மேலும் அறிய

இன்ஸ்டாகிராம் காதல் !! திருமணத்தை மறைத்த இளைஞர் !! கழிவுநீர் தொட்டியில் கிடந்த சடலம் !!

திருமணத்தை மறைத்து , இன்ஸ்டாகிராமில் காதல் செய்து இளம் பெண்ணை கொலை செய்த இளைஞர்

இன்ஸ்டாகிராம் மூலம் காதல் 

மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தை சேர்ந்த சியா ( வயது 33) என்பவருக்கும் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வசிக்கும் சமீர் ( வயது 35) என்பவருக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

ஏற்கனவே திருமணமான சமீர் அந்த உண்மையை மறைத்து சியாவுடன் பழகியுள்ளார். இதனை அறியாத சியா, தனது குடும்பத்தை விட்டு பிரிந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு போபாலுக்கு வந்து சமீருடன் ஒரே வீட்டில் வாழ தொடங்கியுள்ளார். அப்போது சமீருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த சியாவுக்கும், சமீரின் மனைவிக்கும் இடையே வீட்டில் அடிக்கடி கடும் குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.

ரூ. 5 லட்சம் பணம் கேட்டு மிரட்டல்

சமீரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சியா தொடர்ந்து வற்புறுத்தியதுடன், இல்லையெனில் 5 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சமீர், கடந்த திங்கட்கிழமை இரவு சியாவுடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் போது அவரது கழுத்தை நெரித்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.

இந்த கொலைக்கு சமீரின் தாய், சகோதரர் மற்றும் சகோதரி ஆகியோரும் உடந்தையாக செயல்பட்டுள்ளனர். சியாவின் உடலை ஒரு பெரிய இரும்பு பெட்டிக்குள் திணித்து மூடிய இவர்கள், ஆதாரங்களை மறைப்பதற்காக நள்ளிரவில் வீட்டின் அருகே காலியாக இருந்த இடத்தில் உள்ள கழிவுநீர் தொட்டிக்குள் அந்த பெட்டியை வீசியுள்ளனர்.

கழிவு நீர் தொட்டியில் துர்நாற்றம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு , அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கழிவுநீர் தொட்டியிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அங்கிருந்தவர்களிடம் கூறியுள்ளனர். பொது மக்கள் அங்கு சென்று பார்த்த போது கழிவுநீர் தொட்டிக்குள் ஒரு இரும்பு பெட்டி மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கழிவுநீர் தொட்டியிலிருந்து பெட்டியை மீட்டனர். அதனை திறந்து பார்த்த போது சியாவின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. சியாவின் கையில் இருந்த விளக்கு பச்சை மற்றும் அதில் இருந்த 26 - ம் தேதி மே மாதம் 1992ம் ஆண்டு என்ற பிறந்த தேதியை அடையாளமாக கொண்டு போலீசார் அவரது தகவலை உறுதி செய்தனர்.இந்த கொடூர கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் 24 மணி நேரத்தில் துப்பு துலக்கினர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மனோஜ்பட்வா கூறுகையில் ;

மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் சுமார் நான்கு நாட்கள் பழமையானது. முதற்கட்ட விசாரணையில் சியா கழுத்து நெரித்து கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. கொலைக்கு உடந்தையாக இருந்த சமீரின் தாய், சகோதரர் மற்றும் சகோதரியை கைது செய்துள்ளோம்.

தற்போது தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி சமீரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சியாவிற்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தாலும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இந்த கொலையின் முழு பின்னணியும் தெரிய வரும் என்றார்.

தலைப்பு செய்திகள்

கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
Chennai Power Shutdown ; சென்னையில் நாளை ( 04.08.26 ) மின் தடை !! எந்தெந்த பகுதி தெரியுமா ?
Chennai Power Shutdown ; சென்னையில் நாளை ( 04.08.26 ) மின் தடை !! எந்தெந்த பகுதி தெரியுமா ?
சென்னை மெட்ரோ பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! - வடபழனி நிலையத்தில் என்ன பிரச்சனை? முழு விவரம்!
சென்னை மெட்ரோ பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! - வடபழனி நிலையத்தில் என்ன பிரச்சனை? முழு விவரம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget