மேலும் அறிய

சினேகன் கொடுத்த புகார்.. கமல்ஹாசனை குற்றம்சாட்டும் துணைநடிகை.. ஜெயலஷ்மி பேசியது என்ன?

Actress Jayalakshmi; பாடலாசிரியர் சினேகன் ஜெயலட்சுமி மீது அளித்துள்ள மோசடி புகாருக்கு பதில் அளிக்கையில் கமலஹாசனை திமுக விலைக்கு வாங்கிவிட்டது என பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார்.

 Actress Jayalakshmi; பாடலாசிரியர் சினேகன் ஜெயலட்சுமி மீது அளித்துள்ள மோசடி புகாருக்கு பதில் அளிக்கையில் கமலஹாசனை திமுக விலைக்கு வாங்கிவிட்டது என பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார். 

திரைப்பட பாடலாசிரியரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்ட சினேகன், சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி மீது மோசடி புகார் ஒன்றினை அளித்தார். காவல் ஆணையரகத்தில் புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சினேகன்(Snehan), "கடந்த 2015 ஆம் ஆண்டு சினேகம் ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை தொடங்கி நடத்தி வருகிறேன். அதன்மூலம் பலருக்கும் உதவிகள் செய்து வருகிறேன். அண்மையில் எனது நண்பர்கள் சிலர் அதிர்ச்சி தரும் விஷயத்தைச் சொன்னார்கள். நடிகை ஜெயலட்சுமி எனது அறக்கட்டளையின் பெயரில் சமூக வலைதளப் பக்கம், இணையதளப் பக்கம் தொடங்கி அதன் மூலம் நன்கொடை வசூலிப்பதாகக் கூறினார்கள். நான் அதிர்ச்சியடைந்தேன். அடுத்த சில நாட்களிலேயே வருமான வரித் துறையினர் என்னிடம் விசாரணை செய்தனர். எனது அறக்கட்டளை வரவு செலவுகளைக் கேட்டனர். அப்போது தான் ஜெயலட்சுமியின் அத்தனை மோசடியும் அம்பலமானது. இதனையடுத்து ஜெயலட்சுமியிடம் இரண்டு முறை விளக்கம் கேட்டும் எந்தப் பதிலும் வரவில்லை. எனவே இந்த விவகாரம் குறித்து சென்னை காவல்துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி புகார் கொடுத்துள்ளேன் என்றார்.

இதுகுறித்து சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், நான் நடத்திவரும் அறக்கட்டளைக்கு பதிவு எண், நீதிமன்ற அங்கீகாரம் என அனைத்து பதிவுப் பத்திரங்களும் எங்களிடத்தில் சரியாக உள்ளது. அப்படி இருக்கையில் நாங்கள் ஏன் மோசடி செய்ய வேண்டும். மேலும், நாங்கள் எங்கள் அறக்கட்டளை சார்பில் செய்து வரும் அனைத்து நற்பணிகளையும் சமூக வலைதளத்தில் பதுவிட்டு வருகிறோம். ஆனால், சினேகன் எங்கள் மீது வேண்டுமென்றே எங்களின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் நோக்கில் புகார் அளித்துள்ளார். மேலும், அவர் கூறியிருப்பது, நான் தனிமையில் அமர்ந்து பேசி அறக்கட்டளைக்கு நன்கொடை வசூலிப்பதாக கூறியிருக்கிறார். அவரும் ஒரு அறக்கட்டளை நடத்துகிறார் அவரும் அப்படி தன் வீட்டுப் பெண்களை தனிமையில் அமரவைத்து பேசி தான் நன்கொடை வசூலிக்கிறாரா என கேள்வியும் கேட்டுள்ளார். சினேகனின் இந்த செயலுக்கு  பின்னால் திமுக இருப்பதாக கூறுகிறார். கமலஹாசனை திமுக விலைக்கு வாங்கிவிட்டது, திமுகவும் மக்கள் நீதி மய்யமும் தற்போது ஒன்று தான். திமுக அதிக பணம் கொடுத்து தொடர்ந்து தங்களது நிறுவனத்தில் கமலஹாசனை நடிக்க வைத்துக் கொண்டு இருக்கிறது என அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

இயற்கைக்கு எதிரான மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தை கைவிடுக: தமிழக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
இயற்கைக்கு எதிரான மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தை கைவிடுக: தமிழக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
"மக்களுக்கு பிரச்சனைன்னா ஓடோடி வரணும் " ஆட்சியருக்கு JCD பிரபாகர் அதிரடி உத்தரவு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
Embed widget