மேலும் அறிய

விளையாட்டு விபரீதம் ; பகடை விளையாட்டில் தகராறு...வாலிபர் கொடூரக் கொலை !!

டாஸ்மாக் கடை அருகே விளையாடிக் கொண்டிருந்த கூலி தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

"மது போதையில் பரமபதம் விளையாட்டால் தகராறு"

சென்னை மணலி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ராமராஜ் ( வயது 35 ), ராஜா ( வயது 52 ), பெருமாள் ( வயது 43 ), லோகநாதன் என்கிற பட்டு ( வயது 32 ), முரளி ( வயது 35 ) ஆகிய 5 பேரும் கூலி வேலை செய்து வந்துள்ளனர். டாஸ்மாக் கடை அருகே தாயபாஸ் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறு கை கலப்பாக மாறிய நிலையில் , அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

இதையடுத்து , இரவு மீண்டும் அதே பகுதியில் ராமராஜ் , ராஜா , பெருமாள் ஆகிய 3 பேரும் மது போதையில் பரமபதம் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த லோகநாதன் என்ற பட்டு மற்றும் முரளி ஆகியோர் , ஏற்கெனவே ஏற்பட்ட தகராறு தொடர்பாக 3 பேரிடமும் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த சிறிய காய்கறி வெட்டும் கத்தியால் ராமராஜ், ராஜா, பெருமாள் ஆகியோரை சரமாரியாக வெட்டியும் குத்தியும் தாக்கியதாக கூறப்படுகிறது.

"கொலையில் முடிந்த விளையாட்டு"

இந்த தாக்குதலில் ராமராஜுக்கு பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். ராஜா மற்றும் பெருமாள் ஆகிய இருவரும் சிறிய அளவிலான வெட்டுக் காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாதவரம் பால்பண்ணை காவல் நிலைய போலீசார் உடனடியாக அங்கு சென்று, காயமடைந்த ராஜா மற்றும் பெருமாளை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம் , உயிரிழந்த ராமராஜின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் , கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் முரளி மற்றும் லோகநாதன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் , அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
Gold Rate: நெருங்கும் தீபாவளி.. மீண்டும் வேலையை காட்டும் தங்கம்.. இன்றைய நிலவரம் என்ன?
Gold Rate: நெருங்கும் தீபாவளி.. மீண்டும் வேலையை காட்டும் தங்கம்.. இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் குப்பைகளுக்கு முடிவு கட்ட ரூ.275 கோடி திட்டம்! பெருங்குடி, கொடுங்கையூரில் அதிரடி!
சென்னையில் குப்பைகளுக்கு முடிவு கட்ட ரூ.275 கோடி திட்டம்! பெருங்குடி, கொடுங்கையூரில் அதிரடி!
செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் இன்று: 14.76 அடியாக நீர்மட்டம்! நீர் வரத்து, வெளியேற்றம் எவ்வளவு?
செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் இன்று: 14.76 அடியாக நீர்மட்டம்! நீர் வரத்து, வெளியேற்றம் எவ்வளவு?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
பால்கனியில் இருந்து குட்காவை துப்பிய முதியவர் உயிரிழந்தது எப்படி?
பால்கனியில் இருந்து குட்காவை துப்பிய முதியவர் உயிரிழந்தது எப்படி?
Cyclone Arnab: 140 கி.மீ. வேகம்! ருத்ரதாண்டவம் ஆடப்போகும் அர்னாப் புயல்.. மழை அதிகரிக்குமா? டெல்டா வெதர்மேன் கூறுவது என்ன?
Cyclone Arnab: 140 கி.மீ. வேகம்! ருத்ரதாண்டவம் ஆடப்போகும் அர்னாப் புயல்.. மழை அதிகரிக்குமா? டெல்டா வெதர்மேன் கூறுவது என்ன?
15 நாட்களாகியும் கிடைக்காத ஹேமலதா! மயக்க மருந்து தெளித்து கடத்தப்பட்டாரா? 5 ரயில் நிலையங்களில் சிபிசிஐடி விசாரணை!
15 நாட்களாகியும் கிடைக்காத ஹேமலதா! மயக்க மருந்து தெளித்து கடத்தப்பட்டாரா? 5 ரயில் நிலையங்களில் சிபிசிஐடி விசாரணை! செஞ்சி சிறுமி
Embed widget