மேலும் அறிய

" துர்நாற்றம் வீசிய மூட்டை " CCTV - யே இல்ல !! கொலையாளியை போலீஸ் தூக்கியது எப்படி ?

பெண் ஒருவர் சுத்தியால் அடித்துக் கொலை செய்யப்பட்டு , துணியில் சடலத்தை மூட்டையாக கட்டி வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

" ரத்தக் கறைகளுடன் மூட்டை "

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரலப்பாக்கம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த லதா , கடந்த மூன்று நாட்களாக பணிக்கு வரவில்லை. எனவே சக ஊழியர்கள் அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது , அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் , உடல்நலக் குறைவு காரணமாக அவர் வீட்டில் இருப்பதாக நினைத்துள்ளனர்.

இந்நிலையில் லதா வசித்து வந்த வீட்டின் அருகே சில நாட்களாக கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் , வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது ரத்தக் கறைகளுடன் மூட்டை ஒன்று கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து முத்தாபுதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டை சோதனையிட்டனர்.

" பெண்ணின் செல்போன் ஆய்வு "

அப்போது , மூட்டையை பிரித்து பார்த்ததில் அழுகிய நிலையில் லதாவின் சடலம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சடலத்தை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், லதா கொலை செய்யப்பட்டு சுமார் மூன்று நாட்கள் ஆகியிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

கரலப்பாக்கம் கிராமப்புற பகுதி என்பதால் போதிய சிசிடிவி கேமரா பதிவுகள் இல்லாத நிலையில் , கொலையாளியை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சவால் ஏற்பட்டது. இதையடுத்து, லதாவின் செல்போன் எண்ணை ஆய்வு செய்த போலீசார், அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்த மற்றொரு செல்போன் எண்ணை கண்டறிந்தனர்.

அந்த செல்போன் எண், லதா வசித்த வீட்டின் அருகிலேயே பயன்படுத்தப்பட்டு வந்ததும் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் அந்த செல்போன் எண்ணை பயன்படுத்திய முனிவேல் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

" சுத்தியால் தாக்கி கொலை" 

அப்போது , முனிவேல் லதாவுடன் நெருக்கமாக பழகி வந்ததும் , இருவருக்கும் இடையே பணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் லதாவை சுத்தியால் தாக்கி கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், கொலை செய்த பின்னர் சடலத்திலிருந்து துர்நாற்றம் வெளியேறாமல் இருக்க துணியால் மூட்டை கட்டி வீட்டிற்குள் மறைத்து வைத்ததும் , கொலை நடந்த பின்னரும் முனிவேல் அதே பகுதியில் எவ்வித பதற்றமும் இல்லாமல் சுற்றி திரிந்ததும் விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து முனிவேலை கைது செய்த முத்தாபுதுப்பேட்டை போலீசார் , அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிசிடிவி ஆதாரமே இல்லாத நிலையில், செல்போன் எண்ணை வைத்து போலீசார் துப்பு துலக்கி கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்த சம்பவம் கரலப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

கத்திப்பாராவில் ஒரே நேரத்தில் 6 மெட்ரோ ரயில்கள்! 2027 மார்ச்சில் சென்னைக்கு காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்!
கத்திப்பாராவில் ஒரே நேரத்தில் 6 மெட்ரோ ரயில்கள்! 2027 மார்ச்சில் காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்!
கருப்பை நார்த்திசு கட்டிகள் (Fibroids) கவலையா ? அப்போலோவின் புதிய 3D தொழில்நுட்ப சிகிச்சை மையம்
கருப்பை நார்த்திசு கட்டிகள் (Fibroids) கவலையா ? அப்போலோவின் புதிய 3D தொழில்நுட்ப சிகிச்சை மையம்
Gold Rate Today: மீண்டும் வேலையை காட்டும் தங்கம்.. காலையிலேயே நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி!
Gold Rate Today: மீண்டும் வேலையை காட்டும் தங்கம்.. காலையிலேயே நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி!
TN Weather News: சென்னையில் மழை - 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங்- தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் மழை - 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங்- தமிழக வானிலை அறிக்கை
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election: 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்குமா? இன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு - உச்சகட்ட எதிர்பார்ப்பு
TN By Election: 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்குமா? இன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு - உச்சகட்ட எதிர்பார்ப்பு
Tamilnadu Rain: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை... உங்க மாவட்டத்திற்கு அலர்ட் இருக்கா?
Tamilnadu Rain: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை... உங்க மாவட்டத்திற்கு அலர்ட் இருக்கா?
Siraj: மீண்டும் மீண்டுமா? 2வது டெஸ்டிலும் ஓரங்கட்டப்பட்ட சிராஜ்! என்னதான் நடக்குது இந்திய அணியில்?
Siraj: மீண்டும் மீண்டுமா? 2வது டெஸ்டிலும் ஓரங்கட்டப்பட்ட சிராஜ்! என்னதான் நடக்குது இந்திய அணியில்?
மீண்டும் உருவாகும் புயல்? - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
மீண்டும் உருவாகும் புயல்? - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
மீண்டும் கூட உள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் - வெளியான திடீர் அறிவிப்பு!
மீண்டும் கூட உள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் - வெளியான திடீர் அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையானுக்கு அள்ளிக்கொடுக்கப்பட்ட 46 வகையான தங்க நகைகள் என்னென்ன தெரியுமா? - முழு பட்டியல் இதோ
திருப்பதி ஏழுமலையானுக்கு அள்ளிக்கொடுக்கப்பட்ட 46 வகையான தங்க நகைகள் என்னென்ன தெரியுமா? - முழு பட்டியல் இதோ
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (27-11-2026) ஏகப்பட்ட ஏரியக்களில் மின் தடை அறிவிப்பு? - உங்க பகுதி இருக்கா?  லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (27-11-2026) ஏகப்பட்ட ஏரியக்களில் மின் தடை அறிவிப்பு? - உங்க பகுதி இருக்கா?  லிஸ்ட் இதோ
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிலதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிலதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!
Embed widget