மேலும் அறிய

" திருமணம் ஆனாலும் பரவாயில்லை என் கூட வந்துடு " அறை எண் 109 - ல் நடந்தது என்ன ?

நர்சிங் மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த முன்னாள் காதலன், அதே அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை

தனியார் மருத்துவ கல்லூரி நர்சிங் மாணவி

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவ்யா ( வயது 21 ) இவர், சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சிங் படித்து வந்தார். பவ்யாவின் மொபைல் போன் எண்ணிற்கு நேற்று முன்தினம் முதல் பெற்றோர் பலமுறை தொடர்பு கொண்டும் இணைப்பை ஏற்கவில்லை. சந்தேகமடைந்த அவரது பெற்றோர், சென்னை காவல் துறையின் உதவியை நாடினர்.

போலீசார் மொபைல் போன் டவரை ஆய்வு செய்ததில் பெரியமேடு, குமாரப்பா தெருவில் உள்ள எஸ்.ஆர்.எம் சென்ட்ரல் தங்கும் விடுதியை காண்பித்துள்ளது. அங்கு சென்ற போலீசார், விடுதி வரவேற்பு அறையில் உள்ள பதிவேட்டை ஆய்வு செய்தனர். இதில், சென்னை, ராமாபுரத்தைச் சேர்ந்த பாரதி பெருமாள், 21 என்பவருடன் பவ்யா அறை எண் 109 - ல் தங்கியிருப்பது தெரிய வந்தது.

கொலை செய்யப்பட்ட நிலையில் இருந்த பெண்

அறைக்கு சென்ற போலீசார் கதவை வெகுநேரம் தட்டியும் திறக்கப்படவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, பவ்யாவை கழுத்து மற்றும் வலது கை மணிக்கட்டில் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

பாரதி பெருமாள் துாக்கிட்டு தற்கொலை செய்ததும் தெரிய வந்தது. இருவரது உடலையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இருவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து பெரியமேடு போலீசார் தெரிவித்ததாவது ;

பவ்யா நர்சிங் படிக்கும் போது பாரதி பெருமாளை காதலித்து வந்துள்ளார். அவர் வேறு ஒரு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால், காதலுக்கு பவ்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

பெற்றோரின் வற்புறுத்தலால், நான்கு மாதத்திற்கு முன் பவ்யா வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். இருப்பினும் மொபைல் போனில் இருவரும் பேசி வந்துள்ளனர். பவ்யாவை மறக்க முடியாத பாரதி பெருமாள், அவரை விடுதிக்கு வரவழைத்து, திருமணமானாலும் பரவாயில்லை என்னுடன் வந்துவிடு என வற்புறுத்தி உள்ளார். அவர் மறுக்கவே, பவ்யாவை கொலை செய்து, பாரதி பெருமாள் தற்கொலை செய்துள்ளார் என இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்

தலைப்பு செய்திகள்

மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!
மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
ரூ.2,229 கோடியில் மெகா ரயில்வே திட்டம்! கும்மிடிப்பூண்டி மக்களுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் என்னென்ன?
ரூ.2,229 கோடியில் மெகா ரயில்வே திட்டம்! மக்களுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் என்னென்ன?
Coastal Cruise Tourism: கடலுக்குள் மிதக்கும் சொகுசு நகரம்! சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை! தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு!
கடலுக்குள் மிதக்கும் சொகுசு நகரம்! சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை! தமிழக அரசின் அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget