மேலும் அறிய

சென்னை ; வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் !! கஞ்சா விற்பனை கும்பல் கைது

எம்.கே.பி நகர் பகுதியில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய நபர் கைது.

சென்னையில் வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்திய கும்பல்

சென்னை காவல் விபச்சார தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் , காவல் குழுவினர் எம்.கே.பி. நகர், 16 - வது குறுக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்த போது , அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவது உறுதி செய்யப்பட்டது.

அதன் பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் சோதனை செய்து, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய ஃபராபி காஸி ( வயது 27 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு தங்க வைத்திருந்த 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.

விசாரணையில் இவ்வழக்கில் தொடர்புடைய நபர் வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தியது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட ஃபராபி காஸி விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

புளியந்தோப்பு பகுதியில் சட்ட விரோதமாக உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த 8 நபர்கள் கைது. 110  உடல்வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 2.6 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை புளியந்தோப்பு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர், புளியந்தோப்பு சாஸ்திரி நகர், 13 - வது தெருவில் கண்காணிப்பு பணியில் இருந்த போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 8 நபர்களை விசாரணை செய்து, அவர்களை சோதனை செய்துள்ளனர்.

சோதனையின் போது அவர்கள் உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் கஞ்சா போதைப் பொருளை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
அதன் பேரில் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, சட்ட விரோதமாக உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் கஞ்சா வைத்திருந்த சுகுனேஷ் ( வயது 23 ) , சூர்யா ( வயது 23 ) , எடிசன் ( வயது 25 ) , சிவலிங்கம் ( வயது 21 ) , பரத் ( வயது 25 ) , கார்த்திக் ( வயது 22 ) , அரவிந்த் ( வயது 25 ) , P.பரத் ( வயது 20 ) ஆகிய 8 நபர்களை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 110 எண்ணிக்கைகள் கொண்ட Tydol உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 2.6 கிலோ கஞ்சா மற்றும் 5 சிரிஞ்சுகள் ஆகியவை  பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் ஏற்கனவே சுகுனேஷ் மீது 6 குற்ற வழக்குகளும், சூர்யா மீது 3 குற்ற வழக்குகளும், சிவலிங்கம் மீது 1 வழக்கும் மற்றும் கார்த்திக் மீது 4 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 8 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தலைப்பு செய்திகள்

காதலனுடன் போனில் பேசிக் கொண்டே விடுதி மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை
காதலனுடன் போனில் பேசிக் கொண்டே விடுதி மாடியிலிருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை
தாயின் பேச்சை மீறி காதலனுடன் சென்ற மகள் !! அதிர்ச்சியில் தாய் எடுத்த கொடூர முடிவு
தாயின் பேச்சை மீறி காதலனுடன் சென்ற மகள் !! அதிர்ச்சியில் தாய் எடுத்த கொடூர முடிவு
கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 3 வது கணவர் கொலை !! நாடகமாடிய மனைவி சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 3 வது கணவர் கொலை !! நாடகமாடிய மனைவி சிக்கியது எப்படி ?
சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் ரத்து ; மாநகர போக்குவரத்து கழகத்தின் அதிரடி ஏற்பாடு !!
சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் ரத்து ; மாநகர போக்குவரத்து கழகத்தின் அதிரடி ஏற்பாடு !!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
Iran Vs Trump: 'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
Renault Kwid New Vs Old: புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
Embed widget