மேலும் அறிய
Advertisement
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீ விபத்து: மின் கசிவு என முதற்கட்ட விசாரணையில் தகவல்!
திடீரென அட்மினிஸ்ட்ரேஷன் A பிளாக் பகுதியில் மின்சார அறையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் உள்நோயாளிகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் , திடீரென அட்மினிஸ்ட்ரேஷன் A பிளாக் பகுதியில் மின்சார அறையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த தகவலின் அடிப்படையில் வண்ணாரப்பேட்டை மற்றும் ராயபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வண்ணாரப்பேட்டை தீயணைப்பு படையினர் 20 க்கும் மேற்பட்ட இரண்டு வண்டிகளில் விரைந்து வந்து 30 க்கும் மேற்பட்ட தீயணைப்பான் கருவி மூலம் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் போராடி தீயை கட்டுக்குள் வந்தனர். துரித நடவடிக்கை எடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது சம்பந்தமாக வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திடீர் தீ விபத்து காரணமாக சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் திடீரென பதட்டம் அடைந்தனர். இருப்பினும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் துரிதமாக செயல்பட்ட மீட்பு படையினர் சேதாரம் எதுவும் இன்றி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும் முக்கிய விளையாட்டுச் செய்திகள் சில...
DHONI SPEECH : "கடந்த முறை ப்ளே ஆப்பிற்கு தகுதி பெறாதது கடினமாக இருந்தது" - வெற்றிக்கு பிறகு தோனி உருக்கம்#Dhoni #IPL2021 #CSK https://t.co/KTGaISwEOp
— ABP Nadu (@abpnadu) October 10, 2021
CELEBRITIES ON DHONI : "..தி கிங் இஸ் பேக்.." : விராட் கோலி முதல் லோகேஷ் கனகராஜ் வரை - தோனியை கொண்டாடும் பிரபலங்கள்#dhoni #CSKvDC #IPL2021 #ViratKohli https://t.co/dNsop54maC
— ABP Nadu (@abpnadu) October 10, 2021
CHENNAI IN IPL FINAL : 9வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை : மாஸ் காட்டிய "தல" தோனி#IPL #CSKvDC #CSKvsDC #ChennaiSuperKings https://t.co/AzfRLhDuKs
— ABP Nadu (@abpnadu) October 10, 2021
#IPL2021 | தல எப்போவும் தல தான்!
— ABP Nadu (@abpnadu) October 10, 2021
9வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை..https://t.co/wupaoCQKa2 | #CSKvDC | #DCvCSK | #DC | #CSK | #DelhiCapitals | #ChennaiSuperKings | #MSDhoni pic.twitter.com/9VsjiyLXNA
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion