மேலும் அறிய

வாகன ஓட்டிகளே உஷார் ; சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

பாகிஸ்தானின் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து காவல் ஆணையரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் , 

பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய இராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இன்று (10.05.2025) மாலை 5.00 மணிக்கு பேரணி நடைபெறுகிறது.

இப்பேரணி காமராஜர் சாலையில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திலிருந்து தொடங்கி , நேப்பியர் பாலம் அருகிலுள்ள போர் நினைவுச் சின்னம் வரை நடைபெறுகிறது. இப்பேரணியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், முன்னாள் படை வீரர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என சுமார் 25,000 நபர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் மாலை 16.00 மணி முதல் 18.00 மணி வரை செயல்படுத்தப்படும்.

போக்குவரத்து மாற்றங்கள்

1. திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிஸை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக , அவர்கள் தங்கள் இலக்கை அடைய சர்தார் படேல் சாலை காந்தி மண்டபம் சாலை அண்ணா சாலையைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதேபோல், பாரிஸில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக, அவர்கள் தங்களுடைய இலக்கை அடைய அண்ணாசாலை தேனாம்பேட்டை காந்தி மண்டபம் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

2. அண்ணா சிலையிலிருந்து வரும் MTC பேருந்துகள் வெலிங்டன் சந்திப்பு → ஜிபி சாலை→ டவர் கிளாக்ஜிஆர்எச் பாயிண்ட் ராயப்பேட்டை ஹை ரோடு → லாயிட்ஸ் சாலை ஜம்புலிங்கம் தெரு ஆர்.கே.சாலை வி.எம். தெரு, மந்தைவெளி மயிலாப்பூர் வழியாக சென்று மத்திய கைலாஷ் சந்திப்பை அடையலாம்.

3. இதே போல் கிரீன்வேஸ் பாயிண்டில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி R.A.புரம் 2வது பிரதான சாலை, TTK சாலை, RK சாலை, அண்ணாசாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

4. வணிக வாகனங்கள் காமராஜர் சாலை, அண்ணாசாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆர்.கே.சாலை, கதிட்ரல் சாலை, வாலாஜா சாலையில் 1200 மணி முதல் 2100 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.

வாகன நிறுத்தத்திற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் :

1. காந்தி சிலை அருகாமையில் காமராஜர் சாலையில் பங்கேற்பாளர்களை இறக்கி விடும் அனைத்து வாகனங்களும், சுவாமி சிவானந்த சாலை, தீவுத்திடல் மைதானம், ராணி மேரி கல்லூரி, மெரினா சர்வீஸ் சாலை, லூப் சாலை, லேடி வெல்லிங்டன் கல்லூரி, ஸ்கௌட் மைதானம் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2. பங்கேற்பாளர்களுக்காக பொதுப்பணித்துறை மைதானத்தில் கூடுதல் வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

3. விஜபி வாகனங்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த கொடிமர இல்ல சாலை வழியாக தீவுத்திடல் மைதானத்திற்குள் நுழையலாம்.

4. பொது வாகன ஓட்டிகள் காமராஜர் சாலையைத் தவிர்த்து மாற்றுப் பாதையில் தங்கள் பயணத்தை திட்டமிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

GST Highway Smart Lighting: தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
ஜேகே ஃபிசியோ & ரீஹாப் கிளினிக்ஸ் நரம்பியல், எலும்பியல் மறுவாழ்வின் ஒரு புதிய சகாப்தம்
ஜேகே ஃபிசியோ & ரீஹாப் கிளினிக்ஸ் நரம்பியல், எலும்பியல் மறுவாழ்வின் ஒரு புதிய சகாப்தம்
வண்டலூரில் சனிக்கிழமை சர்ப்ரைஸ்! கையில் வண்ணத்துப்பூச்சியோடு போட்டோ எடுக்க சூப்பர் வாய்ப்பு – பூங்கா நிர்வாகம் அழைப்பு!
வண்டலூரில் சனிக்கிழமை சர்ப்ரைஸ்! கையில் வண்ணத்துப்பூச்சியோடு போட்டோ எடுக்க சூப்பர் வாய்ப்பு – பூங்கா நிர்வாகம் அழைப்பு!
15 ஆண்டுகளுக்குப் பின் ஓகே சொன்ன ரயில்வே வாரியம்! இனி சென்னை மெட்ரோ வசமாகும் பறக்கும் ரயில்!
15 ஆண்டுகளுக்குப் பின் ஓகே சொன்ன ரயில்வே வாரியம்! இனி சென்னை மெட்ரோ வசமாகும் பறக்கும் ரயில்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
Embed widget