந்தரின் சகோதரி அளித்த புகாரின் பேரில் ரவுடிகளான பிரதீப், சகோதரர் சஞ்சய், மற்றொரு ரவுடி கலைவாணன் மீது  வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 3 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

" அக்கா கொடுத்த யோசனை " மனைவியைக் கொன்று விட்டு டெலிவரி ஊழியர் செய்த காரியம்
“ரூ.10,000-ல் தொழில் திறன்! சென்னையில் 5 நாள் லேப்டாப் பயிற்சி – அரசு சான்றிதழ் இலவசம்!”
“ரூ.10,000-ல் தொழில் திறன்! சென்னையில் 5 நாள் லேப்டாப் பயிற்சி – அரசு சான்றிதழ் இலவசம்!”
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
6 ஆண்டு கள்ளக் காதல் !! திருமணம் மீறிய உறவு - 150 சவரன் நகையோடு பறந்த பெண்
6 ஆண்டு கள்ளக் காதல் !! திருமணம் மீறிய உறவு - 150 சவரன் நகையோடு பறந்த பெண்

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
MG Hector Storm: பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
Embed widget