மேலும் அறிய

Chennai Rain: நள்ளிரவு முதல் கனமழை எச்சரிக்கை.. சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?

Chennai Rain: கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து முதல் புயல் வங்கக்கடலில் கடந்த 25-ம் தேதி அர்னாப் புயலாக உருவானது. இந்த புயல் தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் ஆந்திராவை புரட்டி எடுத்தது. இதனால் ஆந்திராவில் பல்வேறு இடங்களில் 25 செ.மீ. மேல் பதிவானது. இந்நிலையில் தற்போது  2-வது புயல் தற்போது உருவாகியுள்ளது. இது தற்போது அதி தீவிர புயலாக உருவாகியுள்ளது. இதற்கு முரசு என பெயரிடப்பட்டுள்ளது. 

ஆரஞ்ச் அலர்ட்

இந்த புயலானது நவம்பர் 3-ம் தேதி அன்று நெல்லூர்-நர்சாப்பூர் இடையே பலத்த காற்றுடன் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று திருவள்ளூர்,  மாவட்டத்தில்  ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.

இதையும் படிங்க: Cyclone Murasu: தீவிரமடையும் முரசு புயல்! சென்னையில் மழை எப்படி இருக்கும்? வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!

நாளை காலை முதல் மழை எச்சரிக்கை

மேலும் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், மற்றும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு (KTCC) மாவட்டங்களில் நாளை காலை முதல் மழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

17 மாவட்டங்களுக்கு மழை 

இதனிடையே அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது இரவு 10 மணி வரை 17 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருள்ளூர், கடலூர், தருமபுரி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, நீலகிரி, நெல்லை, திருப்பத்தூர், வேலூர், மதுரை, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள்?

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள் இருந்து வருகின்றனர். தற்போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நள்ளிரவு அல்லது அதிகாலையில் கனமழையின் பெய்யும் பட்சத்தில் விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகும்.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Gold Rate Today: சரசரவென சரிந்த தங்கம் விலை.. சவரன் ரூ.5,120 குறைந்தது.. 4 நாட்களில் தலைகீழாக மாறியது!
Gold Rate Today: சரசரவென சரிந்த தங்கம் விலை.. சவரன் ரூ.5,120 குறைந்தது.. 4 நாட்களில் தலைகீழாக மாறியது!
30 நிமிடப் பயணம் இனி 5 நிமிடம்! ரூ.621 கோடி மேம்பாலம் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் சொன்ன முக்கிய தேதி!
30 நிமிடப் பயணம் இனி 5 நிமிடம்! ரூ.621 கோடி மேம்பாலம் எப்போது திறக்கப்படும்? முக்கிய தேதி!
சென்னை மெட்ரோவில் புதிய சாதனை! 1,080 மீட்டர் சுரங்கத்தைத் தோண்டி முடித்த 'குறிஞ்சி'... எங்கு தெரியுமா?
சென்னை மெட்ரோவில் புதிய சாதனை! 1,080 மீட்டர் சுரங்கத்தைத் தோண்டி முடித்த 'குறிஞ்சி'... எங்கு தெரியுமா?
"திருமணம் மீறிய உறவு" திடீரென பேசுவதை நிறுத்திய இளம்பெண் - வீடு புகுந்து இளைஞர் வெறிச் செயல்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manickam Tagore: நீங்களா நாங்களா பாத்துடுவோம்.. எந்த எல்லைக்கும் போக தயார்.. DK சிவக்குமாருக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி!
Manickam Tagore: நீங்களா நாங்களா பாத்துடுவோம்.. எந்த எல்லைக்கும் போக தயார்.. DK சிவக்குமாருக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி!
Karthigai Deepam:
Karthigai Deepam:" சாமுண்டீஸ்வரியை அடைஞ்சே தீரணும்..." வருங்கால மனைவியின் தோழி மீது ஆசைப்பட்ட யோகி! அடுத்து நடந்தது என்ன?
Cyclone Akwan: யூட்டன் அடித்து சென்னை பக்கம் திரும்பும் அக்வான் புயல்.. பேய் மழை கன்ஃபாம்.. அலறிவிடும் டெல்டா வெதர்மேன்!
Cyclone Akwan: யூட்டன் அடித்து சென்னை பக்கம் திரும்பும் அக்வான் புயல்.. பேய் மழை கன்ஃபாம்.. அலறிவிடும் டெல்டா வெதர்மேன்!
Gold Rate Today: சரசரவென சரிந்த தங்கம் விலை.. சவரன் ரூ.5,120 குறைந்தது.. 4 நாட்களில் தலைகீழாக மாறியது!
Gold Rate Today: சரசரவென சரிந்த தங்கம் விலை.. சவரன் ரூ.5,120 குறைந்தது.. 4 நாட்களில் தலைகீழாக மாறியது!
Toll Gate: வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! இனி டிராபிக் ஜாம் தொல்லையே இருக்காது! பரனூரைத் தொடர்ந்து நெமிலியிலும்!
Toll Gate: வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! இனி டிராபிக் ஜாம் தொல்லையே இருக்காது! பரனூரைத் தொடர்ந்து நெமிலியிலும்!
30 நிமிடப் பயணம் இனி 5 நிமிடம்! ரூ.621 கோடி மேம்பாலம் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் சொன்ன முக்கிய தேதி!
30 நிமிடப் பயணம் இனி 5 நிமிடம்! ரூ.621 கோடி மேம்பாலம் எப்போது திறக்கப்படும்? முக்கிய தேதி!
Tamil Nadu Weather: உஷார் மக்களே! உருவாகிறான் பேரரக்கன்! சூறாவளிக்காற்று! எங்கெல்லாம் மழை? மீனவர்களுக்கு வார்னிங்!
Tamil Nadu Weather: உஷார் மக்களே! உருவாகிறான் பேரரக்கன்! சூறாவளிக்காற்று! எங்கெல்லாம் மழை? மீனவர்களுக்கு வார்னிங்!
நிர்வாண போட்டோவிற்கு ஆசைப்பட்டு ராணுவ ரகசியங்களை பகிர்ந்த அதிகாரி! பாகிஸ்தான் உளவாளிக்கு இவ்வளவு மெசேஜா?
நிர்வாண போட்டோவிற்கு ஆசைப்பட்டு ராணுவ ரகசியங்களை பகிர்ந்த அதிகாரி! பாகிஸ்தான் உளவாளிக்கு இவ்வளவு மெசேஜா?
Embed widget