மேலும் அறிய

பத்திர எண் ரத்து: அதிகாரிகள் அலட்சியம்! காணாமல் போனதா கோப்புகள்? பரபரப்பு விசாரணை

கோப்புகள், ஆவணங்கள் அனைத்தும் மிக்ஜாம் புயலில் காணாமல் போனதாக கூறிய சார்- பதிவாளர் பதிலால் தகவல் ஆணையம் அதிர்ச்சி.

பத்திர எண் ரத்து 

சென்னை மாடம்பாக்கம் அடுத்த பதுவஞ்சேரியைச் சேர்ந்தவர் புகழ்பாலன். இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த 2023 ஏப்ரல் மாதம் வழங்கிய மனுவில் குறிப்பிட்ட பத்திர எண் ரத்து செய்ததற்கான காரணம் உள்ளிட்ட நான்கு இனங்களில் தகவல்களை கோரியுள்ளார். இது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில், முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டது.

அதில் , மனுதாரர் மனுக்களுக்கு அப்போதைய பொது தகவல் அலுவலரும் தற்போதைய புதுக்கோட்டை மாவட்ட பதிவாளருமான ரஜினிகாந்த் மற்றும் அப்போதைய மேல்முறையீட்டு அலுவலரும், தற்போதைய திண்டுக்கல் மாவட்ட உதவி பதிவுத்துறை தலைவருமான மகேஷ் ஆகியோர், எவ்வித தகவல்களையும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

எனவே, அவர்கள் மீது ஏன் நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்பதற்கான காரண விளக்கத்தை, 15 தினங்களுக்குள் ஆணையத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அடுத்தக் கட்ட விசாரணையில், மனு தாரர் கூறுகையில் ;

கடந்த 2021 செப்டம்பர் மாதம் மற்றும் 2022 மார்ச் மாதம் அளித்த மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரங்கள், இதுவரை அளிக்கப்படவில்லை என்றார்.

அதற்கு, பொதுத் தகவல் அலுவலர் கூறிய பதிலில், மனுதாரர் கோரிய கோப்புகள் மற்றும் ஆவணங்கள் மிக்ஜாம் புயலின்போது முழுமையாக காணாமல் போய் விட்டன. அலுவலகத்தில் கோப்புகள் எதுவும் பராமரிப்பில் இல்லை என தெரிவித்தார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாநில தலைமை ஆணையர் தகவல் முகம்மது ஷகீல் அக்தர் பிறப்பித்த உத்தரவு ; 

மனுதாரர் குறிப்பிட்ட , மனு நகல்களை மீண்டும் பொதுத் தகவல் அலுவலரிடம் அளிக்க வேண்டும். அவற்றை பெற்றுக் கொண்ட பின் , சட்டப்படியான நடவடிக்கை எடுத்து அதுகுறித்த அறிக்கையை மூன்று மாத காலத்திற்குள் வழங்க வேண்டும்.

அதே போல், தற்போதைய பொதுத் தகவல் அலுவலர், மேற்சொன்ன அலுவலர்கள் ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ஆகியோரிடம் , காரண விளக்கத்தைப் பெற்று, அடுத்த மாதம் 6 - ம் தேதிக்குள் ஆணையத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Chennai power cut: சென்னையில் நாளை (03-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
சென்னையில் நாளை (03-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Embed widget