மேலும் அறிய

விக்னேஷ் மரண வழக்கில் கைதான 6 போலீசாருக்கு ஜாமீன் - சென்னை நீதிமன்றம் உத்தரவு

விக்னேஷ் மரணமடைந்த வழக்கில் கைதான காவல்துறையினர் 6 பேருக்கு சட்டப்பூர்வ ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல்துறை விசாரணையில் வாலிபர் விக்னேஷ் மரணமடைந்த வழக்கில் 90 நாட்கள் கடந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால், இந்த வழக்கில் கைதான காவல்துறையினர் 6 பேருக்கு சட்டப்பூர்வ ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷை கடந்த ஏப்ரல் 18ம் தேதி தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தினர் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில், மறுநாள் மர்மமான முறையில் காவல்  நிலையத்தில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்த சந்தேக மரணம் என்ற வழக்கை,  கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், தலைமை செயலக காலனி சிறப்பு உதவி ஆய்வாளர்கள் குமார், முனாப், காவலர் பவுன்ராஜ்,

 


 

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைகழகத்தின் ஒரு பகுதி, நீர்நிலைகளில் அமைந்துள்ளதாக கூறப்படும்  குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் கிராமத்தில் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகம் மற்றும் அதன் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 35 ஆண்டுகளாக தாங்கள் அனுபவித்து வரும் 31.37 ஏக்கர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு நிலத்தை தங்களுக்கு ஒதுக்கும்படியும், வித்தியாச தொகையும் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வைத்த கோரிக்கையை நிராகரித்து தமிழக அரசு  உத்தரவு பிறப்பித்தது. மேலும், நான்கு வாரங்களுக்குள் இடத்தை காலி செய்யும்படி தஞ்சாவூர் வட்டாட்சியர் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என். மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தரப்பில், அரசு நிலத்துக்கு பதிலாக வேறு நிலத்தை மாற்றிக் கொள்ளும் வகையில் கடந்த மே மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாகவும், அதன்படி மாற்று இடம் வழங்கத் தயாராக இருப்பதாகவும், அதற்கு அனுமதிக்க கோரி அரசுக்கு  விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படுமா என்பதை அரசு விளக்கினால், இந்த வழக்கை நடத்த ஏதுவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

அப்போது தமிழக அரசு தரப்பில்,  ஆக்கிரமிப்பின் மீது 35 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்க விடாமல் பல்கலைக்கழக நிர்வாகம் தடுப்பதாகவும், சீல் வைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தின் பிற பகுதிகளில் சிறுசிறு ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றால், முதலில் சாஸ்த்ரா அக்கிரமித்துள்ள நிலத்தை மீட்டெடுங்கள் என பொதுமக்கள்  வலியுறுத்துவதாகவும், எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

 நீர் நிலை ஆக்கிரமிப்பு உள்ளதால் மாற்று இடம் பெறும் அரசாணை சாஸ்த்ரா பல்கலைகழகத்திற்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதன்பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் சாஸ்த்ரா ஆக்கிரமித்துள்ள 30 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தில் ஒரு பகுதி நீர்நிலை என்பதால் மே மாத அரசாணை பொருந்தாது என அரசு கூறுவதால், ஆக்கிரமிப்பு நிலம் நீர்நிலைதான் என்பதை நிரூபிப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்.

அரசின் நடவடிக்கையால், அங்கு தங்கியுள்ள மற்றும் படிக்கின்ற கல்விக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதால், வழக்கு முடியும் வரை சாஸ்த்ரா பல்கலைக்கழக கட்டடங்கள் சென்னை உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருக்கும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

ஆயுதப்படை காவலர்கள் ஜெகஜீவன், சந்திரகுமார் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் ஆறு பேரும் ஜாமீன் கேட்டு ஏற்கனவே இரண்டு முறை தாக்கல் செய்திருந்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜூன் 7 மற்றும் ஆகஸ்ட் 2ஆம் தேதிகளில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் 6 பேரும் ஜாமீன் கோரி  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மூன்றாவது முறையாக மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்கள்  நீதிபதி எஸ்.அல்லி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மே 7ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், 90 நாட்களை கடந்தும், காவல்துறை விசாரணையை முடித்து குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யாததால், தங்களுக்கு சட்டப்பூர்வ ஜாமீன் வழங்க வேண்டுமென  வாதிடப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி,  6 பேருக்கும் சட்டப்பூர்வ ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Lok Sabha Election LIVE :  விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு; மதியம் 3 மணி நிலவரப்படி 50.80% வாக்குப்பதிவு!
TN Lok Sabha Election LIVE : விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு; மதியம் 3 மணி நிலவரப்படி 50.80% வாக்குப்பதிவு!
"Vote4INDIA" இந்தியா கூட்டணிக்கு ஓட்டு கேட்டாரா நடிகை குஷ்பு? பேரதிர்ச்சியில் பா.ஜ.க.!
TVK Vijay Vote: சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
Watch Video: பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி- சுவாரஸ்ய வீடியோ!
Watch Video: பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி- சுவாரஸ்ய வீடியோ!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Lok Sabha Elections 2024  : பரந்தூர் விவகாரம் தேர்தலை புறக்கணித்த மக்கள்..வெறிச்சோடிய வாக்கு மையம்OPS slams EPS : ”அதிமுக என்கிட்ட வந்துரும்! அ.மலை சரியா சொன்னாரு” OPS அதிரடிAnbil Mahesh casts Vote : ’’பொறுப்பா வரனும்னாலும் பொறுப்புக்கு வரனும்னாலும்..’’பஞ்ச் பேசிய அன்பில்PTR casts vote  : ”2வது சுதந்திர போராட்டம்” பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்? PTR கணிப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Lok Sabha Election LIVE :  விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு; மதியம் 3 மணி நிலவரப்படி 50.80% வாக்குப்பதிவு!
TN Lok Sabha Election LIVE : விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு; மதியம் 3 மணி நிலவரப்படி 50.80% வாக்குப்பதிவு!
"Vote4INDIA" இந்தியா கூட்டணிக்கு ஓட்டு கேட்டாரா நடிகை குஷ்பு? பேரதிர்ச்சியில் பா.ஜ.க.!
TVK Vijay Vote: சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
Watch Video: பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி- சுவாரஸ்ய வீடியோ!
Watch Video: பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி- சுவாரஸ்ய வீடியோ!
Lok Sabha Election 2024: மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
Nainar Nagendran: தர்மத்திற்கும், அதர்மத்திற்குமான போட்டி மகாபாரத போரை போல நன்மையிலேயே முடியும் - நயினார் நாகேந்திரன்
தர்மத்திற்கும், அதர்மத்திற்குமான போட்டி மகாபாரத போரை போல நன்மையிலேயே முடியும் - நயினார் நாகேந்திரன்
Manipur Firing: வாக்குச்சாவடியில் ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள்.. மணிப்பூரில் தொடர் பதற்றம்!
வாக்குச்சாவடியில் ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள்.. மணிப்பூரில் தொடர் பதற்றம்!
Tamil Nadu Election 2024: இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் - ஜோதிமணி நம்பிக்கை
இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் - ஜோதிமணி நம்பிக்கை
Embed widget