மேலும் அறிய

சென்னை பிசியோதெரபி மாணவிக்கு நேர்ந்த அதிர்ச்சி !! டாக்டர் கைது - நடந்தது என்ன ?

பயிற்சி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பிசியோதெரபி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

சென்னை பிசியோதெரபி மாணவிக்கு நேர்ந்த அதிர்ச்சி !! டாக்டர் கைது - நடந்தது என்ன ?

சென்னையைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் , கொளத்துார் மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் அளித்த புகாரில் ,

நான் தனியார் மருத்துவ கல்லுாரியில் பிசியோதெரபி படித்து வருகிறேன். பகுதி நேரமாக பெரம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட்டாக பணியாற்றி வருகிறேன். மருத்துவமனை உரிமையாளரான பெரவள்ளூரைச் சேர்ந்த பிசியோதெரபி டாக்டர் கார்த்திக் ( வயது 27 ) என்பவர் கொளத்துாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்ணுக்கு பிசியோதெரபி செய்ய வேண்டும் என நேற்று முன்தினம் என்னை அழைத்துச் சென்றார்.

அங்கு அவர் தந்த குளிர்பானத்தை குடித்ததும் நான் மயங்கினேன். விழித்து பார்த்த போது கார்த்திக் என்னிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டது தெரிந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து விசாரித்த போலீசார், கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆந்திராவில் இருந்து உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 70 லட்ச ரூபாய், தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்

சென்னை தண்டையார்பேட்டை வைத்திநாதன் பாலம் அணுகு சாலை அருகே கொருக்குப்பேட்டை போலீசார் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கையில் பைகளுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த நால்வரிடம் விசாரித்தனர். அவர்கள் போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசி, மிரட்டி, தப்பிக்க முயன்றனர். போலீசார் மடக்கி பிடித்து, பையை சோதனை செய்தனர்.

அதில் செய்தித் தாள்களால் சுற்றப்பட்ட, 500 ரூபாய் கட்டுகளாக, 70 லட்ச ரூபாய், 13.5 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளி நகைகள் இருந்தன. விசாரணையில், ஆந்திர மாநிலம் நெல்லுாரைச் சேர்ந்த அமர்தலரு வெங்கட சுரேஷ்பாபு ( வயது 68 ) பொன்னுரு வெங்கட கமல் ( வயது 35 ) துர்கி கோபி கிஷோர் ( வயது 60 ) பதான் பசியுல்லா கான் ( வயது 52 ) என்பது தெரிய வந்தது. போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர்.

விசாரணையில் , நெல்லுார் பெரிய மார்க்கெட்டில் நகைக்கடை வைத்துள்ள ஷ்ரேனியஸ் என்பவர், அமர்தலரு வெங்கட சுரேஷ்பாபுவிடம் சென்னை பிராட்வேயில் உள்ள அவருடைய தம்பி அதுல்பாயி என்பவரிடம் 60.70 லட்சம் ரூபாய் மற்றும் நகைகளை கொடுக்க வேண்டும் எனவும், அதற்கு, 9.50 லட்சம் ரூபாய் 'கமிஷன்' கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தன் நண்பர்கள் மூவரையும் அழைத்து கொண்டு அமர்தலரு வெங்கட சுரேஷ்பாபு சென்னை வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, மத்திய வருமான வரித்துறை அலுவலகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். நால்வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சென்னையில் இனி சாலையில் பள்ளம் வந்தால் ஒப்பந்ததாரர்கள்தான் பொறுப்பு! மாநகராட்சியின் புதிய அதிரடி!
சென்னை: இனி சாலையில் பள்ளம் வந்தால் ஒப்பந்ததாரர்கள்தான் பொறுப்பு! மாநகராட்சியின் புதிய அதிரடி!
" ஐ.டி ஊழியர்களுக்கு போதைப் பொருள் சப்ளை " 5 நாட்கள் காத்திருந்து தட்டித் தூக்கிய போலீஸ்
Gold Rate Today: சரசரவென சரிந்த தங்கம் விலை.. சவரன் ரூ.5,120 குறைந்தது.. 4 நாட்களில் தலைகீழாக மாறியது!
Gold Rate Today: சரசரவென சரிந்த தங்கம் விலை.. சவரன் ரூ.5,120 குறைந்தது.. 4 நாட்களில் தலைகீழாக மாறியது!
30 நிமிடப் பயணம் இனி 5 நிமிடம்! ரூ.621 கோடி மேம்பாலம் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் சொன்ன முக்கிய தேதி!
30 நிமிடப் பயணம் இனி 5 நிமிடம்! ரூ.621 கோடி மேம்பாலம் எப்போது திறக்கப்படும்? முக்கிய தேதி!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாகிஸ்தானை பந்தாடுமா இந்திய அணி! - இந்தியாவுக்கு 338 ரன்கள் இலக்கு
பாகிஸ்தானை பந்தாடுமா இந்திய அணி! - இந்தியாவுக்கு 338 ரன்கள் இலக்கு
காவிரி என்ன கர்நாடகாவுக்கு மட்டும் சொந்தமா? முதல்வர் விஜய் யார் உங்களுக்கு முக்கியம்? - டிஆர்பி ராஜா ஆவேசம்
காவிரி என்ன கர்நாடகாவுக்கு மட்டும் சொந்தமா? முதல்வர் விஜய் யார் உங்களுக்கு முக்கியம்? - டிஆர்பி ராஜா ஆவேசம்
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
பாலியல் குற்றச்சாட்டில் அடுத்தடுத்து சிக்கும் TVK நிர்வாகிகள்! உச்சகட்ட கோபத்தில் CM விஜய்! சாட்டையை சுழற்றுவாரா?
பாலியல் குற்றச்சாட்டில் அடுத்தடுத்து சிக்கும் TVK நிர்வாகிகள்! உச்சகட்ட கோபத்தில் CM விஜய்! சாட்டையை சுழற்றுவாரா?
"பஞ்ச் டயலாக பேசி ஆட்சி நடத்தும் டம்மி முதல்வர்" - காவல் மரணங்கள் தொடர்வதாக எதிர்க்கட்சித்தலைவர் விமர்சனம்!
U19 IND vs PAK: அப்துல் காதர் காட்டடி.. உஸ்மான் கான் மொரட்டு செஞ்சுரி! பாகிஸ்தான் பலே பேட்டிங்! இறுதிப்போட்டியில் வெல்லுமா இந்தியா?
U19 IND vs PAK: அப்துல் காதர் காட்டடி.. உஸ்மான் கான் மொரட்டு செஞ்சுரி! பாகிஸ்தான் பலே பேட்டிங்! இறுதிப்போட்டியில் வெல்லுமா இந்தியா?
2027 ஜனவரியில் புதிய ரயில் சேவை? திருச்சியில் ரூ.60 கோடியில் தயாராகும் பிரம்மாண்ட பணிமனை!
2027 ஜனவரியில் புதிய ரயில் சேவை? திருச்சியில் ரூ.60 கோடியில் தயாராகும் பிரம்மாண்ட பணிமனை!
Tanishq கொள்ளை: மதுரை இளைஞர் துணி எரித்த சிசிடிவி! நகைகள் பதுக்கினாரா?
Tanishq கொள்ளை: மதுரை இளைஞர் துணி எரித்த சிசிடிவி! நகைகள் பதுக்கினாரா?
Embed widget